கேடிஎம் ஆர்சி390 பைக்கையே மிஞ்சும் ஆற்றலுடன் கவாஸாகியின் புதிய நிஞ்சா இசட்எக்ஸ்-25ஆர்...

கடந்த சில மாதங்களாக இணையத்தில் வதந்திகள் வெளிவந்ததை அடுத்து கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்-25ஆர் பைக்கின் டைனோ சோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட ஆற்றல் அளவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கேடிஎம் ஆர்சி390 பைக்கையே மிஞ்சும் ஆற்றலுடன் கவாஸாகியின் புதிய நிஞ்சா இசட்எக்ஸ்-25ஆர்...

கவாஸாகியின் இந்த புதிய 250சிசி பைக்கின் ஆற்றல் அளவுகளை ஸ்லொவேனியன் நாட்டை சேர்ந்த எக்ஸாஸ்ட் சிஸ்டம் வடிவமைப்பு நிறுவனமான அக்ரபோவிக் வெளியிட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனம் இசட்எக்ஸ்-25ஆர் பைக்கிற்கு இரு சந்தைக்கு பிறகான எக்ஸாஸ்ட் தேர்வுகளை வழங்கியுள்ளது.

கேடிஎம் ஆர்சி390 பைக்கையே மிஞ்சும் ஆற்றலுடன் கவாஸாகியின் புதிய நிஞ்சா இசட்எக்ஸ்-25ஆர்...

இதில் ஒன்று ஸ்ட்ரீட்-லீகல். மற்றொன்று சந்தைக்கு பிறகு விற்பனை செய்யப்படும் எக்ஸாஸ்ட் சிஸ்டங்களிலேயே முதன்மையானதாக விளங்குகின்ற அக்ரபோவிக். ஏனெனில் இந்த எக்ஸாஸ்ட் அமைப்பு என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கிறது.

கேடிஎம் ஆர்சி390 பைக்கையே மிஞ்சும் ஆற்றலுடன் கவாஸாகியின் புதிய நிஞ்சா இசட்எக்ஸ்-25ஆர்...

எந்த அளவிற்கு என்றால் ஸ்டாக் பைக்குகளின் 42 பிஎச்பி மற்றும் 20.8 என்எம் டார்க் திறனை விட 1.3 பிஎச்பி மற்றும் 0.7 என்எம் டார்க் திறன் கூடுதலாக 15,450 ஆர்பிஎம்-ல் 43.3 பிஎச்பி மற்றும், 12,500 ஆர்பிஎம்-ல் 21.5 என்எம் டார்க் திறனில் அக்ரபோவிக் எக்ஸாஸ்ட் சிஸ்டம் கொண்ட பைக் இயங்கும்.

கேடிஎம் ஆர்சி390 பைக்கையே மிஞ்சும் ஆற்றலுடன் கவாஸாகியின் புதிய நிஞ்சா இசட்எக்ஸ்-25ஆர்...

முன்னதாக இந்த 250சிசி பைக்கின் என்ஜின் 50 பிஎச்பி அல்லது 60 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என வதந்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. இதனால் தற்போது வந்துள்ள தகவல் நிச்சயம் சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தலாம்.

கேடிஎம் ஆர்சி390 பைக்கையே மிஞ்சும் ஆற்றலுடன் கவாஸாகியின் புதிய நிஞ்சா இசட்எக்ஸ்-25ஆர்...

தற்போது வெளிவந்துள்ள ஆற்றல் அளவுகள் பின் சக்கரத்திற்கு என்ஜின் வழங்கும் ஆற்றலாகும். இதனால் என்ஜினின் க்ரான்க்‌ஷாஃப்ட்டில் ஆற்றலின் அளவு 50 பிஎச்பி அளவில் இருக்கக்கூடும். இந்த கிட்டத்தட்ட 10 சதவீத ஆற்றல் இழப்பு கியர்பாக்ஸில் ட்ரான்ஸ்மிஷன் இழப்பு மற்றும் சங்கிலி ட்ரைவ்-ஆல் ஏற்படுகிறது.

கேடிஎம் ஆர்சி390 பைக்கையே மிஞ்சும் ஆற்றலுடன் கவாஸாகியின் புதிய நிஞ்சா இசட்எக்ஸ்-25ஆர்...

இதன்படி பார்க்கும்போது ஸ்டாக் வடிவத்தில் இசட்எக்ஸ்-25ஆர் பைக்கின் க்ரான்க் பவர் எப்படியிருந்தாலும் 45 பிஎச்பி பவரை கடந்திருக்கும். இந்த ஆற்றல் அளவுகளுடன் கேடிஎம் ஆர்சி390 மற்றும் கவாஸாகியின் நிஞ்சா 400 பைக் மாடல்கள் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேடிஎம் ஆர்சி390 பைக்கையே மிஞ்சும் ஆற்றலுடன் கவாஸாகியின் புதிய நிஞ்சா இசட்எக்ஸ்-25ஆர்...

அக்ராபோவிக் சிஸ்டமானது, 8.9 கிலோ எடை கொண்ட ஸ்டாக் எக்ஸாஸ்ட் சிஸ்டத்தை காட்டிலும் 4.4 கிலோ எடை குறைவானது என்பது அதன் கூடுதல் சிறப்பம்சமாகும். இந்த புதிய தகவலின் மூலமாக என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவு மட்டுமின்றி பைக்கின் புதிய ஸ்பை படங்களும் வெளிவந்துள்ளன.

கேடிஎம் ஆர்சி390 பைக்கையே மிஞ்சும் ஆற்றலுடன் கவாஸாகியின் புதிய நிஞ்சா இசட்எக்ஸ்-25ஆர்...

இதில் புதிய இசட்எக்ஸ்-25ஆர் பைக் மாடல் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. ஆனால் கவாஸாகி பைக் என்றாலே பச்சை நிறம் என்பது நமது மனதில் இயல்பாகவே பதிவாகிவிட்டது. இருப்பினும் இந்நிறுவனம் கருப்பு நிறத்தையும் இரண்டாம் கட்ட பெயிண்ட் அமைப்பாக கொண்டுள்ளதன் விளைவாக இந்த 250சிசி பைக்கிற்கு இந்த நிற தேர்வு வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Ninja ZX-25R Power And Torque Revealed! More Powerful Than The KTM RC 390
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X