அட்டகாசமான லாம்ப்ரெட்டா ஜி325 ஸ்பெஷல் மின்சார ஸ்கூட்டர்... இதன் இந்திய தரிசனம் எப்போது தெரியுமா...?

லாம்ப்ரெட்டா ஜி325 ஸ்பெஷல் மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில் மிக விரைவில் விற்பனைக்கு வரவிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

அட்டகாசமான லாம்ப்ரெட்டா ஜி325 ஸ்பெஷல் மின்சார ஸ்கூட்டர்... இதன் இந்திய தரிசனம் எப்போது தெரியுமா...?

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் சாலையை விரைவில் மின்வாகனங்கள் ஆளவிருக்கின்றன. இதற்கு சான்றாக அண்மைக் காலங்களாக அதிகரித்து வரும் எலெக்ட்ரிக் வாகனங்களின் அறிமுகமே முக்கிய சான்று.

அட்டகாசமான லாம்ப்ரெட்டா ஜி325 ஸ்பெஷல் மின்சார ஸ்கூட்டர்... இதன் இந்திய தரிசனம் எப்போது தெரியுமா...?

அதற்கேற்ப வகையில், இந்தியாவின் ஆரம்பநிலை மின்வாகன உற்பத்தி நிறுவனங்கள் முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரை அதன் புத்தம் புதிய தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன.

அட்டகாசமான லாம்ப்ரெட்டா ஜி325 ஸ்பெஷல் மின்சார ஸ்கூட்டர்... இதன் இந்திய தரிசனம் எப்போது தெரியுமா...?

இந்நிலையில், லாம்ப்ரெட்டா அதன் ஜி325 ஸ்பெஷல் மின்சார ஸ்கூட்டரை மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஸ்கூட்டரை அந்நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மிலான் வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. இதுவே, அந்த ஸ்கூட்டர் காட்சிக்குள்ளாகிsயது முதல் முறையாகும். ஆனால், அப்போது காட்சிப்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் பெட்ரோலால் இயங்கும் மாடல் ஆகும்.

அட்டகாசமான லாம்ப்ரெட்டா ஜி325 ஸ்பெஷல் மின்சார ஸ்கூட்டர்... இதன் இந்திய தரிசனம் எப்போது தெரியுமா...?

ஆனால், இதன் மின்சார ரக ஸ்கூட்டரே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணியில் தீவிரம் காட்டி வரும் அந்நிறுவனம், அதனை 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த வரும் கிரேட்டர் நொய்டாவில் 2020ம் ஆண்டிற்கான ஆட்டோ எக்ஸ்போ நடைபெறவிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

அட்டகாசமான லாம்ப்ரெட்டா ஜி325 ஸ்பெஷல் மின்சார ஸ்கூட்டர்... இதன் இந்திய தரிசனம் எப்போது தெரியுமா...?

இந்த மின்சார ஸ்கூட்டரின் டிசைனைப் பற்றி பார்க்கையில், அது ரெட்ரோ ஸ்டைலில் காணப்படுகின்றது. ஆனால், அதில் உள்ள சிறப்பம்சங்கள் வரும்கால இளம் தலைமுறையினர் கவர்கின்ற வகையில் இருக்கின்றது. குறிப்பாக எல்இடி மின் விளக்குகல், முன்பக்க ஃபெண்டர் மற்றும் ஸ்கூட்டரை கையாளும் கருவிகள் உள்ளிட்டவை பிரம்மிப்பை ஏற்படுத்துகின்ற வகையில் இருக்கின்றன.

அட்டகாசமான லாம்ப்ரெட்டா ஜி325 ஸ்பெஷல் மின்சார ஸ்கூட்டர்... இதன் இந்திய தரிசனம் எப்போது தெரியுமா...?

இந்த மின்சார ஸ்கூட்டரில் கார்களில் காணப்படுவதைப் போன்ற ஏர் இன்டேக்கர் ஸ்கூட்டரின் முன்பக்க ஃபெண்டரில் காட்சியளிக்கின்றது. இது ஸ்நவுட் ஷேப்பில் வடிவைக்கப்பட்டுள்ளது.

அட்டகாசமான லாம்ப்ரெட்டா ஜி325 ஸ்பெஷல் மின்சார ஸ்கூட்டர்... இதன் இந்திய தரிசனம் எப்போது தெரியுமா...?

முக்கியமாக இந்த ஸ்கூட்டரின் பாடி ஸ்டீல் மோனோக்யூவால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இதன் பக்காவட்டு பேனல்களை மிக சுலபமாக ரீபிளேஸ் செய்து கொள்ள முடியும். இத்துடன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், லாம்ப்ரெட்டோ லோகோ என மினு மினுக்கும் விளக்கு உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கின்றன.

அட்டகாசமான லாம்ப்ரெட்டா ஜி325 ஸ்பெஷல் மின்சார ஸ்கூட்டர்... இதன் இந்திய தரிசனம் எப்போது தெரியுமா...?

லாம்ப்ரெட்டா இந்தியச் சந்தையில் நல்ல வரவேற்பை பெறும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கின்றது. ஏனென்றால், இந்த மின்சார இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமான ரெட்ரோ ஸ்டைலில் களமிறங்க இருக்கின்றது. இத்துடன், பிரிமியம் வசதிகளைக் கொண்டதாகவும் இது இந்தியாவில் களம் காணவிருக்கின்றது.

அட்டகாசமான லாம்ப்ரெட்டா ஜி325 ஸ்பெஷல் மின்சார ஸ்கூட்டர்... இதன் இந்திய தரிசனம் எப்போது தெரியுமா...?

இதன் வருகையை கடந்த 2018ம் ஆண்டே உறுதி செய்த நிலையில், நடப்பாண்டு முதல் இந்த மின்சார ஸ்கூட்டர்கள் இந்திய சாலையில் அதன் பயணத்தை தொடங்க இருக்கின்றது.

அட்டகாசமான லாம்ப்ரெட்டா ஜி325 ஸ்பெஷல் மின்சார ஸ்கூட்டர்... இதன் இந்திய தரிசனம் எப்போது தெரியுமா...?

இத்தாலி நாட்டைச் சேர்ந்த இந்நிறுவனம் ஏற்கனவே மும்பையில் அதன் பிளாணட்டை நிறுவியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இங்குதான் இந்த ஜி325 மின்சார ஸ்கூட்டர்களின் உற்பத்தி நடைபெறவிருக்கின்றது. இங்கு தயாரிக்கப்படும் ஸ்கூட்டர்கள் இந்தியா மட்டுமின்றி ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

அட்டகாசமான லாம்ப்ரெட்டா ஜி325 ஸ்பெஷல் மின்சார ஸ்கூட்டர்... இதன் இந்திய தரிசனம் எப்போது தெரியுமா...?

இந்த ஸ்கூட்டரின் ரேஞ்ச் மற்றும் சிறப்பு தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், இதன் வருகை தற்போது இந்தியர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. லாம்ப்ரெட்டா நிறுவனம் ஏற்கனவே சர்வதேச சந்தையில் வி50 ஸ்பெஷல், வி125 ஸ்பெஷ் மற்றும் வி200 ஸ்பெஷல் ஆகிய ஸ்கூட்டர்களை விற்பனைச் செய்து வருகின்றது.

Most Read Articles
English summary
Italian Firm Lambretta G325 Special e-Scooter India Debut 2020 Auto Expo. Read In Tamil.
Story first published: Monday, January 13, 2020, 19:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X