ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் பைக் குறித்த முக்கியத் தகவல்கள்!

ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், எப்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் உற்பத்தி... எப்போது அறிமுகமாகிறது தெரியுமா?

கேடிஎம் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஹஸ்க்வர்னா நிறுவனம் இந்தியாவில் தனித்துவமான பைக் மாடல்களுடன் இந்திய இளைஞர்களை கவர்ந்து இழுத்துள்ளன. அந்நிறுவனத்தின் ஸ்வர்ட்பிலின் மற்றும் விட்பிலின் பைக் மாடல்களின் வித்தியாசமான டிசைன் கேடிஎம் ரசிகர்களையும் சுண்டி இழுத்து வருகிறது.

ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் உற்பத்தி... எப்போது அறிமுகமாகிறது தெரியுமா?

இந்த நிலையில், எலெக்ட்ரிக் பைக் மார்க்கெட்டிலும் களமிறங்குவதற்கான முயற்சிகளில் ஹஸ்க்வர்னா ஈடுபட்டுள்ளது. புதிய மாடல்கள் உருவாக்கப் பணிகள் குறித்த திட்ட அறிக்கையை தமது நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்காக ஹஸ்க்வர்னா தயாரித்துள்ளது. இந்த ஆவணங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன.

ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் உற்பத்தி... எப்போது அறிமுகமாகிறது தெரியுமா?

அதில், ஹஸ்க்வர்னா நிறுவனம் இ-பிலின் என்ற புதிய எலெக்ட்ரிக் பைக் மாடலை உருவாக்கி வருவது தெரிய வந்துள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் கூட்டணியில் கேடிஎம் உருவாக்கி இருக்கும் மின்சார வாகனத் தயாரிப்புக்கான கட்டமைப்புக் கொள்கையில்தான் இந்த புதிய ஹஸ்க்வர்னா இ-பிலின் பைக் மாடலும் உருவாக்கப்பட உள்ளது.

ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் உற்பத்தி... எப்போது அறிமுகமாகிறது தெரியுமா?

மேலும், தனது மின்சார இருசக்கர வாகனங்கள் 4kW முதல் 10kW வரையிலான பேட்டரி திறன் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் அந்த ஆவணத்தில் ஹஸ்க்வர்னா குறிப்பிட்டுள்ளது. இதன்படி, பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்படும் 4kW பேட்டரி ஹஸ்க்வர்னா மாடல்களில் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் உற்பத்தி... எப்போது அறிமுகமாகிறது தெரியுமா?

மேலும், ஹஸ்க்வர்னா விட்பிலின் மற்றும் ஸ்வர்ட்பிலின் பைக் மாடல்களின் டிசைன் தாத்பரியங்களுடன் இந்த புதிய எலெக்ட்ரிக் பைக் வர இருப்பதும் அந்த ஆவணம் மூலமாக வெளியுலகுக்கு கசிந்துள்ளது.

ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் உற்பத்தி... எப்போது அறிமுகமாகிறது தெரியுமா?

ஹஸ்க்வர்னா மின்சார பைக் மாடல்கள் இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. அத்துடன், பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டமும் இருக்கிறது. வரும் 2022ம் ஆண்டில் ஹஸ்க்வர்னா இ-பிலின் பைக் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது தெரிய வந்துள்ளது.

ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் உற்பத்தி... எப்போது அறிமுகமாகிறது தெரியுமா?

ஐரோப்பிய மார்க்கெட்டில் மிக முக்கிய இடத்தில் இ-பிலின் பைக் மாடல் நிலைநிறுத்தப்படும். இந்தியாவில் ரிவோல்ட் ஆர்வி400 மற்றும் டார்க் டி6எக்ஸ் எலெக்ட்ரிக் பைக் மாடல்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது.

Most Read Articles

English summary
Husqvarna is developing a new electric motorcycle called E-Pilen and it will be launched in 2022.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X