ஹஸ்க்வர்னா 401 பைக்குகளை இந்தியாவில் களமிறக்க தயாராகும் பஜாஜ்... பண்டிகை காலத்தில் வருகின்றன...

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஹஸ்க்வர்னா ஸ்வார்ட்பிளேன் 401 மற்றும் விட்பிளேன் 401 பைக் மாடல்களை விரைவில் வரவுள்ள பண்டிகை காலத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. இதுபற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹஸ்க்வர்னா 401 பைக்குகளை இந்தியாவில் களமிறக்க தயாராகும் பஜாஜ்... பண்டிகை காலத்தில் வருகின்றன...

ஹஸ்க்வர்னா பிராண்ட்டை இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சொந்தமாக கொண்டுள்ளது. ஹஸ்க்வர்னா பிராண்ட் முதன்முறையாக கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற 2019 இந்தியா பைக் வாரத்தில் ஸ்வார்ட்பிளேன் மற்றும் விட்பிளேன் மாடல்களின் 250சிசி பைக்குகள் மூலமாக இந்திய சந்தையில் நுழைந்தது.

ஹஸ்க்வர்னா 401 பைக்குகளை இந்தியாவில் களமிறக்க தயாராகும் பஜாஜ்... பண்டிகை காலத்தில் வருகின்றன...

அவற்றை தொடர்ந்து தற்போது கேடிஎம் 390 ட்யூக்கை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த 401 ட்வின் பைக்குகள் அடுத்ததாக வெளிவரவுள்ளன. இவற்றின் விலை 390 ட்யூக்கிற்கு (ரூ.2.58 லட்சம்) இணையாகவோ அல்லது அதற்கும் குறைவாக நிர்ணயிக்கப்படலாம்.

ஹஸ்க்வர்னா 401 பைக்குகளை இந்தியாவில் களமிறக்க தயாராகும் பஜாஜ்... பண்டிகை காலத்தில் வருகின்றன...

இவற்றில் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 373.2சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் கேடிஎம் 390 ட்யூக்கில் இருந்து பொருத்தப்பட்டுள்ளது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகின்ற இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 43.5 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

ஹஸ்க்வர்னா 401 பைக்குகளை இந்தியாவில் களமிறக்க தயாராகும் பஜாஜ்... பண்டிகை காலத்தில் வருகின்றன...

மற்றபடி 250சிசி பைக்குகளை போல, விட்பிளேன் 401 ரேஸ்களுக்கும், ஸ்வார்ட்பிளேன் 401 தொலைத்தூர பயணங்களுக்கும் ஏற்றதாக இருக்கும். இருப்பினும் ஸ்வார்ட்பிளேன் 401-ஐ வயர்-ஸ்போக் சக்கரங்கள், கூடுதல் சஸ்பென்ஷன் ட்ராவல் மற்றும் சிறப்பான எலக்ட்ரானிக்குகள் உடன் ஆஃப்-ரோட்டிற்கு ஏற்றதாகவும் எதிர்பார்க்கலாம்.

ஹஸ்க்வர்னா 401 பைக்குகளை இந்தியாவில் களமிறக்க தயாராகும் பஜாஜ்... பண்டிகை காலத்தில் வருகின்றன...

சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ள விட்பிளேம் 401 பைக்கிலும் வயர்-ஸ்போக் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன. அவை அப்படியே அதன் இந்தியன் வெர்சனிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர்த்து மொத்த தோற்றத்தில் 401 ட்வின் பைக்குகள் அவற்றின் 250 மாடல்களை தான் ஒத்து காணப்படும்.

ஹஸ்க்வர்னா 401 பைக்குகளை இந்தியாவில் களமிறக்க தயாராகும் பஜாஜ்... பண்டிகை காலத்தில் வருகின்றன...

உலகளாவிய ஹஸ்க்வர்னா 401 ட்வின்ஸ் மாடல்கள் சிறிய அப்டேட்களுடன் நீண்ட பின்பக்க சப்-ஃப்ரேம், வித்தியாசமான டிசைனில் க்ராப்-ரெயில்கள் மற்றும் இருக்கை மற்றும் புதிய நிறங்கள் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக கொண்டுள்ளன. இந்த அப்டேட் வெர்சன்கள் தான் இந்தியாவில் களமிறங்கவுள்ளன.

Most Read Articles

English summary
Husqvarna 401 Twins Launch Details. Read in Telugu.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X