யூரோ 5 விதிமுறைகளுக்கு தயாராகும் ஹோண்டா - 2021 சிஆர்எஃப்300எல் & சிஆர்எஃப்300 ராலி பைக்குகள் வெளியீடு

சர்வதேச நாட்டு சந்தைகளுக்கான 2021 சிஆர்எஃப்300எல், சிஆர்எஃப்300 ராலி மோட்டார்சைக்கிள்களை ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

யூரோ 5 விதிமுறைகளுக்கு தயாராகும் ஹோண்டா - 2021 சிஆர்எஃப்300எல் & சிஆர்எஃப்300 ராலி பைக்குகள் வெளியீடு

ஐரோப்பாவில் யூரோ5 மாசு உமிழ்வு விதிமுறைகள் வருகிற 2021 ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதனால் அங்கு தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வரும் அனைத்து நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளை அப்கிரேட் செய்து வருகின்றன.

யூரோ 5 விதிமுறைகளுக்கு தயாராகும் ஹோண்டா - 2021 சிஆர்எஃப்300எல் & சிஆர்எஃப்300 ராலி பைக்குகள் வெளியீடு

இந்த வகையில் ஹோண்டா அதன் புதிய சிஆர்எஃப்300எல் பைக் மாடல்களுக்கு சிபிஆர் வரிசை பைக்குகளின் 286சிசி என்ஜினை நீளமான பிஸ்டன் ஸ்ட்ரோக் உடன் வழங்கியுள்ளது. இந்த பெரிய 286சிசி என்ஜின் 8,500 ஆர்பிஎம்-ல் 27 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-ல் 26.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

யூரோ 5 விதிமுறைகளுக்கு தயாராகும் ஹோண்டா - 2021 சிஆர்எஃப்300எல் & சிஆர்எஃப்300 ராலி பைக்குகள் வெளியீடு

சிஆர்எஃப்300எல் பைக்குகளுக்காக என்ஜினின் பிஸ்டன் ஸ்ட்ரோக் 8மிமீ அதிகரிக்கப்பட்டும், இண்டேக் காம்ஷாஃப்ட்டின் டைமிங் திருத்தியமைக்கப்பட்டும் உள்ளதால் இந்த 286சிசி என்ஜின் குறைவான மற்றும் மத்திய சுழற்சிகளில் அதிக டார்க்கை பெறும்.

யூரோ 5 விதிமுறைகளுக்கு தயாராகும் ஹோண்டா - 2021 சிஆர்எஃப்300எல் & சிஆர்எஃப்300 ராலி பைக்குகள் வெளியீடு

2,000 ஆர்பிஎம்-க்கு பிறகு வலிமையான டார்க்கை பைக் பெறும் என ஹோண்டா தெரிவித்துள்ளது. இவற்றுடன் ஸ்லிப் & அசிஸ்ட் க்ளட்ச் மற்றும் நீளமான ஆறாம் கியர் உடன் அப்டேட் செய்யப்பட்ட கியர்பாக்ஸ் உள்ளிட்டவற்றையும் பைக் பெற்றுள்ளது.

யூரோ 5 விதிமுறைகளுக்கு தயாராகும் ஹோண்டா - 2021 சிஆர்எஃப்300எல் & சிஆர்எஃப்300 ராலி பைக்குகள் வெளியீடு

சிஆர்எஃப்300எல் பைக்கின் அதிகப்பட்ச வேகம் 132kmph ஆகும். அதே இரும்பு செமி-டபுள் தொட்டி டிசைனில் தான் ஃப்ரேம் உள்ளது, ஆனால் எடை 4 கிலோ வரையில் குறைந்துள்ளது. ஆனால் அதேநேரம் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் 30 மிமீ வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது, பைக்கின் மொத்த க்ரவுண்ட் க்ளியரென்ஸ் 285மிமீ ஆகும்.

யூரோ 5 விதிமுறைகளுக்கு தயாராகும் ஹோண்டா - 2021 சிஆர்எஃப்300எல் & சிஆர்எஃப்300 ராலி பைக்குகள் வெளியீடு

புதிய சிஆர்எஃப்300எல் பைக் மாடலில் ரேலி வெர்சனும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டிலும் ஒரே சஸ்பென்ஷன் அமைப்பு தான் என்றாலும், ரேலி மாடல் சற்று வித்தியாசமான டிசைனில் பெரிய எரிபொருள் டேங்கை பெற்றுள்ளது. அதாவது ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டில் 7.8 லிட்டர் கொள்ளளவில் வழங்கப்பட்டுள்ள பெட்ரோல் டேங்க் ரேலியில் 12.3 லிட்டர் ஆகும்.

யூரோ 5 விதிமுறைகளுக்கு தயாராகும் ஹோண்டா - 2021 சிஆர்எஃப்300எல் & சிஆர்எஃப்300 ராலி பைக்குகள் வெளியீடு

இரண்டிலும் சஸ்பென்ஷன் ட்ராவல் முன் & பின் என பக்கங்களிலும் 260மிமீ-க்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. ப்ரேக்கிங் அமைப்பில் மாற்றமில்லை. புதிய சிஆர்எஃப்300எல் மற்றும் அதன் ராலி மாடல் எந்த நாட்டில் விற்பனைக்கு கிடைக்கும் என்பது குறித்த தகவல்களை ஹோண்டா வெளியிடவில்லை. நமக்கு தெரிந்தவரை தாய்லாந்தில் முதலாவதாக விற்பனைக்கு செல்லலாம்.

Most Read Articles

English summary
2021 Honda CRF300L, CRF300 Rally Unveiled
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X