கவாஸாகி டபிள்யூ175 பைக் இந்தியாவில் சோதனை ஓட்டம்... வருகை உறுதியாகிறது!

கவாஸாகி நிறுவனத்தின் புதிய டபிள்யூ175 பைக் இந்தியாவில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் ஸ்பை படங்கள் முதல்முறையாக வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 கவாஸாகி டபிள்யூ175 பைக் இந்தியாவில் சோதனை ஓட்டம்... வருகை உறுதியாகிறது!

கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் வலுவான சந்தையை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக பல புதிய மாடல்களை களமிறக்கி வருகிறது. இந்த நிலையில், தனது டபிள்யூ175 என்ற புதிய மோட்டார்சைக்கிள் மாடலை இந்தியாவில் களமிறக்கும் முயற்சிகளில் கவாஸாகி இறங்கி இருக்கிறது.

 கவாஸாகி டபிள்யூ175 பைக் இந்தியாவில் சோதனை ஓட்டம்... வருகை உறுதியாகிறது!

இந்த புதிய டபிள்யூ175 மோட்டார்சைக்கிள் முதல்முறையாக இந்தியாவில் வைத்து சோதனை செய்யப்படும் படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக வெளியாகி இருக்கிறது.

 கவாஸாகி டபிள்யூ175 பைக் இந்தியாவில் சோதனை ஓட்டம்... வருகை உறுதியாகிறது!

புதிய கவாஸாகி டபிள்யூ175 மோட்டார்சைக்கிள் பாரம்பரிய டிசைன் அம்சங்கள் கொண்ட மோட்டார்சைக்கிளாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் மிக எளிமையாக உள்ளது. இந்த புதிய மோட்டார்சைக்கிளில் வட்ட வடிவிலான ஹெட்லைட், டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் டெயில் லைட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது.

 கவாஸாகி டபிள்யூ175 பைக் இந்தியாவில் சோதனை ஓட்டம்... வருகை உறுதியாகிறது!

இந்த மோட்டா்சைக்கிளில் 13.5 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. வட்ட வடிவிலான ரியர் வியூ மிரர்கள், ஒற்றை இருக்கை அமைப்பு ஆகியவற்றுடன் பாரம்பரிய டிசைன் அம்சங்களை அப்படியே கண் முன் நிறுத்துகிறது.

 கவாஸாகி டபிள்யூ175 பைக் இந்தியாவில் சோதனை ஓட்டம்... வருகை உறுதியாகிறது!

இந்த மோட்டார்சைக்கிளில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் இரட்டை ஸ்பிரிங் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 110 மிமீ டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

 கவாஸாகி டபிள்யூ175 பைக் இந்தியாவில் சோதனை ஓட்டம்... வருகை உறுதியாகிறது!

வெளிநாடுகளில் ஏபிஎஸ் பிரேக் வசதி இல்லை. ஆனால், இந்தியாவில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெறும். இந்த மோட்டார்சைக்கிளில் 17 அங்குல சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

 கவாஸாகி டபிள்யூ175 பைக் இந்தியாவில் சோதனை ஓட்டம்... வருகை உறுதியாகிறது!

புதிய கவாஸாகி டபிள்யூ175 மோட்டார்சைக்கிளில் 177சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 13 பிஎச்பி பவரையும், 13.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் கார்புரேட்டர் எஞ்சினுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்டதாக மாற்றம் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

 கவாஸாகி டபிள்யூ175 பைக் இந்தியாவில் சோதனை ஓட்டம்... வருகை உறுதியாகிறது!

அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய கவாஸாகி டபிள்யூ175 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் ஆரம்ப ரக பைக் சந்தையில் இந்த புதிய மாடல் குறிப்பிடத்தக்க விற்பனையை பெறுவதற்கு கவாஸாகி திட்டமிட்டுள்ளது.

 கவாஸாகி டபிள்யூ175 பைக் இந்தியாவில் சோதனை ஓட்டம்... வருகை உறுதியாகிறது!

வெளிநாடுகளில் இந்த மோட்டார்சைக்கிள் டியூவல் டோன் வண்ணத் தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று, ஸ்க்ராம்ப்ளர் மற்றும் கஃபே ரேஸர் வெர்ஷன்களிலும் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் முதல்கட்டமாக ஸ்டான்டர்டு வேரியண்ட்டை கவாஸாகி அறிமுகம் செய்யும் என்பது தெரிய வந்துள்ளது.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Rumours were surrounding the arrival of the Kawasaki W175 retro-classic roadster motorcycle in the Indian market. The news has now gained huge momentum as the Kawasaki W175 has been spotted testing for the first time in the Indian market.
Story first published: Saturday, November 21, 2020, 10:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X