கவாஸாகி இசட்900 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

கவாஸாகி இசட்900 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. எஞ்சின் தவிர்த்து பல கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த புதிய மாடல் வந்துள்ளது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

கவாஸாகி இசட்900 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவில் நேக்கட் வகை பிரிமீயம் வகை பைக் மார்க்கெட்டில் கவாஸாகி இசட்900 பைக் மிக முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்6 விதிகளுக்கு இணையான எஞ்சின் மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் இசட்900 பைக் மேம்படுத்தப்பட்டது. கடந்த மார்ச் மாதமே இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்ட இந்த புதிய மாடல் கொரோனாவால் பல மாதங்கள் தள்ளி இப்போதுதான் விற்பனைக்கு வந்துள்ளது.

கவாஸாகி இசட்900 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் பிஎஸ்6 தரத்திற்கு இணையான 4 சிலிண்டர்கள் கொண்ட 948சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 125 பிஎச்பி பவரையும், 98.6 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

கவாஸாகி இசட்900 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

2021 மாடலாக வந்துள்ள புதிய கவாஸாகி இசட்900 பைக்கில் ஸ்போர்ட், ரெயின், ரோடு மற்றும் மேனுவல் என நான்குவிதமான டிரைவிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. இது நிச்சயம் சிறப்பான தொழில்நுட்ப வசதியாக இருக்கும்.

கவாஸாகி இசட்900 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய கவாஸாகி இசட்900 பைக்கில் எல்இடி ஹெட்லைட், எல்இடி இண்டிகேட்டர்கள் மற்றும் டெயில் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. தவிரவும், கலர் டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. விசேஷ மொபைல் அப்ளிகேஷன் கொடுக்கப்படுவதுடன் புளூடூத் இணைப்பு வசதியும் உள்ளது.

கவாஸாகி இசட்900 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

சிறப்பான கையாளுமையை வழங்கும் விதத்தில், இதன் சஸ்பென்ஷனும் மேம்படுத்த்பட்டு இறுக்கிறது. முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன.

கவாஸாகி இசட்900 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

அதேபோன்று, முன்சக்கரத்தில் இரண்டு 300மிமீ பெட்டல் டிஸ்க்குகள் கொண்ட பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் 250 மிமீ பெட்டல் டிஸ்க் கொண்ட பிரேக் சிஸ்டமும் உள்ளது. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் முக்கிய பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கிரது. டன்லப் ஸ்போர்ட்மேக்ஸ் ரோட்ஸ்போர்ட் 2 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கவாஸாகி இசட்900 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய கவாஸாகி இசட்900 பைக் மெட்டாலிக் கிராஃபைட் க்ரே மற்றும் கேண்டி லைம் க்ரீன் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்.

கவாஸாகி இசட்900 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

ரூ.7.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பிஎஸ்4 மாடலைவிட ரூ.29,000 கூடுதல் விலையில் இந்த புதிய மாடல் வந்துள்ளது. ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர் பைக்கிற்கு நேரடி போட்டியாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki has launched Z900 bike with BS6 compliant engine in India and priced Rs.7.99 lakh (Ex-Showroom).
Story first published: Wednesday, September 9, 2020, 10:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X