Just In
- 4 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 5 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 6 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 7 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முன்பதிவு அடுத்த சில நாட்களில் பைக் வீட்டில் இருக்கும்!! ஹைனெஸ் 350 பைக்கின் டெலிவிரியில் அசத்தும் ஹோண்டா!
ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கிற்கான காத்திருப்பு காலம் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த 2020ஆம் வருடத்தில் நடந்த எதிர்பாராத அறிமுகங்களில் ஹோண்டா ஹைனெஸ் 350 பைக்கின் அறிமுகமும் ஒன்று எனலாம். இந்திய இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் ஹோண்டாவின் இந்த 350சிசி மோட்டார்சைக்கிள் இதுவரையில் மட்டுமே 4000 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வளவு வேகமாக வாடிக்கையாளர்களை பெற்றுவரும் புதிய ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் தற்சமயம் ஹோண்டாவின் பிக்விங் ஷோரூம்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சிபி350 பைக்கின் அறிமுகத்தின்போது பிக்விங் ஷோரூம்களின் எண்ண்க்கை வெறும் 5 ஐந்தாக இருந்தது.

ஆனால் ஹைனெஸ் பைக்கிற்கு வரவேற்பு அதிகரிப்பதை தொடர்ந்து இந்த ஷோரூம்களின் எண்ணிக்கையை ஹோண்டா நிறுவனம் அதிகரித்துள்ளது. ஹோண்டா நிறுவனம் இந்த 350சிசி பைக்கை ராயல் என்பீல்டின் சமீபத்திய அறிமுகமான மீட்டியோர் 350க்கு போட்டியாக களமிறக்கியுள்ளது.

மீட்டியோர் 350 பைக்கை முன்பதிவு செய்தவர்களுக்கான காத்திருப்பு காலம் 4 மாதங்கள் வரையில் தற்சமயம் உள்ளது. ஆனால் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் முன்பதிவு செய்யப்பட்டதற்கு மிக மிக விரைவாகவே டெலிவிரி செய்யப்பட்டு விடுகிறது.

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் ஹோண்டாவின் புதிய 350சிசி பைக்கிற்கு செல்வதற்கு காரணங்களுள் இதுவும் ஒன்று. ஏனெனில் இளைஞர்களின் ஆர்வத்தை குறைக்காமல் அவர்கள் எதிர்பார்ப்பதற்கு உள்ளாகவே சிபி350 பைக்கை பிக்விங் டீலர்ஷிப்கள் வீட்டிற்கு அனுப்பிவிடுகின்றன.

இந்த ஹோண்டா பைக்கின் டிஎல்எக்ஸ் ப்ரோ வேரியண்ட்டை நீலத்துடன் இரட்டை நிறத்தில் வாங்குபவர்கள் மட்டுமே அதிகப்பட்சமாக 1 மாதம் வரையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதுவும் வெறும் ஒரு மாதம்தான்.

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கில் 348சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் 5-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 21 பிஎச்பி மற்றும் 30 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.

முழு-எல்இடி விளக்குகள், ஹசார்ட் விளக்குகள், ஹோண்டா செலக்டபிள் டார்க் கண்ட்ரோல் மற்றும் ஹோண்டாவின் ப்ளூடூத் ஸ்மார்ட்போன் குரல் கட்டுப்பாட்டு தொழிற்நுட்பத்தை ஸ்லிப் & அசிஸ்ட் க்ளட்ச் உடன் வழங்கப்படுகின்ற ஹைனெஸ் சிபி350 பைக்கின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.85 லட்சமாக உள்ளது.