பெராக் பைக்கிற்கு ஸ்பெஷல் டெஸ்ட் டிரைவ் வாய்ப்பை வழங்கிய ஜாவா நிறுவனம்!

பதிய பெராக் பைக்கிற்கு சிறப்பு டெஸ்ட் டிரைவ் நிகழ்ச்சியை நாட்டின் முக்கிய நகரங்களில் நடத்தியுள்ளது ஜாவா நிறுவனம். கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

பெராக் பைக்கிற்கு ஸ்பெஷல் டெஸ்ட் டிரைவ் வாய்ப்பை வழங்கிய ஜாவா நிறுவனம்!

ஜாவா நிறுவனத்தின் மூன்றாவது பைக் மாடலாக பெராக் கடந்த நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. பாபர் எனப்படும் வடிவமைப்பு வகையில் வர இருக்கும் இந்த புதிய பைக் வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

பெராக் பைக்கிற்கு ஸ்பெஷல் டெஸ்ட் டிரைவ் வாய்ப்பை வழங்கிய ஜாவா நிறுவனம்!

ரூ.1.94 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த பைக்கிற்கு கடந்த 1ந் தேதி முதல் முன்பதிவும் துவங்கி நடந்து வருகிறது. முன்பதிவு செய்வதற்கு கடும் போட்டி நிலவியதால், ஜாவா இணையதள பக்கம் முடங்கியது. வரும் ஏப்ரல் 2ந் தேதி முதல் டெலிவிரி கொடுக்கப்பட இருக்கிறது.

பெராக் பைக்கிற்கு ஸ்பெஷல் டெஸ்ட் டிரைவ் வாய்ப்பை வழங்கிய ஜாவா நிறுவனம்!

இந்த பைக்கிற்கான டெஸ்ட் டிரைவ் வாய்ப்பும் வாடிக்கையாளர்களுக்கு ஜாவா டீலர்களில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெராக் பைக்கை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் முழுமையான ஓட்டி பார்க்கும் வகையில், சிறப்பு டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பை ஜாவா வழங்கியது.

பெராக் பைக்கிற்கு ஸ்பெஷல் டெஸ்ட் டிரைவ் வாய்ப்பை வழங்கிய ஜாவா நிறுவனம்!

அதாவது, Perak Friday என்ற பெயரில் சிறப்பு டெஸ்ட் டிரைவ் நிகழ்ச்சிக்கு ஜாவா ஏற்பாடு செய்திருந்தது. சென்னை, பெங்களூர், கொல்கத்தா, கொச்சி, ஆமதாபாத், டெல்லி, மும்பை, புனே மற்றும் சண்டிகர் நகரங்களில் இந்த சிறப்பு டெஸ்ட் டிரைவ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பெராக் பைக்கிற்கு ஸ்பெஷல் டெஸ்ட் டிரைவ் வாய்ப்பை வழங்கிய ஜாவா நிறுவனம்!

இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜாவா பெராக் பைக்கை வாடிக்கையாளர்கள் நகரம் முழுவதும் ஓட்டிச் சென்று வருவதற்கான வாய்ப்பு கொடுக்கப்ட்டது.

பெராக் பைக்கிற்கு ஸ்பெஷல் டெஸ்ட் டிரைவ் வாய்ப்பை வழங்கிய ஜாவா நிறுவனம்!

ஏற்கனவே வகுக்கப்பட்ட திட்டமிட்ட வழித்தடத்தில் பெராக் பைக்கை வாடிக்கையாளர்கள் முழுமையாக ஓட்டி பார்த்தனர். இந்த பெராக் ஃப்ரைடே நிகழ்ச்சியில், ஜாவா 300 மற்றும் ஜாவா 42 உரிமையாளர்களும் தங்களது பைக்குளுடன் கலந்து கொண்டு அணி வகுத்தனர்.

பெராக் பைக்கிற்கு ஸ்பெஷல் டெஸ்ட் டிரைவ் வாய்ப்பை வழங்கிய ஜாவா நிறுவனம்!

முதலில் பெராக் பைக்குகளும், அதனை பின்தொடர்ந்து ஜாவா 300 மற்றும் ஜாவா 42 பைக் உரிமையாளர்களும் அணி வகுத்து சென்றனர். இந்த சிறப்பு டெஸ்ட் டிரைவ் நிகழ்ச்சி ஜாவா உரிமையாளர்களுக்கும், பெராக் பைக்கை வாங்க இருப்பவர்களுக்கும் புதிய அனுபவத்தையும், உற்சாகத்தையும் அளிப்பதாக அமைந்தது.

பெராக் பைக்கிற்கு ஸ்பெஷல் டெஸ்ட் டிரைவ் வாய்ப்பை வழங்கிய ஜாவா நிறுவனம்!

ஒரேநேரத்தில் ஏராளமான ஜாவா பைக்குகள் அணி வகுத்து சென்றது எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தது. அத்துடன், இந்த அணி வகுப்பு மூலமாக ஜாவா பைக்குகளை மேலும் பிரபலப்படுத்தும் வகையிலும் அமைந்தது.

பெராக் பைக்கிற்கு ஸ்பெஷல் டெஸ்ட் டிரைவ் வாய்ப்பை வழங்கிய ஜாவா நிறுவனம்!

இந்த நிகழ்ச்சியில் அந்தந்த நகரங்களில் உள்ள ஜாவா உரிமையாளர்கள் குழுக்களும் இணைந்து கொண்டன. இந்த சிறப்பு டெஸ்ட் டிரைவ் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துவதற்கும் ஜாவா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பெராக் பைக்கிற்கு ஸ்பெஷல் டெஸ்ட் டிரைவ் வாய்ப்பை வழங்கிய ஜாவா நிறுவனம்!

எனவே, பெராக் பைக்கை ஓட்டி பார்க்கவும், ஏற்கனவே ஜாவா பைக்கை வைத்திருப்பவர்கள் கலந்து கொள்வதற்கும் ஜாவா நிறுவனத்தின் சமூக வலைத்தளங்களை பின்தொடர்ந்து தெரிந்து கொள்ள முடியும். இல்லையெனில், அருகிலுள்ள டீலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Most Read Articles

மேலும்... #ஜாவா #jawa motorcycles
English summary
Jawa Motorcycles has introduced a new test drive program for customers to test ride the Jawa Perak across city streets at night.
Story first published: Monday, January 13, 2020, 12:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X