ஹோண்டாவின் 2021 சிஆர்எஃப்250எல் & சிஆர்எஃப்250எல் ராலி பைக்குகள்!! பார்ப்பதற்கே தாறுமாறாக உள்ளனவே

2021ஆம் ஆண்டிற்கான சிஆர்எஃப்250எல் மற்றும் சிஆர்எஃப்250எல் ராலி என்ற புதிய பைக் மாடல்களை பற்றிய விபரங்களை ஹோண்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டாவின் 2021 சிஆர்எஃப்250எல் & சிஆர்எஃப்250எல் ராலி பைக்குகள்!! பார்ப்பதற்கே தாறுமாறாக உள்ளனவே

அட்வென்ஜெர் மற்றும் சாலை என இரு விதமான பயன்பாட்டிற்கும் உபயோகப்படுத்த வகையிலான இந்த இரு 250சிசி பைக்குகளிலும் 2021ஆம் ஆண்டிற்கான அப்கிரேட்களை தோற்றத்தில் மட்டுமில்லாமல் என்ஜினிலும் ஹோண்டா நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

ஹோண்டாவின் 2021 சிஆர்எஃப்250எல் & சிஆர்எஃப்250எல் ராலி பைக்குகள்!! பார்ப்பதற்கே தாறுமாறாக உள்ளனவே

இந்த வகையில் புதிய எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி பிளிங்கர்ஸ் உடன் ஹோண்டா சிஆர்எஃப்450ஆர் காம்பெடிஷன் மோட்டோக்ராஸின் என்ஜினின் வடிவத்திலான என்ஜினை இந்த இரு பைக்குகளும் பெற்றுள்ளன. ராலி மாடல் மட்டும் கூடுதலாக பெரிய விண்ட்ஸ்க்ரீனை பெற்றுள்ளது.

ஹோண்டாவின் 2021 சிஆர்எஃப்250எல் & சிஆர்எஃப்250எல் ராலி பைக்குகள்!! பார்ப்பதற்கே தாறுமாறாக உள்ளனவே

எக்ஸ்ட்ரீம் சிவப்பு நிறத்தில் பெயிண்டை பெற்றுள்ள இரு சிஆர்எஃப்250எல் பைக்குகளிலும் 249சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு, டிஒஎச்சி என்ஜின் பொருத்தப்படவுள்ளது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 9,000 ஆர்பிஎம்-ல் 24 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-ல் 23 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

ஹோண்டாவின் 2021 சிஆர்எஃப்250எல் & சிஆர்எஃப்250எல் ராலி பைக்குகள்!! பார்ப்பதற்கே தாறுமாறாக உள்ளனவே

இந்த என்ஜின் அமைப்பில் இண்டேக் சைடில் காம்ஷாஃப்ட் மாற்றத்தை கொண்டுவந்து இண்டேக் வால்வு டைமிங்கை ஹோண்டா நிறுவனம் மாற்றியமைத்துள்ளது. இதுமட்டுமின்றி புதிய டிசைனில் காற்று சுத்திகரிப்பான், எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் மஃப்லரையும் இண்டேக் மற்றும் எக்ஸாஸ்ட் செயல்திறனை மேம்படுத்த இந்த புதிய மாடல்களில் ஹோண்டா நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

ஹோண்டாவின் 2021 சிஆர்எஃப்250எல் & சிஆர்எஃப்250எல் ராலி பைக்குகள்!! பார்ப்பதற்கே தாறுமாறாக உள்ளனவே

அதேபோல் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் புதிய ஸ்லிப்பர் க்ளட்ச் மூலமாக சில நன்மைகளை பெற்றுள்ளது. என்ஜின் புதியதாக வடிவமைக்கப்பட்ட ஃப்ரேம்மில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தரையில் இருந்து என்ஜினின் உயரம் 20மிமீ உயர்ந்துள்ளது.

க்ரான்க்கேஸின் வடிவம் மாற்றப்பட்டதாலும், என்ஜினிற்கு அடியில் வடிகால் கொண்டுவரப்பட்டதாலும், க்ரவுண்ட் கிளியரென்ஸ் 30மிமீ வரையில் உயர்ந்துள்ளது. இவற்றுடன் சஸ்பென்ஷன் அமைப்பும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டாவின் 2021 சிஆர்எஃப்250எல் & சிஆர்எஃப்250எல் ராலி பைக்குகள்!! பார்ப்பதற்கே தாறுமாறாக உள்ளனவே

சிஆர்எஃப்250எல் மோட்டார்சைக்கிள் முன்பக்கத்தில் 10மிமீ-லும் பின்பக்கத்தில் 20மிமீ-லும் உயர்த்தப்பட்ட ட்ராவலை சஸ்பென்ஷன் அமைப்பாக பெற்றுள்ளது. சஸ்பென்ஷனிற்கு இந்த இரு ஹோண்டா பைக் மாடல்களும் தலைக்கீழான டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளை முன்புறத்திலும், மோனோ-ஷாக்கை பின்பக்கத்திலும் ஏற்றுள்ளன.

ப்ரேக்கிங் பணியினை கவனிக்க இரு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் டிஸ்க்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் பாதுகாப்பிற்கு ட்யுல்-சேனல் ஏபிஎஸ்-உம் இரு மோட்டார்சைக்கிள்களிலும் வழங்கப்படவுள்ளது. இந்திய சந்தையில் இந்த இரு பைக்குகளும் அறிமுகமாகுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே.

Most Read Articles

English summary
2021 Honda CRF250L revealed. The changes include both mechanical and visual to the motorcycles.
Story first published: Monday, November 16, 2020, 15:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X