Just In
- 56 min ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 2 hrs ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 2 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Movies
கோடியில் புரளும் 'கார்த்தி'யின் இயக்குனர்கள்.. பின்னணி என்ன? அதிரடியாய் அலசும் இளம் விமர்சகர்!
- News
நல்ல கூட்டம் வேறு.. மாஸ்க் அணியாத மோடி.. குவியும் விமர்சனங்களும், அக்கறை அறிவுரைகளும்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மாடிஃபை என்றால் இப்படி இருக்க வேண்டும்... 612சிசி-ல் கஸ்டம் ராயல் எண்ட்பீல்டு பைக்...
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் ஒன்று செயல்திறன் அப்கிரேட் உடன் மொத்த தோற்றம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த கஸ்டமைஸ்ட் ராயல் என்பீல்டு பைக்கை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் மாடிஃபை பணிகளுக்கு அதிகளவில் உட்படுத்தப்படுவை என்றால் அவை ராயல் என்பீல்டு பைக்குகள் தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஏனெனில் கார்களுக்கு இணையாக காஸ்மெட்டிக் மாற்றங்கள் பெரும்பாலும் ராயல் என்பீல்டு பைக்குகளில் தான் கொண்டுவரப்படுகின்றன.

இந்த வகையில் தற்போது ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 500 பைக் ஒன்று செயல்திறன் அப்கிரேட் உடன் புதுமையான தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த பைக்கின் உரிமையாளரின் பெயர் வஜ்ரா. இவர் தான் மாடிஃபை பைக்கின் படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

வஜ்ராவின் ராயல் என்பீல்டு பைக்கில் இத்தகைய மாடிஃபை பணிகளை பஞ்சாப், லூதியானாவை சேர்ந்த சைக்கிள் சிட்டி கஸ்டம்ஸ் என்ற நிறுவனம் மேற்கொண்டுள்ளது. மிகவும் நேர்த்தியான கஸ்டமைஸ்ட் பணிகளால் கேஃப் ரேஸர் தோற்றத்திற்கு மோட்டார்சைக்கிள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறிப்பாக முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ள பைக்கின் பெட்ரோல் டேங்க் மற்றும் பின்புற பகுதி பளபளப்பான அலுமினிய நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் ஒற்றை இருக்கையும் சேசிஸும் பளிச்சிடும் சிவப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பான ஹேண்டிலிங்கிற்காக பின்பக்க சப்-ஃப்ரேம் மற்றும் ஸ்விங்க் ஆர்ம் உள்ளிட்டவை கவனிக்கத்தக்க வகையில் மாடிஃபை செய்யப்பட்டுள்ளன. அதேபோல் சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக் போன்ற மற்ற பாகங்களும் கூட மாடிஃபை செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.

இந்த வகையில் இந்த ராயல் என்பீல்டு பைக், கேடிஎம் நிறுவனத்தின் முன்புற ஃபோர்க்கையும், பின்புறத்திற்கு மோனோஷாக்கையும் பெற்றுள்ளது. ப்ரேக்கிங் பணியை கவனிக்க முன்புற டிஸ்க் ப்ரேக் சற்று பெரியதாகவும், பின்புறத்தில் ஸ்டாக்கின் ட்ரம் ப்ரேக், டிஸ்க் ப்ரேக்காலும் மாற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே கூறியதுபோல் கேஃப் ரேஸர் ரக மோட்டார்சைக்கிளாக மாற்றப்பட்டுள்ள இந்த மாடிஃபை பைக்கில் அதற்கு ஏற்றவாறு ஹேண்டில்பார் மிகவும் தாழ்வாக பொருத்தப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் விட முக்கியமானதாக 500சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை 612சிசி-ஆக வஜ்ரா மாற்றியுள்ளார்.

இதனால் வழக்கமான 500சிசி என்ஜின் வெளிப்படுத்தும் 27.2 பிஎச்பி, 40 பிஎச்பி ஆக இந்த ராயல் என்பீல்டு கிளாசிக் பைக்கில் அதிகரித்துள்ளது. மற்ற அப்கிரேட்களாக கே&என் காற்று வடிக்கட்டி, அதிக அழுத்ததில் பிஸ்டன்கள், டைனோஜெட் பிசி5-இன் இசியூ, குயிக் ஷிஃப்டர், கஸ்டம் எக்ஸாஸ்ட் போன்றவை பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த மாடிஃபிகேஷன் மாற்றங்களால் பைக்கின் மொத்த எடை சுமார் 43கிலோ குறைந்து 154 கிலோவாக உள்ளது. ஆற்றல்மிக்க என்ஜின் அமைப்புடன் பைக்கின் எடையும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதால் பைக் அதிகப்பட்சமாக 180kmph வரையில் இயங்கும் என வஜ்ரா குறிப்பிட்டுள்ளார்.
இந்த பைக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள கஸ்டமைஸ்ட் பணிகளை ஒரே வார்த்தையில் கூறவேண்டுமென்றால், சூப்பர்.