இந்தியாவில் அதிக மைலேஜை தரும் பைக்குகள் எது தெரியுமா..? இதோ டாப் 10 பைக்குகளின் புதிய லிஸ்ட்!

அதிக மைலேஜ் தரும் பைக்குகள் பட்டியலை புள்ளி விவரங்களுடன் பார்க்கலாம்.

இந்தியாவில் அதிக மைலேஜை தரும் பைக்குகள் எது தெரியுமா..? இதோ டாப் 10 பைக்குகளின் புதிய லிஸ்ட்!

அதிகம் மைலேஜ் தரும் வாகனங்களுக்கே இந்தியாவில் வரவேற்பும் அதிகம். ஏனெனில் இந்தியர்கள் பெரும்பாலானோர் அதிகம் மைலேஜை தரும் வாகனங்களை அதிகளவில் விரும்புகின்றனர். குறிப்பாக, மலிவு விலை மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு ஆகிய அம்சங்களைக் கொண்ட வாகனங்களுக்கே இந்திய மக்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

இந்தியாவில் அதிக மைலேஜை தரும் பைக்குகள் எது தெரியுமா..? இதோ டாப் 10 பைக்குகளின் புதிய லிஸ்ட்!

அந்தவகையில் எந்தெந்த வாகனம் எந்தளவு மைலேஜ் தருகின்றது என்கிற தகவலையே இந்த பதிவில் நாம் காணவிருக்கின்றோம். பொதுவாக அதிக மைலேஜே தேடும் இருசக்கர வாகன விரும்பிகளின் முதல் தேர்வாக பஜாஜ் நிறுவனத்தின் சிடி110 பைக் இருக்கின்றது.

இந்தியாவில் அதிக மைலேஜை தரும் பைக்குகள் எது தெரியுமா..? இதோ டாப் 10 பைக்குகளின் புதிய லிஸ்ட்!

இந்த பைக் அராய் வெளியிட்ட தகவலின்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 104 கிமீ வரை பயணிக்கும் என்பது தெரியவந்துள்ளது. இதன் விலையும் மிக குறைவாகும். அதாவது, இந்த பைக் இந்தியாவில் ரூ. 50 ஆயிரம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். எனவேதான் தினசரி பயணத்தை விரும்பும் இளைஞர்களின் மிகவும் விருப்பமான பைக்காக சிடி வரிசை பைக்குகள் இருக்கின்றன.

இந்தியாவில் அதிக மைலேஜை தரும் பைக்குகள் எது தெரியுமா..? இதோ டாப் 10 பைக்குகளின் புதிய லிஸ்ட்!

இதைத்தொடர்ந்து, அடுத்த இடத்தில் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பைக் இருக்கின்றது. இது பெட்ரோல் லிட்டர் ஒன்றிற்கு 85 கிமீ வரை செல்லும். இதன் விலை சுமார் ரூ. 62 ஆகும். இதற்கு அடுத்தபடியான இடத்தில் பஜாஜ் நிறுவனத்தின் மற்றுமொரு தயாரிப்பான பிளாட்டினா எச்கியர் பைக் இருக்கின்றது. 110 சிசி திறனுடைய இந்த பைக் அதிகபட்சமாக லிட்டர் ஒன்றிற்கு 84 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

இந்தியாவில் அதிக மைலேஜை தரும் பைக்குகள் எது தெரியுமா..? இதோ டாப் 10 பைக்குகளின் புதிய லிஸ்ட்!

டிவிஎஸ் ஸ்டார் மற்றும் பஜாஜ் பிளாட்டினா 110 எச் கியர் பைக்கிற்கும் பெரியளவில் வித்தியாசம் இல்லை. இவையிரண்டும் விலையிலும், மைலேஜிலும் கணிசமான வித்தியாசங்களை மட்டுமே கொண்டிருக்கின்றது. எனவேதான், இவையிரண்டிற்கும் இடையிலான போட்டியும் சற்று கூடுதலாகக் காட்சியளிக்கின்றது.

இந்தியாவில் அதிக மைலேஜை தரும் பைக்குகள் எது தெரியுமா..? இதோ டாப் 10 பைக்குகளின் புதிய லிஸ்ட்!

இந்த பைக்குகளுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்கும், ஐந்தாவது இடத்தை அதே ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கும் பிடித்திருக்கின்றன. இதில், சூப்பர் ஸ்பிளெண்டர் 83 கிமீ மைலேஜையும், ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் 80 கிமீ மைலேஜையும் வழங்குகின்றன.

இந்தியாவில் அதிக மைலேஜை தரும் பைக்குகள் எது தெரியுமா..? இதோ டாப் 10 பைக்குகளின் புதிய லிஸ்ட்!

ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்கின் விலை ரூ. 71,650 ஆகும். மேலும், ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கின் விலை ரூ. 60,310 ஆகும். இதேபோன்று பிற நிறுவனங்களின் பைக்குகளும் அடுத்தடுத்த இடைத்தைப் பிடித்திருக்கின்றன. அதுகுறித்த தகவலைப் பட்டியலாக கீழே காணலாம்.

இந்தியாவில் அதிக மைலேஜை தரும் பைக்குகள் எது தெரியுமா..? இதோ டாப் 10 பைக்குகளின் புதிய லிஸ்ட்!

அதிகம் மைலேஜ் தரும் பட்டியல்: விலை மற்றும் மைலேஜ் வாரியாக...

எண். மாடல் மைலேஜ் விபரம் (ARAI Tested) விலை
1 பஜாஜ் சிடி 110 104 kmpl ₹48,704
2 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி 85 kmpl ₹62,784
3 பஜாஜ் பிளாட்டினா 110 எச் கியர் 84 kmpl ₹62,899
4 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்ட்ர் 83 kmpl ₹71,650
5 ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் 80 kmpl ₹60,310
6 ஹோண்டா சிடி110 ட்ரீம் 74 kmpl ₹65,505
7 டிவிஎஸ் ரேடியான் 69 kmpl ₹59,742
8 ஹோண்டா ஷைன் 65 kmpl ₹68,812
9 ஹீரோ ஸ்பிளெண்டர் ஐ ஸ்மார்ட் 61 kmpl ₹65,672
10 ஹீரோ பேஷன் ப்ரோ 110 60 kmpl ₹65,750
Most Read Articles

English summary
India's Top 10 Most Fuel BS6 Efficiency Motorcycle. Read In Tamil.
Story first published: Tuesday, November 17, 2020, 17:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X