இந்திய இளம் தலைமுறையினரை கவர்ந்திழுக்கும் ஹஸ்க்வர்னா 250... விற்பனையில் தொடர்ந்து முன்னேற்றம்...

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுவரும் ஹஸ்க்வர்னா 250 பைக்குகள் விற்பனையிலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலும் குறிப்பிடத்தக்க அளவிலான முன்னேற்றத்தை பெற்றுவருகின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் வெளிவந்துள்ள 2020 ஆகஸ்ட் மாதத்திற்கான விற்பனை நிலவரத்தை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய இளம் தலைமுறையினரை கவர்ந்திழுக்கும் ஹஸ்க்வர்னா 250... விற்பனையில் தொடர்ந்து முன்னேற்றம்...

இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் கேடிஎம் பைக்குகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து பஜாஜ் ஆட்டோ க்ரூப் ஹஸ்க்வர்னா பிராண்டை நம் நாட்டு சந்தைக்கு கொண்டுவந்தது.

இந்திய இளம் தலைமுறையினரை கவர்ந்திழுக்கும் ஹஸ்க்வர்னா 250... விற்பனையில் தொடர்ந்து முன்னேற்றம்...

ஹஸ்க்வர்னா பிராண்டில் இருந்து தற்சமயம் விட்பிளேன் 250 மற்றும் ஸ்வார்ட்பிளேன் 250 என்ற இரு பைக் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் உண்மையில் பஜாஜின் சாகான் தொழிற்சாலையில் விட்பிளேன் மற்றும் ஸ்வார்ட்பிளேன் வடிவங்களில் 200, 250 மற்றும் 401சிசி ஹஸ்க்வர்னா பைக்குகளும் தயாரிக்கப்படுகின்றன.

இந்திய இளம் தலைமுறையினரை கவர்ந்திழுக்கும் ஹஸ்க்வர்னா 250... விற்பனையில் தொடர்ந்து முன்னேற்றம்...

மற்ற 200 மற்றும் 401 பைக்குகள் தற்போதைக்கு முழுக்க முழுக்க வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிதான் செய்யப்படுகின்றன. இவற்றிற்கு வழங்கப்படும் பெரும்பான்மையான பாகங்கள் கேடிஎம் பைக்குகளில் இருந்து பகிர்ந்து கொடுக்கப்படுகின்றன.

இந்திய இளம் தலைமுறையினரை கவர்ந்திழுக்கும் ஹஸ்க்வர்னா 250... விற்பனையில் தொடர்ந்து முன்னேற்றம்...

இவற்றில் அடுத்ததாக ஹஸ்க்வர்னா 401 பைக் மாடல் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. ஹஸ்க்வர்னா பிராண்ட் இந்தியாவில் கால்பதித்து முழுமையாக ஒரு வருடங்கள் கூட நிறைவடையாத நிலையில் இந்த பிராண்டில் இருந்து 401 பைக்குகள் வெளிவருவதற்கு முக்கிய காரணம் இதன் 250சிசி பைக்குகளின் தொடர் விற்பனை முன்னேற்றம் தான்.

இந்திய இளம் தலைமுறையினரை கவர்ந்திழுக்கும் ஹஸ்க்வர்னா 250... விற்பனையில் தொடர்ந்து முன்னேற்றம்...

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 972 ஹஸ்க்வர்னா 250சிசி பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் இந்த பைக்குகளின் ஜூலை மற்றும் ஜூன் மாத விற்பனை எண்ணிக்கைகள் 725 மற்றும் 428 என்ற அளவில் தான் உள்ளன. இதிலிருந்து ஹஸ்க்வர்னா பைக்குகளுக்கு இந்திய வாடிக்கையாளர்களிடம் இருந்து வரவேற்பு அதிகரிப்பதை அறியலாம்.

