விற்பனைக்கே வராத 250 ட்யூக் பைக்கின் விலையை உயர்த்திய கேடிஎம்... காரணத்தை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்!

கேடிஎம் நிறுவனம், விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய மாடல் 250 ட்யூக் பைக்கின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

விற்பனைக்கே வராத 250 ட்யூக் பைக்கின் விலையை உயர்த்திய கேடிஎம்... காரணத்தை கேட்டு ஷாக்கான வாகன பிரியர்கள்!

கேடிஎம் நிறுவனம், அதன் 390 ட்யூக் மாடலின் குறைந்த விலை மாடலாக 250 ட்யூக் மாடலை இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது. இந்த பைக்கின் புதுப்பிக்கப்பட்ட பிஎஸ்6 மாடல் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

விற்பனைக்கே வராத 250 ட்யூக் பைக்கின் விலையை உயர்த்திய கேடிஎம்... காரணத்தை கேட்டு ஷாக்கான வாகன பிரியர்கள்!

இந்நிலையில்தான், இந்த பைக் பற்றிய அதிர்ச்சியான தகவல் தற்போது இணையத்தில் உலா வந்த வண்ணம் இருக்கின்றது. கேடிஎம் நிறுவனம் 250 ட்யூக் பைக்கின் விலையைக் கணிசமாக உயர்த்தி அறிமுகம் செய்ய இருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

விற்பனைக்கே வராத 250 ட்யூக் பைக்கின் விலையை உயர்த்திய கேடிஎம்... காரணத்தை கேட்டு ஷாக்கான வாகன பிரியர்கள்!

இதன்படி, ரூ. 4 ஆயிரம் வரை அப்பைக்கின் விலை உயர இருக்கின்றது. இதன் விலை ரூ. 2.5 லட்சத்தில் இருந்து ரூ. 2.9 லட்சமாக உயர இருக்கின்றது. கேடிஎம் நிறுவனத்தின் இந்த அதிரடி முடிவு அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விற்பனைக்கே வராத 250 ட்யூக் பைக்கின் விலையை உயர்த்திய கேடிஎம்... காரணத்தை கேட்டு ஷாக்கான வாகன பிரியர்கள்!

இந்த திடீர் விலையுயர்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக, புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் பிரீமியம் அம்சங்களே முக்கிய காரணம் என இருக்கின்றது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதி கட்டாயமாக்கப்பட்டது. ஆகையால் இந்தியாவில் விற்பனையில் இருக்கும் அனைத்து வாகனங்களும் அதன் தயாரிப்புகளை புதிய உமிழ்வு விதிக்கு ஏற்ப உயர்த்தி வருகின்றன.

விற்பனைக்கே வராத 250 ட்யூக் பைக்கின் விலையை உயர்த்திய கேடிஎம்... காரணத்தை கேட்டு ஷாக்கான வாகன பிரியர்கள்!

இதனடிப்படையிலேயே கேடிஎம் 250 ட்யூக் பைக்கின் தரம் அண்மையில் உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, கேடிஎம் நிறுவனம் அப்பைக்கின் சிறப்பம்சங்கள் சிலவற்றையும் சமீபத்தில் உயர்த்தியதாக தகவல் வெளியாகின. அதாவது, பிஎஸ்6 தர உயர்வு மட்டுமின்றி புதிய வெர்ஷன் 250 ட்யூக்கை மிகவும் கவர்ச்சியானதாக மாற்றும் விதமாக அதன் அணிகளன்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. அந்தவகையில், அநேகரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எல்இடி மின் விளக்குகள் புதிதாக இந்த பைக்கில் நிறுவப்பட்டிருக்கின்றன.

விற்பனைக்கே வராத 250 ட்யூக் பைக்கின் விலையை உயர்த்திய கேடிஎம்... காரணத்தை கேட்டு ஷாக்கான வாகன பிரியர்கள்!

