கவாஸாகி பைக்குகளின் கணிசமாக விலை உயர்கிறது... விபரம் உள்ளே!

வரும் ஜனவரி 1 முதல் கவாஸாகி பைக்குகளின் விலை கணிசமாக உயர்த்தப்பட உள்ளது. எந்தெந்த பைக் மாடல்களுக்கு எவ்வளவு விலை உயர்த்தப்பட உள்ளது என்பது குறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

கவாஸாகி பைக்குகளின் கணிசமாக விலை உயர்கிறது... விபரம் உள்ளே!

கொரோனா பிரச்னையால் வாகன நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி கண்டு வருவதால், வாகன நிறுவனங்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளன. இந்த நிலையில், உற்பத்தி செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வரும் ஜனவரி 1 முதல் பல வாகன நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்துள்ளன.

கவாஸாகி பைக்குகளின் கணிசமாக விலை உயர்கிறது... விபரம் உள்ளே!

அந்த வரிசையில், இந்தியாவின் பிரிமீயம் பைக் மார்க்கெட்டில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கவாஸாகி, விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.20,000 வரை தனது பைக்குகளின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

கவாஸாகி பைக்குகளின் கணிசமாக விலை உயர்கிறது... விபரம் உள்ளே!

அதன்படி, கவாஸாகி இசட்900 மற்றும் வெர்சிஸ் 1000 ஆகிய பைக் மாடல்களின் விலை ரூ.20,000 வரை அதிகரிக்கப்பட உள்ளது. வல்கன் எஸ், நின்ஜா மற்றும் வெர்சிஸ் 650 மற்றும் நின்ஜா 1000எஸ்எக்ஸ் ஆகிய பைக்குகளின் விலை ரூ.15,000 வரை அதிகரிக்கப்பட உள்ளது.

கவாஸாகி பைக்குகளின் கணிசமாக விலை உயர்கிறது... விபரம் உள்ளே!

கவாஸாகி நிறுவனத்தின் இசட்650 மற்றும் டபிள்யூ800 பைக்குகளின் விலை ரூ.10,000 வரை அதிகரிக்கப்பட உள்ளது.

கவாஸாகி பைக்குகளின் கணிசமாக விலை உயர்கிறது... விபரம் உள்ளே!

எனினும், கவாஸாகி நிறுவனத்தின் கேஎக்ஸ் மற்றும் கேஎல்எக்ஸ் ஆகிய ஆஃப்ரோடு ரக பைக் மாடல்களின் விலை அதிகரிக்கப்படாது. தொடர்ந்து தற்போதைய விலையிலேயே விற்பனை செய்யப்படும்.

கவாஸாகி பைக்குகளின் கணிசமாக விலை உயர்கிறது... விபரம் உள்ளே!

இதனிடையே, இருப்பில் உள்ள பைக்குகளை டிசம்பருக்குள் விற்று தீர்க்கும் விதமாக, சிறப்பு தள்ளுபடி சலுகைகளையும் கவாஸாகி வழங்குகிறது. கவாஸாகி கேஎல்எக்ஸ்40ஜி பைக்கிற்கு ரூ.40,000 வரையிலும், கேஎக்ஸ்100 பைக்கிற்கு ரூ.50,000 வரையிலும் தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது.

கவாஸாகி பைக்குகளின் கணிசமாக விலை உயர்கிறது... விபரம் உள்ளே!

கவாஸாகி வல்கன் எஸ் பைக்கிற்கு ரூ.20,000 வரையிலும், டபிள்யூ800 பைக்கிற்கு ரூ.30,000 வரையிலும், இசட்650 மற்றும் வெர்சிஸ் 650 மாடல்களுக்கு ரூ.30,000 வரையிலும் டிசம்பர் தள்ளுபடி பெறும் வாய்ப்பு இருக்கிறது.

கவாஸாகி பைக்குகளின் கணிசமாக விலை உயர்கிறது... விபரம் உள்ளே!

வரும் 31ந் தேதி வரை இந்த சிறப்புத் தள்ளுபடி சலுகைகளை பெற முடியும் என்று கவாஸாகி நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும், தள்ளுபடி சலுகைகள் டீலருக்கு டீலர் மாறுபடும் வாய்ப்பு இருப்பதால், கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள கவாஸாகியின் அங்கீகரிக்கப்பட்ட டீலரை தொடர்பு கொண்டு தள்ளுபடி விபரங்களை கேட்டுத் தெரிந்து கொள்வது அவசியம்.

Most Read Articles
--

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki To Hike Bike Prices Upto Rs.20,000 in India.
Story first published: Thursday, December 24, 2020, 10:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X