Rank Husqvarna India Aug 2020 Domestic Aug 2020 Exports Total
1 200 Not Launched 228 228
2 250 972 179 1,151
3 401 Not Launched 396 396
Total 972 803 1,775
Rank Husqvarna India July 2020 Domestic July 2020 Exports Total
1 200 Not Launched 74 74
2 250 725 63 788
3 401 Not Launched 916 916
Total 725 1,053 1,778
Rank Husqvarna India June 2020 Domestic June 2020 Exports Total
1 200 Not Launched 188 188
2 250 428 160 588
3 401 Not Launched 1,220 1,220
Total 428 1,568 1,996
இந்திய இளம் தலைமுறையினரை கவர்ந்திழுக்கும் ஹஸ்க்வர்னா 250... விற்பனையில் தொடர்ந்து முன்னேற்றம்...

மேலும் இந்த 972 என்ற எண்ணிக்கை தான் ஒரு மாதத்தில் ஹஸ்க்வர்னா பிராண்ட் இந்தியாவில் பதிவு செய்யும் அதிகப்பட்ச விற்பனை எண்ணிக்கையாகும். கடந்த மாதங்களை போல் லாஜிஸ்டிக்ஸ் பணிகளுக்கு தற்போது பெரிய அளவில் எந்த இடையூறுகளும் இல்லாமல் இருப்பதால் இந்த எண்ணிக்கை வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய இளம் தலைமுறையினரை கவர்ந்திழுக்கும் ஹஸ்க்வர்னா 250... விற்பனையில் தொடர்ந்து முன்னேற்றம்...

அதேபோல் ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்தியாவில் இருந்து விற்பனைக்காக வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதும் கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் 179 ஹஸ்க்வர்னா 250 பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் இந்தியாவில் விற்பனையில் இல்லாத ஹஸ்க்வர்னா 200 மற்றும் ஹஸ்வர்னா 401 பைக்குகள் முறையே 228 மற்றும் 396 யூனிட்கள் கடந்த மாதத்தில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்திய இளம் தலைமுறையினரை கவர்ந்திழுக்கும் ஹஸ்க்வர்னா 250... விற்பனையில் தொடர்ந்து முன்னேற்றம்...

மொத்தமாக பார்த்தால், கொரோனா வைரஸ் தலைவிரித்தாடும் தற்போதைய சூழ்நிலையிலும் 803 ஹஸ்க்வர்னா பைக்குகள் பஜாஜின் சாகான் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளில் விற்பனைக்கு சென்றுள்ளன. இந்த வகையில் மொத்தம் 1,775 (972+803) ஹஸ்க்வர்னா பைக்குகளை தயாரித்து கடந்த மாதத்தில் பஜாஜ் நிறுவனம் விற்பனைக்கு அனுப்பியுள்ளது.

இந்திய இளம் தலைமுறையினரை கவர்ந்திழுக்கும் ஹஸ்க்வர்னா 250... விற்பனையில் தொடர்ந்து முன்னேற்றம்...

இருப்பினும் இந்த எண்ணிக்கை 2020 ஜூலை மாதத்தை காட்டிலும் 3 யூனிட்கள் குறைவாகும். ஏனெனில் அப்போது மொத்தமாக 1,778 ஹஸ்க்வர்னா பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கு அந்த மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட் 916 ஹஸ்க்வர்னா 401 பைக்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்திய இளம் தலைமுறையினரை கவர்ந்திழுக்கும் ஹஸ்க்வர்னா 250... விற்பனையில் தொடர்ந்து முன்னேற்றம்...

அதேபோல் 2020 ஜூன் மாதத்தில் 1,996 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அந்த சமயத்தில் மொத்தம் 1,220 ஹஸ்க்வர்னா 401 பைக்குகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. கேடிஎம்-ஐ போல் ஹஸ்க்வர்னா பிராண்டும் இந்தியாவில் பிரபலமாக தொடங்கியிருப்பதால் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கை வைப்பது எல்லாம் பொன்னாக உள்ளது.

Most Read Articles
English summary
Husqvarna 250 Posts Highest Domestic Sales Yet
Story first published: Monday, September 28, 2020, 18:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X