வெறும் 1.30 லட்ச ரூபாய்க்கு புதிய கவாஸாகி பைக் கிடைத்தால் எப்படி இருக்கும்? விரைவில் அது நடக்கலாம்

கவாஸாகி டபிள்யூ175 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வெறும் 1.30 லட்ச ரூபாய்க்கு புதிய கவாஸாகி பைக் கிடைத்தால் எப்படி இருக்கும்? விரைவில் அது நடக்கலாம்

கவாஸாகி நிறுவனம் தனது எண்ட்ரி-லெவல் டபிள்யூ175 (W175) மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக கடந்த மாதம் தகவல்கள் வெளிவந்தன. இது மிகவும் விலை குறைந்த மோட்டார்சைக்கிள் என்பதால், கவாஸாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால் நாம் நினைப்பதற்கு முன்பாகவே இந்த பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் தென்பட்டுள்ளன.

வெறும் 1.30 லட்ச ரூபாய்க்கு புதிய கவாஸாகி பைக் கிடைத்தால் எப்படி இருக்கும்? விரைவில் அது நடக்கலாம்

ஆம், கவாஸாகி டபிள்யூ175 மோட்டார்சைக்கிள் தற்போது இந்தியாவில் சாலை சோதனை செய்யப்பட்டு வருகிறது. மஹாராஷ்டிர மாநிலம் புனேவிற்கு அருகே சோதனை செய்யப்படும்போது அந்த பைக் கேமரா கண்களில் சிக்கியுள்ளது. கவாஸாகி டபிள்யூ175 மோட்டார்சைக்கிள் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும்போது முதல் முறையாக கேமரா கண்களில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

வெறும் 1.30 லட்ச ரூபாய்க்கு புதிய கவாஸாகி பைக் கிடைத்தால் எப்படி இருக்கும்? விரைவில் அது நடக்கலாம்

இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து போன்ற ஆசிய சந்தைகளில், கவாஸாகி டபிள்யூ175 மோட்டார்சைக்கிள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்திய சந்தையில் இந்த பைக் அறிமுகம் செய்யப்படும்பட்சத்தில் மிக சவாலான விலையை கவாஸாகி நிறுவனம் நிர்ணயம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 ரிவியூ... ப்ளஸ் என்ன? மைனஸ் என்ன? விரிவாக அலசும் வீடியோ!

ஆனால் டபிள்யூ175 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வது தொடர்பாக கவாஸாகி நிறுவனம் தற்போது வரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. என்றாலும் கவாஸாகி டபிள்யூ175 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெறும் 1.30 லட்ச ரூபாய்க்கு புதிய கவாஸாகி பைக் கிடைத்தால் எப்படி இருக்கும்? விரைவில் அது நடக்கலாம்

டபிள்யூ175 மோட்டார்சைக்கிளை கவாஸாகி நிறுவனம் ரெட்ரோ டிசைனில் வடிவமைத்துள்ளது. அதற்கேற்ப வட்ட வடிவ ஹாலோஜென் ஹெட்லேம்ப், வட்ட வடிவ ரியர் வியூ மிரர்கள் ஆகியவை இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் கவாஸாகி இந்தியா நிறுவனத்தின் லைன்-அப்பில் ஒரே ஒரு 'W' மோட்டார்சைக்கிள் மட்டுமே உள்ளது.

வெறும் 1.30 லட்ச ரூபாய்க்கு புதிய கவாஸாகி பைக் கிடைத்தால் எப்படி இருக்கும்? விரைவில் அது நடக்கலாம்

அது டபிள்யூ800 ஆகும். இந்த பைக்கின் விலை 6,99,000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். அதே நேரத்தில் கவாஸாகி டபிள்யூ175 பைக்கின் முன் பகுதியில் டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் ட்ரம் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் டபிள்யூ175 பைக்கில் ஏபிஎஸ் பிரேக் வசதி கிடையாது.

வெறும் 1.30 லட்ச ரூபாய்க்கு புதிய கவாஸாகி பைக் கிடைத்தால் எப்படி இருக்கும்? விரைவில் அது நடக்கலாம்

ஆனால் இந்திய சந்தையில் இந்த பைக் விற்பனைக்கு வரும்பட்சத்தில், இந்திய அரசின் விதிமுறைகளின்படி ஏபிஎஸ் பிரேக் வசதி வழங்கப்பட வேண்டும். எனவே ஏபிஎஸ் வசதியை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம். இந்த பைக்கில், 177 சிசி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெறும் 1.30 லட்ச ரூபாய்க்கு புதிய கவாஸாகி பைக் கிடைத்தால் எப்படி இருக்கும்? விரைவில் அது நடக்கலாம்

இந்த இன்ஜின் 7,500 ஆர்பிஎம்மில் 12.9 ஹெச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 13.2 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படலாம். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டபிள்யூ175 பைக்கை, கவாஸாகி நிறுவனம் இந்திய சந்தையில் சுமார் 1.30 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விலை நிர்ணயம் செய்யப்படும் பட்சத்தில், ராயல் என்பீல்டு புல்லட் 350 மாடலுக்கு நேரடி போட்டியாளராக கவாஸாகி டபிள்யூ175 இருக்கும்.

Image Courtesy: Instagram

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki W175 Spotted For The First Time In India. Read in Tamil
Story first published: Friday, November 20, 2020, 18:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X