ஹோண்டா ஃபோர்ஸா 750 மேக்ஸி ஸ்கூட்டரின் 2வது டீசர் வெளியீடு... இன்னும் சில நாட்களில் உலகளவில் அறிமுகம்

விரைவில் அறிமுகமாகவுள்ள ஃபோர்ஸா 750 மேக்ஸி ஸ்கூட்டரின் இரண்டாவது டீசர் வீடியோவை ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டா ஃபோர்ஸா 750 மேக்ஸி ஸ்கூட்டரின் 2வது டீசர் வெளியீடு... இன்னும் சில நாட்களில் உலகளவில் அறிமுகம்

புதிய ஹோண்டா ஃபோர்ஸா 750 ஸ்கூட்டர் மாடலை பற்றிய முழு விபரங்கள் வருகிற அக்.14ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில் தற்போது இதன் இரண்டாவது டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

கூர்மையான முனைகள் மற்றும் மாடர்ன் தோற்றத்திலான மெஷின்களுடன் ஸ்போர்டியான மற்றும் பெரிய உருவம் கொண்ட ஸ்கூட்டர் ஒன்று ஹோண்டா ஃபோர்ஸா குடும்பத்தில் இணையவுள்ளது என்பது மட்டும் தெளிவாகிறது.

ஹோண்டா ஃபோர்ஸா 750 மேக்ஸி ஸ்கூட்டரின் 2வது டீசர் வெளியீடு... இன்னும் சில நாட்களில் உலகளவில் அறிமுகம்

ஹோண்டாவின் இந்த புதிய மேக்ஸி ஸ்கூட்டரில் சாவி இல்லா துவக்கம், எல்இடி விளக்குகள், முழு வண்ண நிறங்களில் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஸ்விட்ச் செய்யக்கூடிய ரைடிங் மோட்கள் மற்றும் கழுத்து பகுதியில் வரைபடங்கள் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக எதிர்பார்க்கப்படுகின்றன.

ஹோண்டா ஃபோர்ஸா 750 மேக்ஸி ஸ்கூட்டரின் 2வது டீசர் வெளியீடு... இன்னும் சில நாட்களில் உலகளவில் அறிமுகம்

இவற்றுடன் ஹோண்டா தேர்ந்தெடுக்கும் டார்க் கண்ட்ரோல் சிஸ்டம், என்ஜின் பவர் மற்றும் என்ஜின் ப்ரேக்கிங் உள்ளிட்டவை அடங்கிய ஹோண்டாவின் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டமும் இந்த ஸ்கூட்டரில் இருக்கும். புதிய ஹோண்டா ஃபோர்ஸா 750 ஹோண்டா எக்ஸ்-அட்வான்ஸ்டு ஸ்கூட்டரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

ஹோண்டா ஃபோர்ஸா 750 மேக்ஸி ஸ்கூட்டரின் 2வது டீசர் வெளியீடு... இன்னும் சில நாட்களில் உலகளவில் அறிமுகம்

இதனால் ஒரே டிசிடி (ட்யூல்-க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன்) ஆட்டோமேட்டிக் செட்-அப்பை மட்டும் இந்த 750சிசி ஸ்கூட்டர் பெற்றுவரலாம். மேலும் ஐரோப்பாவில் விற்பனையில் உள்ள ஹோண்டா இண்டெக்ரா ஸ்கூட்டருக்கு மாற்றாக புதிய ஃபோர்ஸா 750 அங்கு விற்பனைக்கு செல்லவுள்ளது.

ஹோண்டா ஃபோர்ஸா 750 மேக்ஸி ஸ்கூட்டரின் 2வது டீசர் வெளியீடு... இன்னும் சில நாட்களில் உலகளவில் அறிமுகம்

மற்றப்படி இந்த மேக்ஸி-ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே. ஏனெனில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் அதன் ஃபோர்ஸா மேக்ஸி ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்தது இல்லை.

ஹோண்டா ஃபோர்ஸா 750 மேக்ஸி ஸ்கூட்டரின் 2வது டீசர் வெளியீடு... இன்னும் சில நாட்களில் உலகளவில் அறிமுகம்

ஹோண்டா ஃபோர்ஸா 125 மற்றும் ஃபோர்ஸா 300 ஸ்கூட்டர்கள் மட்டும் மிகவும் குறிப்பிட்ட எண்ணிக்கைகளில் இந்தியாவில் விற்பனை கொண்டுவர ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இருப்பினும் இவற்றின் வருகையும் அடுத்த வருடத்தில்தான் இருக்கும்.

Most Read Articles

English summary
Honda Forza 750 Revealed In Second Teaser Video
Story first published: Tuesday, October 6, 2020, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X