கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புதிய எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்கிறது ஒகினவா... எப்போது தெரியுமா?

ஒகினவா நிறுவனம் புதிய மின்சார பைக்கை எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது? என்பது உறுதியாக தெரியவந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புதிய எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்கிறது ஒகினவா... எப்போது தெரியுமா?

ஒகினவா ஆட்டோடெக் பிரைவேட் லிமிடெட் (Okinawa Autotech Pvt Ltd) என்பது 100 சதவீத இந்திய மின்சார வாகன ஸ்டார்ட்அப் நிறுவனமாகும். இந்நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இடைப்பட்ட ஆண்டுகளில், வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் மின்சார இரு சக்கர வாகன செக்மெண்ட்டில் புகழ்பெற்ற நிறுவனமாக ஒகினவா உருவெடுத்துள்ளது.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புதிய எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்கிறது ஒகினவா... எப்போது தெரியுமா?

ஒகினவா நிறுவனத்தின் தொழிற்சாலை ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டில் இருந்து, பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில், பல உயர்ந்த மற்றும் குறைந்த வேகம் கொண்ட மின்சார இரு சக்கர வாகனங்களை ஒகினவா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புதிய எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்கிறது ஒகினவா... எப்போது தெரியுமா?

லீட்-ஆஸிட் பேட்டரி கொண்ட ரிட்ஜ் 30 (Ridge 30) முதல் லித்தியம் அயான் பேட்டரி கொண்ட ஐ-ப்ரைஸ்+ (i-Praise+) வரை பல்வேறு தயாரிப்புகள் இதில் அடங்கின்றன. அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டப்படி ஒகினவா செயல்படுகிறது. தற்போதைய நிலையிலேயே 92 சதவீத அளவிற்கு உள்ளூர்மயமாக்கப்பட்ட உற்பத்தியை ஒகினவா வழங்குகிறது.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புதிய எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்கிறது ஒகினவா... எப்போது தெரியுமா?

வரும் மாதங்களில் இந்த சதவீதம் இன்னும் அதிகரிக்க இருப்பது மகிழ்ச்சிகரமான விஷயம். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில், மின்சார மேக்ஸி ஸ்கூட்டர் ஒன்றை ஒகினவா நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது. மேலும் புதிய மின்சார மோட்டார்சைக்கிள் ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஒகினவா நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புதிய எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்கிறது ஒகினவா... எப்போது தெரியுமா?

ஒகினவா நிறுவனம் புதிய தயாரிப்புகளை சந்தையில் அறிமுகம் செய்வதற்கு முன்னதாக அந்நிறுவனத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான ஜிதேந்தர் சர்மாவிடம் உரையாடுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. ஒகினவா நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் என்னென்ன? சந்தைக்கு வரவுள்ள புதிய தயாரிப்புகள் என்னென்ன? என்பது உள்பட ஒரு சில கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம்.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புதிய எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்கிறது ஒகினவா... எப்போது தெரியுமா?

இந்திய சந்தையில், குறிப்பாக மின்சார வாகன செக்மெண்ட்டில் கொரோனா வைரஸ் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது? என்பது போன்ற கேள்விகளையும் அவரிடம் எழுப்பினோம். அவரிடம் நடத்தப்பட்ட நேர்காணலை, கேள்வி-பதில் பாணியில் இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புதிய எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்கிறது ஒகினவா... எப்போது தெரியுமா?

கேள்வி: இந்தியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் ஒகினவா நிறுவன தயாரிப்புகளின் விற்பனை எப்படி உள்ளது?

பதில்: ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின், 2000க்கும் மேற்பட்ட வாகனங்களை நாங்கள் விற்பனை செய்துள்ளோம். வாகனங்களின் விற்பனை உயர்ந்துள்ளது என்பதை இந்த எண்கள் தெளிவுபடுத்துகின்றன.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புதிய எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்கிறது ஒகினவா... எப்போது தெரியுமா?

கேள்வி: ஊரடங்கிற்கு பின்னர், மக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா?

பதில்: கொரோனா அச்சம் காரணமாக மக்கள் பொது போக்குவரத்தில் இருந்து சொந்த வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். வாகனங்களின் விற்பனை அதிகரிப்பிற்கு இது ஒரு காரணமாக உள்ளது. அத்துடன் மின்சார வாகனங்களை பற்றியும் மக்கள் நன்கு தெரிந்து வைத்திருப்பதால், மின்சார வாகனங்களும் அவர்களால் தேர்ந்து எடுக்கப்படுகிறது.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புதிய எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்கிறது ஒகினவா... எப்போது தெரியுமா?

கேள்வி: கொரோனா வைரஸ் பிரச்னை, விற்பனை இலக்குகளில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது? 2020-21 நிதியாண்டிற்கான புதிய இலக்கு என்ன?

பதில்: எங்களின் இலக்குகளை பற்றி கொரோனா வைரஸ் மீண்டும் யோசிக்க வைத்துள்ளது. தற்போதைய நிலையில் நாங்கள் விரிவாகத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். எனவே இரண்டாம் காலாண்டிற்கு பின், இந்த எண்ணிக்கைகளை பகிர்வோம்.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புதிய எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்கிறது ஒகினவா... எப்போது தெரியுமா?

