ஹஸ்க்வர்னா 401 பைக் மாடல்களின் இந்திய அறிமுக விபரம்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய ஹஸ்க்வர்னா 401 பைக் மாடல்களின் இந்திய அறிமுக விபரம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹஸ்க்வர்னா 401 பைக் மாடல்களின் இந்திய அறிமுக விபரம்!

கேடிஎம் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஹஸ்க்வர்னா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் 250சிசி பைக் மாடல்களுடன் வர்த்தகத்தை துவங்கியது. கேடிஎம் ட்யூக் 250 பைக் அடிப்படையிலான ஸ்வர்த்பிலின் 250 மற்றும் விட்பிலின் 250 என்ற பெயரில் இந்த மாடல்கள் வந்தன.

ஹஸ்க்வர்னா 401 பைக் மாடல்களின் இந்திய அறிமுக விபரம்!

இளைஞர்களை சுண்டி இழுக்கும் ஸ்டைலில் வந்த இரண்டு பைக் மாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், அடுத்து வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஸ்வர்த்பிலின் 401 மற்றும் விட்பிலின் 401 ஆகிய இரண்டு பைக் மாடல்களும் விரைவில் இந்தியா வர இருக்கின்றன.

ஹஸ்க்வர்னா 401 பைக் மாடல்களின் இந்திய அறிமுக விபரம்!

கொரோனா பிரச்னையால் இந்த பைக் மாடல்களின் அறிமுகம் தள்ளிப் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், இந்தியன் ஆட்டோஸ் பிளாக் தளத்தின் செய்தியின்படி, இந்த ஆண்டு இறுதியில் புதிய ஸ்வர்த்பிலின் 401 மற்றும் விட்பிலின் 401 பைக் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கிறது.

ஹஸ்க்வர்னா 401 பைக் மாடல்களின் இந்திய அறிமுக விபரம்!

கேடிஎம் 390 ட்யூக் பைக்கின் அடிப்படையில்தான் இந்த புதிய ஸ்வர்த்பிலின் 401 மற்றும் விட்பிலின் 401 பைக் மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எஞ்சின், சஸ்பென்ஷன், பிரேக் சிஸ்டம் உள்ளிட்ட பல முக்கிய பாகங்களை இந்த இரண்டு மாடல்களும் கேடிஎம் 390 பைக்குடன் பங்கிட்டுக் கொள்ளும்.

ஹஸ்க்வர்னா 401 பைக் மாடல்களின் இந்திய அறிமுக விபரம்!

அதேநேரத்தில், டிசைனில் வேறுபடுத்தப்பட்டு இருக்கிறது. ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிலின் 401 பைக் மாடலானது ஸ்க்ராம்ப்ளர் ரகத்திலும், விட்பிலின் 401 கஃபே ரேஸர் ரகத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஹஸ்க்வர்னா 401 பைக் மாடல்களின் இந்திய அறிமுக விபரம்!

புதிய ஹஸ்க்வர்னா 401 பைக் மாடல்களில் முழுமையான எல்இடி ஹெட்லட் இடம்பெறுகிறது. அதேபோன்று, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருடன் வர இருக்கின்றன. ஸ்வர்ட்பிலின் 401 பைக்கில் டியூவல் பர்ப்போஸ் எனப்படும் இரட்டை பயன்பாட்டு வகை டயர்கள், அகலமான ஹேண்டில்பார் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

ஹஸ்க்வர்னா 401 பைக் மாடல்களின் இந்திய அறிமுக விபரம்!

அடுத்து விட்பிலின் 401 பைக்கில் க்ளிப் ஆன் வகை ஹேண்டில்பார், சாஃப்ட் காம்பவுன்ட் ஆன்ரோடு டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்வர்ட்பிலின் 401 பைக்கில் அடர் சாம்பல் வண்ணத்தில் பெட்ரோல் டேங்க் மற்றும் சில்வர் வண்ண வால் பகுதி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஹஸ்க்வர்னா 401 பைக் மாடல்களின் இந்திய அறிமுக விபரம்!

அதற்கு நேர் எதிராக விட்பிலின் 401 பைக்கில் சில்வர் வண்ண பெட்ரோல் டேங்க் மற்றும் அடர் சாம்பல் வண்ணத்தில் வால் பகுதியும் இருக்கிறது. இதன்மூலமாக, எளிதான வேறுபடுத்தும் வாய்ப்பு இருக்கிறது.

ஹஸ்க்வர்னா 401 பைக் மாடல்களின் இந்திய அறிமுக விபரம்!

கேடிஎம் 390 பைக்குகளில் பயன்படுத்தப்படும் அதே 373 சிசி எஞ்சின்தான் இந்த பைக் மாடல்களிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 44 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ஹஸ்க்வர்னா 401 பைக் மாடல்களின் இந்திய அறிமுக விபரம்!

இரண்டு பைக் மாடல்களிலும் முன்புறத்தில் 43மிமீ WP அபெக்ஸ் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் WP அபெக்ஸ் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. அதேபோன்று, முன்சக்ரத்தில் 300மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இந்த பைக்குகளில் ஸ்போக்ஸ் சக்கரங்கள் கொடுக்கப்படும் நிலையில், இந்தியாவில் அலாய் சக்கரங்களுடன் வரும் என தெரிகிறது.

ஹஸ்க்வர்னா 401 பைக் மாடல்களின் இந்திய அறிமுக விபரம்!

கேடிஎம் 390 பைக் மாடல்கள், பஜாஜ் டோமினார் 400 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். கேடிஎம் 390 ட்யூக் பைக் ரூ.2.58 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை விட குறைவான விலையில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles

English summary
According to the latest report, Husqvarna is expected to launch the Svartpilen 401 and the Vitpilen 401 sometime by the end of this year in the Indian market.
Story first published: Saturday, September 12, 2020, 14:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X