விரைவில் வருகிறது ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிலின் 200 பைக்!

இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ள புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிலின் 200 பைக் மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விரைவில் வருகிறது ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிலின் 200 பைக்!

கேடிஎம் அங்கமாக செயல்பட்டு வரும் ஹஸ்க்வர்னா நிறுவனம் ஸ்வர்ட்பிலின் 250, விட்பிலின் 250 என்ற இரண்டு பைக் மாடல்களுடன் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கியது. இந்த இரண்டு மாடல்களுக்கும் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. கேடிஎம் ட்யூக் 250 பைக்கின் அடிப்படையில்தான் இந்த இரண்டு பைக் மாடல்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

விரைவில் வருகிறது ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிலின் 200 பைக்!

இந்த நிலையில், தனது 250சிசி மாடல்களுக்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகமடைந்துள்ள ஹஸ்கவர்னா விற்பனையை லுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கி உள்ளது.

விரைவில் வருகிறது ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிலின் 200 பைக்!

இதற்காக புதிய மாடல்களை இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஹஸ்க்வர்னா நிறுவனம் ஸ்வர்ட்பிலின் 200 பைக் மாடலை விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க உள்ளதாக பைக்தேக்கோ செய்தி தெரிவிக்கிறது. அதாவது, அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய மாடல் வர இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

விரைவில் வருகிறது ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிலின் 200 பைக்!

புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிலின் 200 பைக் மாடலானது கேடிஎம் ட்யூக் 200 பைக்கின் அடிப்படையிலான மாடலாக வர இருக்கிறது. இதனால், ஸ்டைலிங்கில் மட்டுமே அதிக வேறுபாடுகள் இருக்கும். எஞ்சின் உள்ளிட்ட பல முக்கிய பாகங்களை இந்த பைக் பங்கிட்டு கொள்ளும்.

விரைவில் வருகிறது ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிலின் 200 பைக்!

இந்த பைக்கில் 199சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் 25 பிஎஸ் பவரையும், 19.3 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

விரைவில் வருகிறது ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிலின் 200 பைக்!

இந்த பைக்கில் முன்புறத்தில் 43மிமீ இன்வர்டெட் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கும். முன்சக்கரத்தில் 320மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் இடம்பெற்றிருக்கும். டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கும். எம்ஆர்எஃப் ரெவ்ஸ் எஃப்டி டியூவல் பர்ப்போஸ் டயர்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

விரைவில் வருகிறது ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிலின் 200 பைக்!

புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிலின் 200 பைக் ரூ.1.65 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கலாம். இதனுடன் சேர்த்து விட்பிலின் 200 பைக் மாடலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு பைக்குகளுக்கும் தோற்றத்தில் வேறுபாடுகள் இருக்கும்.

Most Read Articles

English summary
According to reports, Husqvarna Svartpilen 200 bike will be launched in India very soon.
Story first published: Thursday, October 15, 2020, 21:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X