ஜாவா பைக் கனவை நினைவாக்க இதுதான் சரியான நேரம்!! குறைந்த மாதத்தவணை திட்டம் அறிவிப்பு

தனது அனைத்து மோட்டார்சைக்கிள்களுக்கும் ஜாவா நிறுவனம் குறைந்த இஎம்ஐ தேர்வுகளையும் உறுதியான டெலிவிரிகளையும் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜாவா பைக் கனவை சொந்தமாக்க இதுதான் சரியான நேரம்!! குறைந்த மாதத்தவணை திட்டம் அறிவிப்பு

பண்டிகை காலத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகை அறிவிப்புகளின் மூலம் வாடிக்கையாளர்கள் மிகவும் கவர்ச்சிகரமான மாதத்தவணை திட்டங்களில் ஜாவா பைக்கை பெறலாம். இதில் மிக குறைந்த மாதத்தவணை தொகையாக ரூ.4444 கொண்டுவரப்பட்டுள்ளது.

ஜாவா பைக் கனவை சொந்தமாக்க இதுதான் சரியான நேரம்!! குறைந்த மாதத்தவணை திட்டம் அறிவிப்பு

இந்த பண்டிகை காலங்களில் ஜாவா மோட்டார் சைக்கிள்களின் விநியோகமும் வழங்கப்படும், அதாவது இப்போது முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த பண்டிகை காலத்தில் டெலிவரி கிடைக்கும். அவர்கள் இப்போது நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை, ஏனெனில் ஜாவா பைக்குகளுக்கு எப்போதுமே காத்திருப்பு காலம் அதிகம்.

ஜாவா பைக் கனவை சொந்தமாக்க இதுதான் சரியான நேரம்!! குறைந்த மாதத்தவணை திட்டம் அறிவிப்பு

ஜாவா மோட்டார் சைக்கிள் ஆரம்பத்தில் ஒரு வருட காத்திருப்பு காலத்தைக் கொண்டிருந்தது. ஆனால் அதன் பின்னர் அது 5 - 6 மாதங்களாக குறைக்கப்பட்டது. ஆனால் இப்போது அது மேலும் குறைக்கப்படும் என தெரிகிறது. இந்த தசரா பருவத்தில் ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் மொத்தம் 2000க்கும் மேற்பட்ட பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

ஜாவா பைக் கனவை சொந்தமாக்க இதுதான் சரியான நேரம்!! குறைந்த மாதத்தவணை திட்டம் அறிவிப்பு

இருப்பினும், இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். இதுகுறித்து, ஜாவா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அனுபம் தரேஜா பேசுகையில், உங்கள் அருகில் உள்ள டீலர்ஷிப் மையத்திற்கு செல்லுங்கள். நிறுவனம் சமீபத்தில்தான் பல இடங்களில் டீலர்ஷிப்களைத் திறந்துள்ளது.

ஜாவா பைக் கனவை சொந்தமாக்க இதுதான் சரியான நேரம்!! குறைந்த மாதத்தவணை திட்டம் அறிவிப்பு

தற்போது, ​​ஜாவா பிராண்டிற்கு நாட்டில் 163 டீலர்ஷிப்கள் உள்ளன, இந்த ஆண்டு இறுதிக்குள் இதனை 205 ஆக மாற்ற நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் ஏற்கனவே முழு வீச்சில் நடைபெற வேண்டியது. ஆனால் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இந்தியாவில் டீலர்ஷிப்களின் விரிவாக்க வேகம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜாவா பைக் கனவை சொந்தமாக்க இதுதான் சரியான நேரம்!! குறைந்த மாதத்தவணை திட்டம் அறிவிப்பு

இந்த குறைந்த மாதத்தவணை உடனான நிதி தேர்வுகளினால் நவம்பர் மாதத்தில் விற்பனை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று நிறுவனம் நம்புகிறது. சிறிய நகரங்களில் கூட டீலர்ஷிப்கள் கிடைப்பதால், மக்கள் ஜாவா பைக்குகளை எளிதில் பெற முடியும், மேலும் அவர்கள் பைக்கிற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை.

ஜாவா பைக் கனவை சொந்தமாக்க இதுதான் சரியான நேரம்!! குறைந்த மாதத்தவணை திட்டம் அறிவிப்பு

மேலும் சில சிறிய நகரங்களில் புதிய டீலர்ஷிப்களைத் தொடங்கவும் இந்நிறுவனத்திடம் திட்டங்கள் உள்ளன. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் துவங்கவுள்ள தற்போதைய நிலையில், ஜாவா தனது பைக்குகளுக்கு சலுகைகள் மற்றும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த பண்டிகை சலுகையின் கீழ் ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் ஆகிய மோட்டார்சைக்கிள்கள் அடங்குகின்றன.

Most Read Articles

மேலும்... #ஜாவா #jawa motorcycles
English summary
Jawa Offers Assured Deliveries & Low EMI Options
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X