லடாக் பகுதியில் பைக்கில் செல்வதே இவ்வளவு ஆபத்தானதா...? இந்திய இராணுவ வீரர்கள் உண்மையில் கிரேட்...

நாட்டிற்குள் நாம் நிம்மதியாக உறங்க எல்லையில் இரவு பகல் பாராது பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு கொண்டிருக்கும் இராணுவ வீரர்களை கவுரவிக்கும் வகையில் ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளது. அதனை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

லடாக் பகுதியில் பைக்கில் செல்வதே இவ்வளவு ஆபத்தானதா...? இந்திய இராணுவ வீரர்கள் உண்மையில் கிரேட்...

இந்திய இராணுவம் 1999ல் நடைபெற்ற கார்கில் போரில் அடைந்த வெற்றியை ஆண்டுத்தோறும் ஜூன் 26ஆம் தேதி கொண்டாடுவது வழக்கம். இதனை நம்மில் எத்தனை பேர் நினைவில் வைத்துள்ளோம் என்பது தெரியவில்லை. ஆனால் இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ராயல் எண்ட்பீல்டு புதிய வீடியோ ஒன்றின் மூலம் நினைவுக்கூர்ந்துள்ளது.

இந்த வீடியோ முழுக்க முழுக்க வடக்கு லடாக் பகுதியில் உள்ள காரகோரம் பாஸ் என்ற மலைத்தொடர்களும் கூர்மையான பாறைகளும் நிறைந்த இடத்திற்கு சென்று இராணுவ வீரர்கள் எவ்வாறு தங்களது கடமையினை செய்கின்றனர் என்பதை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது.

லடாக் பகுதியில் பைக்கில் செல்வதே இவ்வளவு ஆபத்தானதா...? இந்திய இராணுவ வீரர்கள் உண்மையில் கிரேட்...

காரகோரம் பாஸ் பகுதியானது இந்திய-சீன எல்லைக்கு மிகவும் அருகாமையில் அமைந்துள்ள இடம் ஆகும். இடம் என்று சொல்வதை விட பாதை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் பண்டைய காலத்தில் இருந்து இந்தியா மற்றும் சீனாவின் எல்லையில் உள்ள கிராம மக்கள் இடம் பெயர்வதற்கு பயன்படுத்திய பாதை இதுவாகும்.

லடாக் பகுதியில் பைக்கில் செல்வதே இவ்வளவு ஆபத்தானதா...? இந்திய இராணுவ வீரர்கள் உண்மையில் கிரேட்...

இந்திய மற்றும் சீன எல்லை பிரச்சனையில் காரகோரம் பாஸும் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் தான் கடந்த 2019ஆம் ஆண்டில் இந்த பகுதியை கைப்பற்றுவதற்கு உதவியாக இந்திய இராணுவத்துடன் ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் கூட்டணி சேர்ந்தது.

லடாக் பகுதியில் பைக்கில் செல்வதே இவ்வளவு ஆபத்தானதா...? இந்திய இராணுவ வீரர்கள் உண்மையில் கிரேட்...

இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளதுபோல் காரகோரம் பாஸ் பகுதிக்கு பைக்கில் செல்வதும் ஒன்றும் அவ்வளவு எளிதானது அல்ல. இதனால் அந்த பகுதியில் பைக் ரைடிங் என்பது இதுவே முதன்முறையாக இருக்க வேண்டும். ஏனெனில் ஏற்கனவே கூறியதுபோல் அந்த இடம் முழுவதும் பாறை கற்களால் நிரம்பியே இருக்கும்.

லடாக் பகுதியில் பைக்கில் செல்வதே இவ்வளவு ஆபத்தானதா...? இந்திய இராணுவ வீரர்கள் உண்மையில் கிரேட்...

இதுபோதாதென்று அங்கு அதிகப்பட்சமாக -30 டிகிரி செல்சியஸ் வரையில் நிலவும் வெப்பநிலை வேறு. ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்தால் இது எந்த அளவிற்கு ஆபத்தான இடம் என்பது உங்களுக்கே புரியும்.

லடாக் பகுதியில் பைக்கில் செல்வதே இவ்வளவு ஆபத்தானதா...? இந்திய இராணுவ வீரர்கள் உண்மையில் கிரேட்...

இந்நிறுவனம் இந்த பயணத்திற்கு தனது ஹிமாலயன் பைக்குகளை பயன்படுத்தியுள்ளது. ஆஃப்-ரோட்டிற்கு ஏற்ற தோற்றத்தில் எந்த விதமான சாலைக்கும் எளிதில் பொருந்திவிடக்கூடிய இந்த பைக் மாடலின் பிஎஸ்4 வெர்சன்கள் தான் இந்த சவாலான பயணத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.

லடாக் பகுதியில் பைக்கில் செல்வதே இவ்வளவு ஆபத்தானதா...? இந்திய இராணுவ வீரர்கள் உண்மையில் கிரேட்...

தற்சமயம் விற்பனையில் உள்ள ஹிமாலயன் பைக்கில் பிஎஸ்6 தரத்தில் 411சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது. 5-ஸ்பீடு கான்ஸ்டெண்ட் மெஷ் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படுகின்ற இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 24.3 பிஎச்பி பவரையும், 32 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

லடாக் பகுதியில் பைக்கில் செல்வதே இவ்வளவு ஆபத்தானதா...? இந்திய இராணுவ வீரர்கள் உண்மையில் கிரேட்...