கேள்வி: தற்போதைய நிலையில் ஒகினவா நிறுவனத்திற்கு எத்தனை டீலர்ஷிப்கள் உள்ளன? வரும் மாதங்களில் அந்த எண்ணிக்கையை விரிவாக்கம் செய்யும் திட்டங்கள் உள்ளனவா?

பதில்: தற்போதைய நிலையில் நாடு முழுவதும் ஒகினவா நிறுவனத்திற்கு 350க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்கள் உள்ளன. டீலர்ஷிப்களின் எண்ணிக்கையை தற்போது வேகமாக அதிகரித்து வருகிறோம். நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை 500 ஆக உயர்த்த இலக்கு வைத்துள்ளோம்.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புதிய எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்கிறது ஒகினவா... எப்போது தெரியுமா?

கேள்வி: வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு, டெஸ்ட் ரைடுகளை வழங்குதல் உள்பட ஊரடங்கிற்கு பின் டீலர்ஷிப்களின் செயல்பாடுகள் எப்படி மாறியுள்ளன?

பதில்: மக்களின் பாதுகாப்பிற்குதான் நாங்கள் அதிக முன்னுரிமை கொடுக்கிறோம். என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்? என்ற வழிமுறைகளை அனைத்து டீலர்ஷிப்களுக்கும் ஒகினவா வழங்கியுள்ளது. பெரும்பாலான டீலர்ஷிப்கள் 25 சதவீத ஊழியர்களுடன் மட்டும்தான் இயங்குகின்றன. டீலர்ஷிப்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் எங்களின் தயாரிப்புகளும் தொழிற்சாலைகளில் கிருமி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றை பெற்றதும், டீலர்ஷிப்களிலும் கிருமி நீக்கம் செய்யப்படுகிறது.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புதிய எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்கிறது ஒகினவா... எப்போது தெரியுமா?

கேள்வி: ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மத்தியில் தற்போது ஆன்லைன் விற்பனை தளங்கள் வழக்கமாகி வருகின்றன. ஒகினவா நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களின் வரவேற்பு எப்படி உள்ளது?

பதில்: நேரடி தொடர்பை குறைக்க வேண்டும் என்பதற்காக வாகனங்களுக்கான முன்பதிவை ஆன்லைனில் ஏற்று வருகிறோம். நிச்சயமாக ஆன்லைனில் நல்ல வரவேற்பு உள்ளது. மக்கள் சௌகரியமாக தங்கள் வீட்டில் அமர்ந்தபடியே மின்சார வாகனங்களை முன்பதிவு செய்கின்றனர். ஒகினவா ஆன்லைன் விற்பனை தளமானது, கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. அப்போதில் இருந்து நாங்கள் 500க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளோம்.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புதிய எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்கிறது ஒகினவா... எப்போது தெரியுமா?

கேள்வி: க்ரூஸர் மேக்ஸி-ஸ்கூட்டரை 2020 ஆட்டோ எக்ஸ்போவில் ஒகினவா காட்சிக்கு வைத்திருந்தது. அதனை விரைவாக விற்பனைக்கு அறிமுகம் செய்வது குறித்த திட்டங்கள் உள்ளனவா?

பதில்: க்ரூஸர் மேக்ஸி-ஸ்கூட்டர் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புதிய எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்கிறது ஒகினவா... எப்போது தெரியுமா?

கேள்வி: தயாரிப்புகள் அடிப்படையில் ஒகினவாவிடம் இருந்து அடுத்து என்ன வரப்போகிறது? புதிய மின்சார மோட்டார்சைக்கிளை நாங்கள் விரைவாக எதிர்பார்க்கலாமா?

பதில்: எங்களின் அடுத்த தயாரிப்பாக புதிய மின்சார பைக், நடப்பாண்டு பண்டிகை காலத்தில் விற்பனைக்கு வரும். ஒகினவா நிறுவனத்தால் 100 சதவீதம் உள்ளூர்மயமாக்கப்பட்ட உற்பத்தியை இது கொண்டிருக்கும். தற்போது வரை அதிகபட்சமாக 92 சதவீதம் உள்ளூர்மயமாக்கப்பட்ட உற்பத்தியை நாங்கள் வழங்கி வருகிறோம்.

இதற்கு மேல் வேறு எந்த மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமும் உள்ளூர்மயமாக்கப்பட்ட உற்பத்தியை கொண்டிருக்கவில்லை. வரும் மாதங்களில் மின்சார பைக்கை அறிமுகம் செய்யும்போது, 100 சதவீதம் உள்ளூர்மயமாக்கப்பட்ட உற்பத்தி நிலையை அடைவோம். இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை முன்னணி நிறுவனங்களிடம் இது ஊக்குவிக்கும் என நம்புகிறோம்.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புதிய எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்கிறது ஒகினவா... எப்போது தெரியுமா?

கேள்வி: ஒகினவா நிறுவனத்தின் தயாரிப்பு பணி எப்படி உள்ளது? புதிய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளனவா? உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகளை அமைக்கும் திட்டங்கள் உள்ளதா?

பதில்: அரசின் வழிகாட்டுதல்களின்படி உற்பத்தி பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளோம். ராஜஸ்தானில் வரும் ஆண்டில் புதிய ஆலையை தோற்றுவிக்கும் திட்டம் எங்களுக்கு உள்ளது. தேவை உயர்ந்து கொண்டே வருவதால், எங்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

Most Read Articles
English summary
Interview With Okinawa Founder And Managing Director Jeetender Sharma. Read in Tamil
Story first published: Monday, September 14, 2020, 19:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X