Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 6 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 7 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 8 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த கவாஸாகி பைக் இந்தியாவிற்கு வந்தால் ராயல் என்பீல்டு பைக்குகள் எல்லாம் காலி!! பைக்கின் பெயர் மெகுரோ கே3...
ஜப்பானிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான கவாஸாகி, மெகுரோ கே3 என்ற மாடர்ன்-கிளாசிக் மோட்டார்சைக்கிளை சர்வதேச அளவில் வெளியிட்டுள்ளது. இந்த பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கவாஸாகி நிறுவனம் 1937ல் இருந்து 1960 வரையில் மெகுரோ மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் அதன்பின் அவை 1964ல் கவாஸாகி ஹெவி இண்டஸ்ட்ரீஸ்-ஆல் நிறுத்தப்பட்டுவிட்டன.

இந்த பழமையான பெயர்பலகை தான் தற்போது மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. மெகுரோ மோட்டார்சைக்கிள்கள் அந்த காலத்தில் மிக பிரபலமான கவாஸாகி தயாரிப்புகளாக விளங்கியுள்ளதால், புதிய மெகுரா கே3, அப்போதைய மெகுரோ முத்திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பைக்கின் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப், டெயில்லேம்ப் மற்றும் டர்ன்-சிக்னல் இண்டிகேட்டர்களில் பழமையான தொடுதல்கள் மின்னுகின்றன. இருப்பினும் இரட்டை-பேட் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற மாடர்ன் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

கவாஸாகி மெகுரோ கே3 பைக்கில் ஏர்-கூல்டு, இணையான-இரட்டை சிலிண்டர், எஸ்ஒஎச்சி 773சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 6500 ஆர்பிஎம்-ல் 51 பிஎச்பி மற்றும் 4800 ஆர்பிஎம்-ல் 62 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

வழக்கமான ஸ்விங்-ஆர்ம் செட்அப் உடன் இரட்டை-தொட்டில் ஃப்ரேம் உபயோகித்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த மோட்டார்சைக்கிளின் மொத்த எடை 277 கிலோ மற்றும் பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு 15 லிட்டர் ஆகும். இருக்கை அமைப்பு ஒற்றை துண்டாகவும், பைக்கை சுற்றிலும் பல பகுதிகளில் க்ரோமும் வழங்கப்பட்டுள்ளன.

சஸ்பென்ஷன் அமைப்பாக முன்பக்கத்தில் வழக்கமான 41மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் இரட்டை-ஷாக் செட்அப்-மும் கொடுக்கப்பட்டுள்ளன. ப்ரேக்கிங் பணியினை கவனிக்க முன் & பின் சக்கரங்களில் முறையே 320மிமீ மற்றும் 270மிமீ-களில் டிஸ்க் ப்ரேக்குகள் உள்ளன.

பேனல்கள் அதிகளவில் இன்றி நாக்டு மோட்டார்சைக்கிளான கவாஸாகி மெகுரோ கே3 பைக்கில் இரட்டை-சேனல் ஏபிஎஸ் மற்றும் பல நிலை கொண்ட ட்ராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் போன்ற எலக்ட்ரானிக் ரைடர் தொகுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

கவாஸாகி நிறுவனம் இந்த பைக்கை ஜப்பானில் 2021ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் விற்பனைக்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றப்படி இந்தியா உள்பட மற்ற வெளிநாட்டு சந்தைகளுக்கு மெகுரோ கே3-இன் வருகை குறித்த எந்த தகவலும் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து இதுவரை வெளியிடப்படவில்லை.