ஹாஃப்-டுப்லெக்ஸ் ஸ்ப்ளிட் க்ராடல் ஃப்ரேம் ஆல் வடிவமைக்கப்பட்டுள்ள ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பைக்கில் சஸ்பென்ஷனிற்கு முன்புறத்தில் 41மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸையும், பின்புறத்தில் மோனோஷாக்கையும் தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது.

லடாக் பகுதியில் பைக்கில் செல்வதே இவ்வளவு ஆபத்தானதா...? இந்திய இராணுவ வீரர்கள் உண்மையில் கிரேட்...

இந்த வீடியோவில் லே நகரத்தில் உள்ள கரு பகுதியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பிக்கும் ஹிமாலயன் பைக்குகள் இந்திய, சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே உண்மையில் கட்டுப்பாட்டில் உள்ள பாதை (LAC) வழியாக சுமார் 1,000 கிமீ கடந்து காரகோரம் பாஸ் பகுதியினை அடைகின்றன.

லடாக் பகுதியில் பைக்கில் செல்வதே இவ்வளவு ஆபத்தானதா...? இந்திய இராணுவ வீரர்கள் உண்மையில் கிரேட்...

இதற்கிடையில் சாங்டஷ், சியாசென் க்ளாஸியர், டெப்சங் ப்ளைன்ஸ் மற்றும் தவுலட் பேக் ஓல்டி போன்ற உலகின் மிகவும் உயரமான பகுதிகள் எல்லாம் வருகின்றன. இது ஆப்கானிஸ்தியர்கள் முன்னொரு காலத்தில் வர்த்தகத்திற்காக பயன்படுத்திய பாதையாகும்.

லடாக் பகுதியில் பைக்கில் செல்வதே இவ்வளவு ஆபத்தானதா...? இந்திய இராணுவ வீரர்கள் உண்மையில் கிரேட்...

உண்மையில் இந்த வழியாக மோட்டார்சைக்கிள்கள் செல்ல முடியுமா என்பது கூட பயணத்திற்கு முன்பாக மேலோட்டமாக தான் ஆராயப்பட்டிருக்கும். அபாயகரமான மலைத்தொடர்கள், இடையிடையே வலுக்கும் பாறைக்கற்களுடன் ஆறுகள் மற்றும் உறைய வைக்கும் பனி என இந்த பயணம் ஒரு வழியாக 10 நாட்களுக்கு பிறகு காரகோரம் பாஸ் பகுதியில் நிறைவு பெற்றுள்ளது.

லடாக் பகுதியில் பைக்கில் செல்வதே இவ்வளவு ஆபத்தானதா...? இந்திய இராணுவ வீரர்கள் உண்மையில் கிரேட்...

இந்த பயணத்தில் மொத்தம் பதினொரு பேர் பங்கேற்றுள்ளனர். இதில் ஆறு இந்திய இராணுவ வீரர்களும், நான்கு ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களும், ஹிமாலயன் மோட்டார்ஸ்போர்ட்ஸ் சங்கத்தை சேர்ந்த ஒருவரும் அடங்குவர். இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த குழுவில் இருவர் பெண்கள்.

லடாக் பகுதியில் பைக்கில் செல்வதே இவ்வளவு ஆபத்தானதா...? இந்திய இராணுவ வீரர்கள் உண்மையில் கிரேட்...

‘ஃபையர் அண்ட் ஃப்யூரி கார்ப்ஸ்' என அழைக்கப்படும் கார்கில் போரின்போது உயிர்நீத்த இந்திய இராணுவத்தை சேர்ந்த 14 வீரர்களை கவுரவிக்கும் வகையில் கொண்டாடப்படும் கார்கில் விஜய் திவாஸின் 20ஆம் ஆண்டுவிழா நடைபெற்ற போது இந்த பயணம் முழு வீச்சில் தொடர்ந்து கொண்டு தான் இருந்துள்ளது.

லடாக் பகுதியில் பைக்கில் செல்வதே இவ்வளவு ஆபத்தானதா...? இந்திய இராணுவ வீரர்கள் உண்மையில் கிரேட்...

இந்த பயணத்திற்கான ரைடர்கள் ஹிமாச்சல பிரதேசத்தில் பல விதமான சோதனைகளுக்கு பிறகே தேர்வு செய்யப்பட்டனர். மோட்டார்சைக்கிளில் சென்ற இவர்களுக்கே எவ்வாறான கஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை இந்த வீடியோவில் அறிய முடிகிறது. ஆனால் எந்தவொரு வாகனமும் இல்லாமல் சென்று அன்று போரிட்டு வெற்றி கண்டு, இன்று தொடர்ந்து பணியில் ஈடுப்பட்டு வரும் இராணுவ வீரர்கள் நித்தமும் பாராட்டப்பட வேண்டியவர்களே.

Most Read Articles
English summary
Indian Army rides RE Himalayan to Karakoram Pass near India-China border
Story first published: Sunday, June 28, 2020, 3:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X