Just In
- 47 min ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 2 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 5 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 5 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹஸ்க்வர்னா 401 பைக் மாடல்கள் அறிமுகம் குறித்த ஏமாற்றமானத் தகவல்!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிலின் 401 மற்றும் விட்பிலின் 401 பைக் மாடல்களின் அறிமுகம் குறித்து ஏமாற்றமான தகவல் வெளியாகி இருக்கிறது.

கேடிஎம் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஹஸ்க்வர்னா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கியது. முதல் மாடல்களாக ஸ்வர்ட்பிலின் 250 மற்றும் விட்பிலின் 250 ஆகிய பைக் மாடல்களை களமிறக்கியது. கேடிஎம் 250 ட்யூக் அடிப்படையிலான இந்த இரண்டு பைக் மாடல்களின் தனித்துவமான டிசைன் அம்சங்கள் இந்தியர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.

இந்த நிலையில், அடுத்து கேடிஎம் 390 ட்யூக் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஸ்வர்ட்பிலின் 401 மற்றும் விட்பிலின் 401 ஆகிய பைக் மாடல்களை விற்பனைக்கு களமிறக்க திட்டமிட்டது. இந்த பைக் மாடல்கள் பல மாதங்களாக சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த இரு மாடல்களும் இந்தியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பண்டிகை காலத்தில் இந்த இரண்டு புதிய மாடல்களும் விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக, இதன் அறிமுகத்தில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கருதப்பட்டது.

இந்த நிலையில், புதிய ஸ்வர்ட்பிலின் 401 மற்றும் விட்பிலின் 401 ஆகிய இரண்டு பைக் மாடல்களின் அறிமுகத்தையும் ஹஸ்க்வர்னா நிறுவனம் தள்ளிப்போட்டுள்ளதாக பைக்வாலே தளத்தின் செய்தி தெரிவிக்கிறது.

அதாவது, உடனடியாக இந்த இரண்டு பைக் மாடல்களும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படாது என்று ஹஸ்க்வர்னா நிறுவனம் உறுதிப்படுத்தி இருப்பதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது. இந்த செய்தி, ஹஸ்க்வர்னா 401 பைக்குகளை எதிர்பார்த்து காத்திருந்த இந்தியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை தந்துள்ளது.

கேடிஎம் 390 ட்யூக் அடிப்படையிலான ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிலின் 401 மற்றும் விட்பிலின் 401 பைக் மாடல்கள் ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள சப்-ஃப்ரேமில்தான் எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்குகளில் ஸ்போக்ஸ் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய ஹஸ்க்வர்னா 401 பைக் மாடல்களில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 373சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் இடம்பெறும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 43 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஸ்லிப்பர் க்ளட்ச் கொண்ட 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்படும்.

ஏற்கனவே இந்த எஞ்சின் கேடிஎம் 390 பைக்குகளில் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தனித்துவமான ஸ்டைல் கொண்ட ஹஸ்க்வர்னா பைக்குகளின் அதே எஞ்சின்தான் என்பதால் வாடிக்கையாளர்கள் கண்ணை மூடிக் கொண்டு வாங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில், எப்போது இந்த பைக் மாடல்களை ஹஸ்க்வர்னா கொண்டு வரும் என்ற ஆவலுடன் இந்தியர்கள் காத்துக் கிடக்கின்றனர்.