ஜாவா 300 மற்றும் 42 பிஎஸ்6 பைக் மாடல்களின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியானது

ஜாவா 300 மற்றும் ஜாவா 42 பைக்குகளின் பிஎஸ்6 மாடல்களின் முக்கிய தொழில்நுட்ப விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஜாவா பிஎஸ்6 பைக் மாடல்களின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியானது

கடந்த ஏப்ரல் 1ந் தேதி முதல் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, பிஎஸ்6 எஞ்சினுடன் கார், பைக்குகளை அறிமுகப்படுத்துவதில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தீவிரமாக இறங்கி உள்ளன.

ஜாவா பிஎஸ்6 பைக் மாடல்களின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியானது

இந்த நிலையில், கொரோனா பிரச்னை காரணமாக, சில நிறுவனங்கள் பிஎஸ்6 மாடல்களை குறித்த நேரத்தில் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜாவா நிறுவனம் கடந்த மார்ச் மாதமே தனது ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளின் பிஎஸ்6 மாடல்களை அறிமுகப்படுத்தியது. ஆனால், கெராோனா பிரச்னை காரணமாக, பிஎஸ்6 மாடல்களின் டெலிவிரியை தாமதப்படுத்தி உள்ளது.

ஜாவா பிஎஸ்6 பைக் மாடல்களின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியானது

தற்போது ஊரடங்கு விதிகளில் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளதால், வர்த்தக செயல்பாடுகள் படிப்படியாக மேம்பட்டு வருவதால், பிஎஸ்6 மாடல்களை கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஜாவா நிறுவனமும் தனது பிஎஸ்6 மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது.

ஜாவா பிஎஸ்6 பைக் மாடல்களின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியானது

ஜாவா பிஎஸ்6 பைக்குகளின் டெலிவிரி பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ள நிலையில், ஜாவா 300 மற்றும் ஜாவா 42 பிஎஸ்6 மாடல்களின் தொழில்நுட்ப விபரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு பைக்குகளிலும் ஒரே எஞ்சின்தான் பயன்படுத்தப்படுவது தெரிந்த விஷயம்தான்.

ஜாவா பிஎஸ்6 பைக் மாடல்களின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியானது

இந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள தொழில்நுட்ப விபரங்களின் மூலமாக, இந்த இரண்டு பைக்குகளின் பிஎஸ்6 மாடல்களின் எடை 2 கிலோ வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, எஞ்சின் செயல்திறன் சற்றே குறைந்துள்ளது.

ஜாவா பிஎஸ்6 பைக் மாடல்களின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியானது

ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளில் ஒரு சிலிண்டர் அமைப்புடைய 293 சிசி எஞ்சின் உள்ளது. திரவ குளிர்விப்பு தொழில்நுட்பம் கொண்ட இந்த எஞ்சின் அதிகபட்சமாக 26.2 பிஎச்பி பவரையும், 27.05 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பிஎஸ்4 மாடல்களைவிட 0.8 பிஎச்பி பவரும், .95 என்எம் டார்க் திறனும் குறைந்துள்ளது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஜாவா பிஎஸ்6 பைக் மாடல்களின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியானது

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக எஞ்சின் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு இணையாக விலையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஜாவா 300 பிஎஸ்6 மாடலுக்கு ரூ.1.73 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்4 மாடலைவிட ரூ.9,000 விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜாவா பிஎஸ்6 பைக் மாடல்களின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியானது

அதேபோன்று, ஜாவா 42 பிஎஸ்6 மாடலுக்கு ரூ.1.83 லட்சமும் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்4 மாடலைவிட ரூ.10,000 கூடுதல் விலையில் பிஎஸ்6 மாடல் கிடைக்கும். ஜாவா 42 பைக் மாடலானது சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் டியூவல் சேனல் ஏபிஎஸ் என இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஜாவா #jawa motorcycles
English summary
The Jawa & the Jawa Forty-Two BS6 motorcycles specification have been revealed by the company. Both motorcycles become slightly heavier with a drop in power and torque figures as compared to their BS4 counterparts.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X