பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர் அடிப்படையில் ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... எப்போது அறிமுகம்?

பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர் அடிப்படையில் ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் குறித்த தகவல்கள்!

ஐரோப்பாவில் மிகவும் பிரபலமான ஹஸ்க்வர்னா பைக் நிறுவனம் கேடிஎம் பைக் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. கேடிஎம் நிறுவனத்தில் 48 சதவீத பங்குகளை வைத்துள்ள பஜாஜ் ஆட்டோ மற்றும் 51.7 சதவீத பங்குகளை வைத்துள்ள பியரெர் நிறுவனங்கள் ஹஸ்க்வர்னா பைக்குகளை இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்தன.

பஜாஜ் ஆட்டோ ஆலையில்தான் கேடிஎம், ஹஸ்க்வர்னா பைக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நிலையில், எதிர்கால சந்தையின் போக்கை கணித்து, மின்சார வாகனங்களை தயாரிப்பதற்கு பஜாஜ் ஆட்டோ- கேடிஎம் - ஹஸ்க்வர்னா நிறுவனங்கள் செயலாற்றி வருகின்றன.

அந்த வகையில், புதிய எலெக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களை ஹஸ்க்வர்னா நிறுவனம் உருவாக்க உள்ளது. இதுதொடர்பாக, தனது முதலீட்டாளர்களுக்கு அதிகாரப்பூர்வமான ஆவணங்களை தயாரித்து வழங்கி இருக்கிறது. அதில், மின்சார ஸ்கூட்டர் மற்றும் மின்சார பைக் மாடல்களின் மாதிரி வடிவம் உள்ளிட்ட சில முக்கிய விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆவணம் ஆன்லைன் மூலமாக ஆட்டோமொபைல் இணையதளங்களில் கசிந்துள்ளன. அதில், மின்சார ஸ்கூட்டர் மாடலானது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்து வரும் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அடிப்படையில்தான் ஹஸ்க்வர்னா மின்சார ஸ்கூட்டர் உருவாக்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் பைக் இ-பிலின் என்ற பெயரில் குறிப்பிடப்படும் நிலையில், அதன் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் E-01 என் குறியீட்டுப் பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாடல்களுமே மஹாராஷ்டிர மாநிலம் சகனில் உள்ள பஜாஜ் ஆட்டோ ஆலையில்தான் உற்பத்தி செய்யப்படும்.

ஆனால், ஐரோப்பிய நாடுகளில் முதலில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கட்டமைப்பு மேம்படும்போது உடனடியாக களமிறக்கப்படும். ஒரே கட்டமைப்புக் கொள்கையின் கீழ், பஜாஜ், கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா பிராண்டுகளில் வெவ்வேறு டிசைன் அம்சங்களுடன் புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உருவாக்கப்பட உள்ளது.

இதன்மூலமாக, எளிதாக உதிரிபாகங்களை சப்ளை பெறுவதோடு, முதலீடும் வெகுவாக குறைக்கப்படும் வாய்ப்பு ஏற்படும். இதனால், விலையை முடிந்தவரை வாடிக்கையாளர்களுக்கு சகாயமாக நிர்ணயிக்க வாய்ப்பு உருவாகும் என்று பஜாஜ் ஆட்டோ மற்றும் பியரெர் நிறுவனங்களின் கூட்டணி கருதுகிறது.

ஹஸ்க்வர்னா இ-01 ஸ்கூட்டரில் 16 என்எம் டார்க் திறனை வழங்கும் மின் மோட்டார் இருக்கும். பஜாஜ் சேத்தக்கில் உள்ள அதே 4.08 kWh திறன் வாய்ந்த லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்படும் வாய்ப்புள்ளது. 95 கிமீ ரேஞ்ச் கொண்டதாக இருக்கும். அடுத்த ஆண்டு பிற்பாதியில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.

Most Read Articles

English summary
KTM owned Husqvarna is mulling to launch new electric scooter by second half next year.
Story first published: Monday, September 7, 2020, 12:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X