மீண்டும் சோதனை ஓட்டங்களில் கேடிஎம் 250 அட்வென்ஜெர்... அறிமுகத்தை நெருங்குகிறதா...?

கேடிஎம் நிறுவனத்தின் புதிய அட்வென்ஜெர் ரக பைக் மாடலாக இந்தியாவில் அறிமுகமாகவுள்ள 250 அட்வென்ஜெர், சோதனை ஓட்டத்தின் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மீண்டும் சோதனை ஓட்டங்களில் கேடிஎம் 250 அட்வென்ஜெர்... அறிமுகத்தை நெருங்குகிறதா...?

இந்திய சந்தையில் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்துவரும் கேடிஎம், இந்த வருட துவக்கத்தில் 390 அட்வென்ஜெர் பைக் மாடல் மூலம் சிறிய ரக அட்வென்ஜெர் ஸ்போர்ட்ஸ் பிரிவில் நுழைந்தது.

மீண்டும் சோதனை ஓட்டங்களில் கேடிஎம் 250 அட்வென்ஜெர்... அறிமுகத்தை நெருங்குகிறதா...?

தற்போதுவரை இந்திய சந்தைக்கான இந்த ஆஸ்திரியன் பைக் ப்ராண்ட்டின் ஒரே மற்றும் முதல் அட்வென்ஜெர் மோட்டார்சைக்கிளாக 390 அட்வென்ஜெர் விளங்குகிறது. இந்த நிலையில் தனது குவார்டர்-லிட்டர் அட்வென்ஜெர் ஸ்போர்ட் பைக் மாடல்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த இந்நிறுவனம் முன்வந்துள்ளது.

மீண்டும் சோதனை ஓட்டங்களில் கேடிஎம் 250 அட்வென்ஜெர்... அறிமுகத்தை நெருங்குகிறதா...?

அதன் வெளிப்பாடே 250 அட்வென்ஜெர் இந்த பைக்கின் சோதனை ஓட்டம். இந்திய சாலையில் இந்த அட்வென்ஜெர் பைக் மாடலின் முதல் சோதனை இது கிடையாது. ஏனெனில் இதற்கு முன்பும் புனே அருகே சில முறை இந்த பைக் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் சோதனை ஓட்டங்களில் கேடிஎம் 250 அட்வென்ஜெர்... அறிமுகத்தை நெருங்குகிறதா...?

தற்போதைய சோதனை ஓட்டத்தின் ஸ்பை வீடியோவினை 91வீல்ஸ் செய்தி தளம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவின் மூலம் பார்த்தோமேயானால், சோதனை பைக்கின் டேங்க் எக்ஸ்டென்ஷன்ஸ் 390 அட்வென்ஜெரில் உள்ளதை போலவே காட்சியளிக்கிறது. ஆனால் என்ஜின் 390சிசி பைக்கை காட்டிலும் சற்று சிறியதாக உள்ளது.

மீண்டும் சோதனை ஓட்டங்களில் கேடிஎம் 250 அட்வென்ஜெர்... அறிமுகத்தை நெருங்குகிறதா...?

அதேபோல் டயர்களும் சற்று தடிமனான தோற்றத்தில் உள்ளன. இந்த சோதனை பைக் முழுமையாக மறைப்பால் மறைக்கப்படாததால் 5.0 இன்ச்சில் பொருத்தப்பட்டுள்ள டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் தெளிவாக காட்சியளிக்கிறது. 390 அட்வென்ஜெருக்கு 250 அட்வென்ஜெருக்கும் இடையில் உள்ள மிக பெரிய வித்தியாசம் முன்பகுதி தான்.

மீண்டும் சோதனை ஓட்டங்களில் கேடிஎம் 250 அட்வென்ஜெர்... அறிமுகத்தை நெருங்குகிறதா...?

ஏனெனில் பெரிய 390சிசி பைக்கில் எல்இடி டிஆர்எல்களுடன் எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. அதுவே இந்த 250சிசி பைக்கில் ஹாலோஜன் விளக்குகளே பொருத்தப்பட்டுள்ளன. இயக்கத்திற்கு கேடிஎம் 250 அட்வென்ஜெர் பைக்கில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 248.8சிசி சிங்கிள்-சிலிண்டர், ஃப்யூல்-இன்ஜெக்டட் என்ஜின் வழங்கப்படவுள்ளது.

மீண்டும் சோதனை ஓட்டங்களில் கேடிஎம் 250 அட்வென்ஜெர்... அறிமுகத்தை நெருங்குகிறதா...?

ட்யூக் 250 பைக்கிலும் வழங்கப்பட்டு வருகின்ற இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் அதிகப்பட்சமாக 9000 ஆர்பிஎம்-ல் 30 பிஎச்பி பவரையும், 7250 ஆர்பிஎம்-ல் 24 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. சஸ்பென்ஷன் அமைப்பாக தலைக்கீழான 43மிமீ ஃபோர்க்ஸை முன்புறத்திலும், ப்ரீ-லோடு அட்ஜெஸ்டபிள் மோனோ-ஷாக் அப்சார்பரை பின்புறத்திலும் இந்த பைக் பெறவுள்ளது.

மீண்டும் சோதனை ஓட்டங்களில் கேடிஎம் 250 அட்வென்ஜெர்... அறிமுகத்தை நெருங்குகிறதா...?

ப்ரேக்கிங் பணியை கவனிக்க இரு சக்கரங்களிலும் 320மிமீ மற்றும் 230மிமீ-ல் டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கும். இவற்றுடன் ஆஃப்-ரோடு ஏபிஎஸ்-ஐயும் நிச்சயம் எதிர்பார்க்கலாம். முன்புறத்தில் 19 இன்ச்சிலும் பின்புறத்தில் 17 இன்ச்சிலும் டயர்கள் பொருத்தப்படவுள்ளன. 2019 ஐக்மா கண்காட்சியில் 390 அட்வென்ஜெர் பைக் மாடலுடன் காட்சிப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட இந்த பைக் கடைசி நேரத்தில் காட்சிக்கு வைக்கப்படவில்லை.

மீண்டும் சோதனை ஓட்டங்களில் கேடிஎம் 250 அட்வென்ஜெர்... அறிமுகத்தை நெருங்குகிறதா...?

அதேபோல் இந்த வருட மத்தியில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய இக்கட்டான சூழலினால் இந்த வருட இறுதியிலோ அல்லது அடுத்த துவக்கத்திலோ தான் புதிய கேடிஎம் 250 அட்வென்ஜெர் பைக் அறிமுகமாகும். இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.2.40 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM 250 Adventure Spied On Test In India Once Again; Launching Soon
Story first published: Friday, August 7, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X