இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய இந்தியன் மோட்டார்சைக்கிள்கள்... விபரம் வெளியீடு!

பிஎஸ்-6 எஞ்சின் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. எந்தெந்த மாடல்கள் வர இருக்கின்றன என்பது குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய இந்தியன் மோட்டார்சைக்கிள்கள்... விபரம் வெளியீடு!

அமெரிக்காவை சேர்ந்த இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் பிரிமீயம் வகை க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் உலக அளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. பிரம்மாண்டமான இந்தியன் மோட்டார்சைக்கிள்கள் பார்ப்போரை பிரம்மிக்க வைக்கும் வகையில் உள்ளன. தோற்றத்தில் மட்டுமின்றி, தொழில்நுட்ப அளவிலும் இந்தியன் மோட்டார்சைக்கிள்கள் முன்மாதிரியாக உள்ளன.

இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய இந்தியன் மோட்டார்சைக்கிள்கள்... விபரம் வெளியீடு!

இந்த நிலையில், கால மாற்றத்திற்கு தக்கவாறு இந்தியன் மோட்டார்சைக்கிள்கள் பல புதிய அம்சங்களுடன் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு, 2021 மாடல்களாக மேம்படுத்தப்பட்டு இருக்கும் புதிய மோட்டார்சைக்கிள்களை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக இந்தியன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய இந்தியன் மோட்டார்சைக்கிள்கள்... விபரம் வெளியீடு!

தண்டர்ஸ்ட்ரோக், பவர்ப்ளஸ் மற்றும் ஸ்கவுட் வரிசையிலான மாடல்கள் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் விரைவில் இந்தியாவில் களமிறக்கப்பட உள்ளதாக இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய இந்தியன் மோட்டார்சைக்கிள்கள்... விபரம் வெளியீடு!

ஸ்கவுட் குடும்ப வரிசையில் இந்தியன் ஸ்கவுட் பாபர், பாபர் ட்வென்ட்டி ஆகிய மாடல்கள் வர இருக்கின்றன. முழுமையான க்ரூஸர் மார்க்கெட்டில் இந்தியன் சீஃப் விண்டேஜ் மற்றும் இந்தியன் சீஃப் விண்டேஜ் டார்க் ஹார்ஸ் ஆகிய மாடல்களும் வர இருக்கின்றன.

இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய இந்தியன் மோட்டார்சைக்கிள்கள்... விபரம் வெளியீடு!

பேகர் எனப்படும் வகையில் இந்தியன் ஸ்பிரிங்ஃபீல்டு, இந்தியன் ஸ்பிரிங்ஃபீல்டு டார்க் ஹார்ஸ், இந்தியன் சீஃப்டெயின் லிமிடேட் மற்றும் இந்தியன் சீஃப்டெயின் டார்க் ஹார்ஸ் ஆகிய மாடல்கள் களமிறக்கப்பட உள்ளன.

இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய இந்தியன் மோட்டார்சைக்கிள்கள்... விபரம் வெளியீடு!

டூரிங் செக்மென்ட்டில் இந்தியன் ரோட்மாஸ்டர், இந்தியன் ரோட்மாஸ்டர் லிமிடேட் மற்றும் இந்தியன் ரோட்மாஸ்டர் டார்க் ஹார்ஸ் ஆகிய மாடல்கள் வர இருக்கின்றன. சேலஞ்சர் வரிசையில் சாம்பியன் எஃப்டிஆர் 1200எஸ் ஆகிய மாடல்களும் வர இருக்கின்றன.

இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய இந்தியன் மோட்டார்சைக்கிள்கள்... விபரம் வெளியீடு!

இந்த மோட்டார்சைக்கிள்கள் புதிய வண்ணத் தேர்வுகள், வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவற்றுடன் வசீகரிக்கும். ரோட்மாஸ்டர் வரிசையில் ஆப்பிள் கார் ப்ளே செயலியை சப்போர்ட் செய்யும் வசதி வழங்கப்பட உள்ளது.

இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய இந்தியன் மோட்டார்சைக்கிள்கள்... விபரம் வெளியீடு!

ரோட்மாஸ்டர் லிமிடேட், ரோட்மாஸ்டர் டார்க் ஹார்ஸ் மாடல்களில் புதிய க்ளிமா கமாண்ட் ரோக் என்ற உயர் வகை இருக்கை அமைப்பும் இடம்பெற்றுள்ளது. சீதோஷ்ண நிலைக்கு தக்கவாறு குளிர்ச்சியாகவும், வெதுவெதுப்பாகவும் மாற்றிக் கொள்ள சிறப்பு கமாண்ட் தொழில்நுட்பத்துடன் இது கொடுக்கப்படுகிறது.

Most Read Articles

English summary
American two-wheeler manufacturer, Indian Motorcycle, today announced that they will roll out their new and advanced 2021 lineup of motorcycles in the country soon. The brand has also added Scout Bobber Twenty, Roadmaster Limited & Vintage Dark Horse to the India portfolio.
Story first published: Tuesday, October 27, 2020, 20:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X