Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 3 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 4 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 5 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இத்தனை லட்சம் பேரின் வீடுகளில் இருக்கா? பொங்கலுக்கு நாமும் ஒரு ஹோண்டா ஷைன் பைக்கை வாங்கிட வேண்டியதுதான்...
ஹோண்டா ஷைன் மோட்டார்சைக்கிள் விற்பனையில் பிரம்மாண்ட சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் 90 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை ஷைன் 125 சிசி கம்யூட்டர் பைக் கடந்துள்ளதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இன்று (டிசம்பர் 23) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த பிரம்மாண்ட சாதனையை படைப்பதற்கு ஹோண்டா ஷைன் 14 ஆண்டுகளை எடுத்து கொண்டுள்ளது.

இந்திய சந்தையில் ஹோண்டா ஷைன் பைக் கடந்த 2006ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனைக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 125 சிசி மோட்டார்சைக்கிளாக ஷைன் உருவெடுத்தது என ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்த காரணத்தால், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 54 மாதங்களில் 10 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை ஹோண்டா ஷைன் கடந்தது. இதன்பின் 30 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை ஹோண்டா ஷைன் கடந்த 2014ம் ஆண்டு கடந்தது.

அதன்பின் வந்த ஆண்டுகளிலும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து ஹோண்டா ஷைன், 50 லட்சம் யூனிட்கள் என்ற விற்பனை மைல்கல்லை கடந்த முதல் 125 சிசி மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை கடந்த 2017ம் ஆண்டு பெற்றது. இதன்பின் 70 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை கடந்த 2018ம் ஆண்டு ஹோண்டா ஷைன் கடந்தது.

இந்த வரிசையில் தற்போது 90 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை கடந்த பிரம்மாண்ட சாதனையை ஹோண்டா ஷைன் படைத்துள்ளது. இவ்வளவு ஆண்டுகளை கடந்த பின்பும் கூட இன்னமும் ஹோண்டா ஷைன் மோட்டார்சைக்கிளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு சற்றும் குறையவில்லை.

கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் ஹோண்டா நிறுவனம் 75,144 ஷைன் பைக்குகளை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 94,413 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விற்பனையில் சுமார் 26 சதவீத வளர்ச்சியை ஹோண்டா ஷைன் பதிவு செய்துள்ளது. இந்த இரட்டை இலக்க விற்பனை வளர்ச்சி உண்மையிலேயே மிகவும் சிறப்பானது.

வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்பவும், அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், ஷைன் மோட்டார்சைக்கிளை ஹோண்டா நிறுவனம் தொடர்ச்சியாக மேம்படுத்தி கொண்டே வருவதுதான் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு முக்கியமான காரணமாக உள்ளது. ஹோண்டா நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய தொழில்நுட்பங்களையும், வசதிகளையும் ஷைன் பைக்கில் வழங்கி வருகிறது.

ஒரு மோட்டார்சைக்கிள் 90 லட்சம் வாடிக்கையாளர்களின் இல்லங்களை சென்றடைவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றால் மட்டுமே அது சாத்தியம். ஹோண்டா ஷைன் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை எந்தளவிற்கு பெற்றுள்ளது என்பதை இந்த சாதனையின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிய பைக்கை நீங்கள் வாங்க திட்டமிட்டிருந்தால், ஹோண்டா ஷைன் பைக்கை பரிசீலனை செய்யலாம். இது பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் என்பதுடன், உங்கள் பயணங்களில் உற்ற தோழனாவும் இருக்கும். ஷைன் தவிர ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டரும் இந்திய வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.