Just In
- 14 min ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 1 hr ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 2 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Movies
மார்ச் மாதம் இல்லையாம்.. மோகன்லாலின் அந்த மெகா பட்ஜெட் பட ரிலீஸ் மீண்டும் தள்ளி வைப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- News
150 ஆடுகள், 300 கோழிகள், 2500 கிலோ பிரியாணி அரிசி.. கலகலக்கும் முனியாண்டி திருவிழா.. பின்னணி என்ன?
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2021 கவாஸாகி இசட்900 பிஎஸ்6 பைக்கின் அறிமுகம் குறித்து வெளிவந்த நம்பும்படியான தகவல்...
இந்திய சந்தையில் கவாஸாகி இசட்900 பைக்கிற்கு குறிப்பிடத்தக்க வகையில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் தான் கவாஸாகி நிறுவனம் இந்த 900சிசி பைக்கை பிஎஸ்6 தரத்தில் வெளியிடவுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த பிஎஸ்6 பைக்கின் அறிமுக தேதி குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஆட்டோகார் இந்தியா செய்திதளம் வெளியிட்டுள்ள செய்தியில் 2021 இசட்900 பிஎஸ்6 பைக் இந்த செப்டம்பர் மாத இறுதியில் அறிமுகமாகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்கிரேட்டான எலக்ட்ரானிக்ஸ் தொகுப்புகளுடன் விற்பனைக்கு வரவுள்ள இந்த 2021 பைக் மாடலில் ஹெட்லேம்ப் எல்இடி தரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. இசட்900 பைக்கை முதன்முதலாக கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் கவாஸாகி அறிமுகப்படுத்தியது.
அதனை தொடர்ந்து தற்போது பிஎஸ்6 தரத்தில் அறிமுகமாகவுள்ள இந்த கவாஸாகி பைக்கின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.8.5 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சம் வரையில் எதிர்பார்க்கப்படுகிறது.

2021 இசட்900 பைக்கில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக வழக்கமான 948சிசி, இன்லைன்-4, லிக்யூடு-கூல்டு என்ஜின் தான் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 9500 ஆர்பிஎம்-ல் 123 பிஎச்பி மற்றும் 7700 ஆர்பிஎம்-ல் 98.4 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

இந்த என்ஜினின் பிஎஸ்4 வெர்சன் இத்தகைய ஆற்றல்களை தான் வெளிப்படுத்தினாலும் இதன் பிஎஸ்6 வெர்சனும் இதே ஆற்றலை தான் பைக்கிற்கு வழங்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டு துவக்கத்தில் அப்டேட்களுடன் அறிமுகமான 2020 வெர்சனில் இருந்து பெரும்பான்மையான பாகங்கள் எடுக்கப்பட்டு தான் இதன் 2021 வெர்சன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில்லேம்ப்களில் எல்இடி விளக்குகளையும், இருசக்கரங்களில் அப்டேட்டான சஸ்பென்ஷன் அமைப்பையும் 2021 இசட்900 பெற்று வரவுள்ளது. மேலும் 4.3 இன்ச்சில் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் புதிய இசட்900 பைக் மாடல் ஏற்றுள்ளது.

ப்ளூடூத் வசதி கொண்ட இந்த க்ளஸ்ட்டரை ஓட்டுனர் ‘ரிடியோலாஜி' செயலி மூலமாக தனது ஸ்மார்ட்போன் உடன் இணைத்து கொள்ள முடியும். ஸ்போர்ட், சாலை உள்பட இதன் ட்ரைவிங் மோட்களை மேனுவலாகவும் அமைத்து கொள்ளலாம்.
அதேபோல் இரு வெவ்வேறான என்ஜின் மோட்களையும் இந்த பைக் பெறவுள்ளது. மற்ற எலக்ட்ரானிக் தொகுப்புகளாக பிராண்டின் ட்ராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் ட்யூல்-சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன.

தற்சமயம் கவாஸாகி இசட்900 பைக் ஆனது மெட்டாலிக் கிராஃபைட் க்ரே/மெட்டாலிக் ஸ்பார்க் கருப்பு மற்றும் மெட்டாலிக் ஸ்பார்க் கருப்பு/மெட்டாலிக் ஃப்ளாட் ஸ்பார்க் கருப்பு என்ற இரு நிறத்தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும் இதன் புதிய பிஎஸ்6 வெர்சன் கூடுதலாக சில புதிய நிறங்களை பெற்றுவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக இந்த பிஎஸ்6 பைக் புதிய மாசு உமிழ்வு விதி அமலுக்கு வந்த இந்த வருட ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனாவின் தாக்கத்தினால் சிறிய தாமதத்திற்கு பிறகு விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த கவாஸாகி பைக்கிற்கு சமீபத்தில் அறிமுகமான ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர் இந்திய சந்தையில் முக்கிய போட்டியாக விளங்கும்.