தற்போது வரை விற்பனையில் இருக்கும் கேடிஎம் 250 ட்யூக் பைக்கில் எல்இடி மின் விளக்கு இடம்பெறாத நிலையேக் காணப்படுகின்றது. அதாவது, ஹாலோஜன் ரக மின் விளக்குகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், புதிய உமிழ்வு விதி பிஎஸ்6 தரத்திற்கு மாறியிருக்கும் 250 ட்யூக் பைக்கில் முகப்பு மின் விளக்கு முதல் டிஆர்எல்கள் வரை எல்இடி தரத்திற்கு உயர்த்தப்பட்டிருக்கின்றன.

விற்பனைக்கே வராத 250 ட்யூக் பைக்கின் விலையை உயர்த்திய கேடிஎம்... காரணத்தை கேட்டு ஷாக்கான வாகன பிரியர்கள்!

இந்த மாற்றமே பைக்கின் விலையுயர்விற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. இதுதவிர வேறெந்த மாற்றங்களும் இந்த பைக்கில் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. ஆகையால், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் அதே எல்சிடி தரத்திலேயே 250 ட்யூக் பைக்கில் காணப்பட இருக்கின்றது. இது, டிஎஃப்டி வண்ண திரையைக் கொண்டதாகும்.

விற்பனைக்கே வராத 250 ட்யூக் பைக்கின் விலையை உயர்த்திய கேடிஎம்... காரணத்தை கேட்டு ஷாக்கான வாகன பிரியர்கள்!

மேலும், இதன் எஞ்ஜினில் பிஎஸ்6 தர மாற்றத்தைத் தவிர வேறெந்த ட்யூனிங்கையும் கேடிஎம் மேற்கொள்ளவில்லை. ஆகையால், 248.8 சிசி திறன் கொண்ட இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 30 பிஎச்பி பவரையும், 24 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

விற்பனைக்கே வராத 250 ட்யூக் பைக்கின் விலையை உயர்த்திய கேடிஎம்... காரணத்தை கேட்டு ஷாக்கான வாகன பிரியர்கள்!

இது பிற 250 சிசி பைக்கைக் காட்டிலும் அதிக திறன் ஆகும். சிங்கிள் சிலிண்டர், ஸ்லிப்பர் கிளட்ச் அம்சத்தைக் கொண்டிருக்கும் இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்குகின்றது. இந்த புதிய மாற்றங்களைக் கொண்ட 250 ட்யூக் பைக் ஏற்கனவே விற்பனையாளர்களின் ஷோரூம்களுக்கு வந்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விற்பனைக்கே வராத 250 ட்யூக் பைக்கின் விலையை உயர்த்திய கேடிஎம்... காரணத்தை கேட்டு ஷாக்கான வாகன பிரியர்கள்!

ஆகையால், விரைவில் இந்த பைக்கின் விற்பனைத் தொடங்கப்படும் என தெரிகின்றது. இந்த புதிய பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிதில் ரூ. 2 லட்சம் என்கின்ற விலையில் கிடைத்து வந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையில்தான் குறிப்பிட்ட மாற்றங்களைக் காரணம் காட்டி கேடிஎம் நிறுவனம் ரூ. 4 ஆயிரம் விலையை உயர்த்தியிருக்கின்றது.

விற்பனைக்கே வராத 250 ட்யூக் பைக்கின் விலையை உயர்த்திய கேடிஎம்... காரணத்தை கேட்டு ஷாக்கான வாகன பிரியர்கள்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிலவி வந்த பொதுமுடக்கத்தின் காரணமாகவே இந்த பைக் சற்று கால தாமதத்தைச் சந்தித்தது. தற்போது இன்னும் ஒரு சில நாட்களிலேயே அது விற்பனைக்கு வரவிருக்கின்றது. எனவே, ட்யூக் ரசிகர்கள் அதன் வரவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு லேசான அதிர்ச்சியை வழங்கும் வகையில் விலையுயர்வு அமைந்திருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM 250 Duke Price To Be Hike Due To LED Headlight Upgradation. Read In Tamil.
Story first published: Thursday, July 30, 2020, 7:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X