இத்தாலி நாட்டை சேர்ந்த எலக்ட்ரிக் பைக்குகள்... இந்திய ரூபாயில் விலையை கேட்டால் ஷாக்காயிடுவீங்க...

இத்தாலி நாட்டை சேர்ந்த மோட்டார்சைக்கிள் ப்ராண்ட்டான சொரியானோ மோட்டாரி தனது முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக சொரியானி இவி கியாகுவாரோ மாடலை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக்கை பற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இத்தாலி நாட்டை சேர்ந்த எலக்ட்ரிக் பைக்குகள்... இந்திய ரூபாயில் விலையை கேட்டால் ஷாக்காயிடுவீங்க...

சொரியானோ மோட்டாரியின் கியாகுவாரோ எலக்ட்ரிக் பைக்கானது வி1ஆர், வி1எஸ் மற்றும் வி1 காரா என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் அறிமுகமாகவுள்ளது. இந்த அனைத்து வேரியண்ட்களும் ஸ்போர்ட்ஸ் பைக்கிற்கான ஸ்டைலையும், நேர்த்தியான கிர்டர் டைப் முன்புற சஸ்பென்ஷன் டிசைனையும் பெற்றிருக்கும்.

இத்தாலி நாட்டை சேர்ந்த எலக்ட்ரிக் பைக்குகள்... இந்திய ரூபாயில் விலையை கேட்டால் ஷாக்காயிடுவீங்க...

அதேபோல் பைக்கின் ப்ரேக் டிஸ்க்கும், 6-பிஸ்டன் ப்ரேக் காலிபர் மூலமாக ஹைட்ராலிக் டிஸ்க் உடன் பிணைக்கப்பட்டு வித்தியாசமான டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கியாகுவாரோ எலக்ட்ரிக் பைக்கை முன்னதாக கடந்த ஆண்டு இறுதியில் இத்தாலியில் நடைபெற்ற ஐக்மா கண்காட்சியில் சொரியோனா நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது.

MOST READ: பிரபல அரசியல்வாதிகளின் இந்த செயல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம்... இவர்களா இப்படி?

இத்தாலி நாட்டை சேர்ந்த எலக்ட்ரிக் பைக்குகள்... இந்திய ரூபாயில் விலையை கேட்டால் ஷாக்காயிடுவீங்க...

இந்த எலக்ட்ரிக் பைக்கின் மூன்று வேரியண்ட்களிலும் சொரியோனா நிறுவனத்தின் இரட்டை-ஃப்ளக்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பில் இரு மோட்டார்களும் பெட்டகம் வடிவில் இணைக்கப்பட்டுள்ளன.

இத்தாலி நாட்டை சேர்ந்த எலக்ட்ரிக் பைக்குகள்... இந்திய ரூபாயில் விலையை கேட்டால் ஷாக்காயிடுவீங்க...

எலக்ட்ரிக் மோட்டாரின் இரு புறங்களும் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ இயங்ககூடியவை. நகர்புற சாலைகளுக்கு பைக் ஒரு எலக்ட்ரிக் மோட்டார் மூலமாக இயங்கினாலே போதுமானது. அதுவே இரு மோட்டார்களும் ஒரே நேரத்தில் இயங்கினால் பைக் சிறப்பான செயல்திறனை வழங்கும்.

MOST READ: நிலைமை கை மீறி செல்கிறது... கொரோனாவை சமாளிக்க முடியாமல் குஜராத் அரசு திடீர் முடிவு... மக்கள் கலக்கம்

இத்தாலி நாட்டை சேர்ந்த எலக்ட்ரிக் பைக்குகள்... இந்திய ரூபாயில் விலையை கேட்டால் ஷாக்காயிடுவீங்க...

கியாகுவாரோ எலக்ட்ரிக் பைக் சிங்கிள் சார்ஜில் 150கிமீ தூரமும், அதிகப்பட்சமாக 180kmph என்ற வேகத்திலும் இயங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பைக்கின் மற்ற அம்சங்கள் குறித்த தகவல்கள் இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள ஐக்மா கண்காட்சியில் வெளியிடப்படலாம்.

இத்தாலி நாட்டை சேர்ந்த எலக்ட்ரிக் பைக்குகள்... இந்திய ரூபாயில் விலையை கேட்டால் ஷாக்காயிடுவீங்க...

ஆனால் எப்படியிருந்தாலும், 6-அச்சு நிலைமாற்ற அளவீட்டு அலகு (இனர்ஷியல் மெஷர்மெண்ட் யூனிட்- IMU), ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், உணர்வுதிறன் மிகுந்த ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் மற்றும் 3-ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளிட்டவற்றை நிச்சயம் இந்த பைக்கில் எதிர்பார்க்கலாம்.

MOST READ: வாகனங்களால் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை!

இத்தாலி நாட்டை சேர்ந்த எலக்ட்ரிக் பைக்குகள்... இந்திய ரூபாயில் விலையை கேட்டால் ஷாக்காயிடுவீங்க...

கியாகுவாரோவின் எலக்ட்ரிக் பைக்கின் வி1ஆர் வேரியண்ட் 25,000 யூரோவிலும் (ரூ.21.45 லட்சம்), வி2எஸ் வேரியண்ட் 30,500 யூரோவிலும் (ரூ.26.17 லட்சம்), டாப் வேரியண்ட்டான வி1 காரா 32,500 யூரோவிலும் (ரூ.27.89 லட்சம்) விலையினை பெறவுள்ளன. கியாகுவாரோவின் எலக்ட்ரிக் பைக்கின் வி1ஆர் வேரியண்ட் 25,000 யூரோவிலும் (ரூ.21.45 லட்சம்), வி2எஸ் வேரியண்ட் 30,500 யூரோவிலும் (ரூ.26.17 லட்சம்), டாப் வேரியண்ட்டான வி1 காரா 32,500 யூரோவிலும் (ரூ.27.89 லட்சம்) விலையினை பெறவுள்ளன.

Most Read Articles

English summary
Soriano Motori Giaguaro Electric Motorcycle Unveiled
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X