கவாஸாகி நின்ஜா650 பைக்கில் புதிய வண்ணத் தேர்வு அறிமுகம்!

கவாஸாகி நின்ஜா650 பைக்கில் புதிய வண்ணத் தேர்வு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

கவாஸாகி நின்ஜா650 பைக்கில் புதிய வண்ணத் தேர்வு அறிமுகம்!

நடுத்தர வகை ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களில் கவாஸாகி நின்ஜா650 பைக் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. வடிவமைப்பு, எஞ்சின், விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை அளித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த மே மாதம் கவாஸாகி நின்ஜா650 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

கவாஸாகி நின்ஜா650 பைக்கில் புதிய வண்ணத் தேர்வு அறிமுகம்!

இந்த புதிய மாடலானது பியர்ல் ஃப்ளாட் ஸ்டார்டஸ்ட் மற்றும் லைன் எபோனி ஆகிய இரண்டு வண்ணத் தேர்வுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில், எபோனி வண்ணத் தேர்வு வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றதாக இருந்து வருகிறது.

கவாஸாகி நின்ஜா650 பைக்கில் புதிய வண்ணத் தேர்வு அறிமுகம்!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வை வழங்கும் விதத்தில், இந்த பைக்கில் தற்போது மூன்றாவது வண்ணத் தேர்வும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. லைம் க்ரீன் வரிசையில் புதிய பாடி கிராஃபிக்ஸ் மற்றும் வண்ணக் கலவையுடன் இந்த மாடல் வந்துள்ளது.

கவாஸாகி நின்ஜா650 பைக்கில் புதிய வண்ணத் தேர்வு அறிமுகம்!

ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எபோனி வண்ணத் தேர்விலிருந்து சற்று மாறுபடும் வகையில் வண்ணக் கலவையில் வந்துள்ளது. பச்சை மற்றும் மேட் க்ரே வண்ணக் கலவைகள் இடம்பெற்றுள்ளன. அதேநேரத்தில் பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் டிசைன் மாறுபடுகிறது.

கவாஸாகி நின்ஜா650 பைக்கில் புதிய வண்ணத் தேர்வு அறிமுகம்!

புதிய கவாஸாகி நின்ஜா 650 பைக்கில் 649சிசி பேரலல் ட்வின் லிக்யூடு கூல்டு எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 66 பிஎச்பி பவரையும், 64 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 17 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கவாஸாகி நின்ஜா650 பைக்கில் புதிய வண்ணத் தேர்வு அறிமுகம்!

இந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. 17 அங்குல அலாய் வீல்கள், முன்சக்கரத்தில் இரட்டை டிஸ்க்குகள் கொண்ட பிரேக் சிஸ்டம், பின்புறத்தில் சிங்கிள் டிஸ்க் பிரேக் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இந்த பைக்கின் முக்கிய பாதுகாப்பு அம்சமாக உள்ளது.

கவாஸாகி நின்ஜா650 பைக்கில் புதிய வண்ணத் தேர்வு அறிமுகம்!

இந்த புதிய மாடலுக்கும் ரூ.6.24 லட்சம்தான் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், குறிப்பிட்ட கவாஸாகி டீலர்களில் மட்டுமே இந்த புதிய வண்ணத் தேர்வு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் ஹோண்டா சிபிஆர்650ர் பிஎஸ்6 மாடலுக்கு இது போட்டியாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki has introduced Ninja 650 with all new colour option in India
Story first published: Thursday, September 17, 2020, 13:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X