கவாஸாகி பைக்கை வாங்க சரியான நேரம் வந்தாச்சி!! ரூ.50,000 வரையில் சலுகைகள் அறிவிப்பு

ரூ.50,000 வரையிலான சலுகைகளை கவாஸாகி நிறுவனம் அதன் மோட்டார்சைக்கிள்களுக்கு அறிவித்துள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கவாஸாகி பைக்கை வாங்க சரியான நேரம் வந்தாச்சி!! ரூ.50,000 வரையில் சலுகைகள் அறிவிப்பு

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் முடிந்துவிட்டன, வாகனங்களில் தள்ளுபடிகள் இனி கிடைக்காது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், கவாஸாகி இந்தியா உங்களுக்கு ஒரு ஆச்சரியத்தை தந்துள்ளது. அதுதான் இந்த சலுகை அறிவிப்பு.

கவாஸாகி பைக்கை வாங்க சரியான நேரம் வந்தாச்சி!! ரூ.50,000 வரையில் சலுகைகள் அறிவிப்பு

2020 இப்போதுவரை நன்றாகப் போகவில்லை, இல்லையா? இதுவும் இந்த அறிவிப்புக்கு காரணம் தான் இருந்தாலும் மற்றொரு முக்கிய காரணம், பங்குகளை கிளியர் செய்ய அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்து இந்த ஆண்டை ஒரு நல்ல விதமாக முடிக்க வேண்டும் என்ற இந்த ஜப்பானிய நிறுவனத்தின் விரும்பமாகும்.

கவாஸாகி பைக்கை வாங்க சரியான நேரம் வந்தாச்சி!! ரூ.50,000 வரையில் சலுகைகள் அறிவிப்பு

இந்த தள்ளுபடிகள் 1 டிசம்பர் முதல் 31 டிசம்பர் வரை மட்டுமே செல்லுபடியாகும். கவாஸாகியின் கேஎல்எக்ஸ் 110, கேஎல்எக்ஸ் 140 மற்றும் கேஎக்ஸ்100 போன்ற ஆஃப்-ரோடு தயாரிப்புகளுக்கும், டபிள்யூ800, வல்கன் எஸ், இசட்650 மற்றும் வெர்ஸஸ் 650 என்ற பைக்குகளுக்கு மட்டுமே ஆகும்.

கவாஸாகி பைக்கை வாங்க சரியான நேரம் வந்தாச்சி!! ரூ.50,000 வரையில் சலுகைகள் அறிவிப்பு

இதில் கேஎல்எக்ஸ் 110 ஆஃப்-ரோடு மோட்டார்சைக்கிள் ரூ.30,000 வரையிலும், கேஎல்எக்ஸ் 140 மற்றும் கேஎக்ஸ் 100 பைக்குகள் ரூ.40 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் வரையிலும் சலுகைகளை பெற்றுள்ளன. அதுவே கவாஸாகியின் ரெட்ரோ க்ரூஸர் டபிள்யூ800 பைக்கை இந்த மாதத்தில் ரூ.30,000 வரையிலான சலுகைகளுடன் பெறலாம்.

கவாஸாகி பைக்கை வாங்க சரியான நேரம் வந்தாச்சி!! ரூ.50,000 வரையில் சலுகைகள் அறிவிப்பு

வல்கன் எஸ் மற்றும் கவாஸாகியின் 650 ட்வின் பைக்குகளான இசட்650 & வெர்ஸஸ் 650 பைக்குகளுக்கு முறையே ரூ.20,000 மற்றும் ரூ.30,000 வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் நிஞ்சா இசட்எக்ஸ்-10ஆர் மற்றும் இசட்எக்ஸ்-10ஆர்ஆர் பைக்குகளை சமீபத்தில் கவாஸாகி அப்டேட் செய்து வெளியிட்டு இருந்தது.

கவாஸாகி பைக்கை வாங்க சரியான நேரம் வந்தாச்சி!! ரூ.50,000 வரையில் சலுகைகள் அறிவிப்பு

இவை தோற்றத்தில் தற்போது விற்பனையில் உள்ள இந்த பைக்குகளின் தற்போதைய தலைமுறையின் தோற்றத்தின் பரிணாம வளர்ச்சியாக விளங்குகிறது. கவாஸாகி பொறியியலாளர்கள் 2021ஆம் ஆண்டிற்காக பைக்கின் என்ஜின் மற்றும் சேசிஸ் பாகங்களில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளனர்.

கவாஸாகி பைக்கை வாங்க சரியான நேரம் வந்தாச்சி!! ரூ.50,000 வரையில் சலுகைகள் அறிவிப்பு

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு மோட்டார்சைக்கிளில் 998சிசி இன்-லைன் 4-சிலிண்டர் 16-வால்வு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பழைய பைக் போலவே, ஆர்.பி.எம் வரம்பில் பொசிஷனிங் பீக் டார்க்கை அதிகளவில் இந்த என்ஜின் வெளிப்படுத்தும். இது ரைடர்ஸ் நம்பிக்கையுடன் குண்டு குழியுமான சாலையில் பைக்கை இயக்க உதவியாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki India Is Offering Year-end Discounts of Up To INR 50,000
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X