இந்தியாவுக்காக மிக குறைவான விலை பைக்கை உருவாக்கும் ஹோண்டா!

இந்தியாவுக்காக மிக குறைவான விலை பைக்கை உருவாக்கும் பணிகள் நடந்து வருவதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ள இந்த புதிய பைக் மாடல் குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவுக்காக மிக குறைவான விலை பைக்கை உருவாக்கும் ஹோண்டா!

இந்தியாவில் பட்ஜெட் பைக்குகளுக்கான சந்தை மிக வலுவாக உள்ளது. குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் பட்ஜெட் ரக பைக்குகளுக்கு அதிக வரவேற்பு தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த ரகதத்தில் ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க வர்த்தகத்தை வைத்துள்ளன.

இந்தியாவுக்காக மிக குறைவான விலை பைக்கை உருவாக்கும் ஹோண்டா!

இந்த சூழலில், நாட்டின் இரண்டாவது பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமாக இருந்து வரும் ஹோண்டா இந்த சந்தையில் எந்த மாடலும் இல்லாமல் இருந்து வருகிறது. தற்போது சிடி110 மாடல்களையே அந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இந்தியாவுக்காக மிக குறைவான விலை பைக்கை உருவாக்கும் ஹோண்டா!

இந்த நிலையில், சிடி110 பைக் மாடல்களைவிட குறைவான விலை பைக் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக ஹோண்டா நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் பிரிவு அதிகாரி யத்விந்தேர் சிங் குலேரியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்காக மிக குறைவான விலை பைக்கை உருவாக்கும் ஹோண்டா!

ஆனால், எந்த சிசி வகை பைக் மாடல் உள்ளிட்டத் தகவல்களை தெரிவிக்கவில்லை. இருப்பினும், ஹீரோ சிடி டீலக்ஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியான 100சிசி மாடலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்தியாவுக்காக மிக குறைவான விலை பைக்கை உருவாக்கும் ஹோண்டா!

அதிர்வுகள் குறைவான, அதிக செயல்திறனை வெளிப்படுத்தும் சிறப்பான ஓட்டுதல் உணர்வை தரும் ஹோண்டா பைக் எஞ்சின்கள் இந்தியர்கள் மத்தியில் அதிக வரவேற்பையும், மதிப்பையும் பெற்றிருக்கின்றன. இந்த நிலையில், ஹோண்டா நிறுவனத்தின் புதிய பைக் மாடல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவுக்காக மிக குறைவான விலை பைக்கை உருவாக்கும் ஹோண்டா!

இந்த பைக் மாடலானது ரூ.50,000க்குள் விலை நிர்ணயிக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது. இந்த புதிய பைக் மாடலுடன் ஹீரோ மோட்டோகார்ப் வசம் உள்ள நம்பர்-1 இடத்தை குறிவைத்து ஹோண்டா காய் நகர்த்தி வருவது தெரிய வந்துள்ளது.

இந்தியாவுக்காக மிக குறைவான விலை பைக்கை உருவாக்கும் ஹோண்டா!

மேலும், பிரிமீயம் வகை பைக் மார்க்கெட்டிலும் அதிக கவனம் செலுத்தி வருவதாக யத்விந்தேர் சிங் குலேரியா தெரிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக பல புதிய பிரிமீயம் வகை பைக் மாடல்களை களமிறக்கும் திட்டத்தையும் அந்நிறுவனம் வைத்துள்ளது. இதன் ஒருபகுதியாக ஹெனெஸ் 350 பைக் மாடலை அண்மையில் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்காக மிக குறைவான விலை பைக்கை உருவாக்கும் ஹோண்டா!

மேலும், தனது பிரிமீயம் பைக்குகளுக்கான BigWing டீலர்களை எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நடப்பு நிதி ஆண்டு இறுதிக்குள் 50 பிங்விங் டீலர்கள் என்ற இலக்குடன் செயலாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Most Read Articles

English summary
Honda is working on new entry-level motorcycle for India.
Story first published: Monday, October 12, 2020, 10:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X