கேடிஎம் 390 அட்வென்ஜெரை இனி நகர்புற சாலையிலும் பயன்படுத்தலாம்.. வெளிவந்தது புதிய டீசர் வீடியோ...

கேடிஎம் நிறுவனம் புதிய 390 அட்வென்ஜெர் பைக் மாடலை கடந்த ஜனவரி மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியிருந்தது. சந்தையில் சிறப்பாக விற்பனையாகி வரும் இந்த பைக்கின் புதிய டீசர் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதன் மூலம் வெளிவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

கேடிஎம் 390 அட்வென்ஜெரை இனி நகர்புற சாலையிலும் பயன்படுத்தலாம்.. வெளிவந்தது புதிய டீசர் வீடியோ...

இந்த புதிய டீசர் வீடியோவின் மூலம், கேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக், அட்வென்ஜெர் என்ற டேக்கில் உள்ள ட்யூல் ஸ்போர்ட் (ஆன்-ரோடு & ஆஃப் ரோடு என இரண்டிற்கும் பயன்படுத்தக்கூடிய) மோட்டார்சைக்கிள் என்ற தகவலை கேடிஎம் நிறுவனம் கூறியுள்ளது.

கேடிஎம் 390 அட்வென்ஜெரை இனி நகர்புற சாலையிலும் பயன்படுத்தலாம்.. வெளிவந்தது புதிய டீசர் வீடியோ...

இந்த வீடியோவில் 390 அட்வென்ஜெர் பைக் அகலமான மற்றும் வளைவான திறந்த சாலைகளில் செயல்படுவதை போல் கரடுமுரடான காட்டுவழி சாலைகளிலும் செயல்படுகிறது. இதன் மூலம் கேடிஎம் நிறுவனம் 390 அட்வென்ஜெர் பைக் அனைத்து விதமான சாலைகளுக்கும் ஏற்ற மோட்டார்சைக்கிள் என்பதை நமக்கு தெரியப்படுத்துகிறது.

கேடிஎம் 390 அட்வென்ஜெரை இனி நகர்புற சாலையிலும் பயன்படுத்தலாம்.. வெளிவந்தது புதிய டீசர் வீடியோ...

உலகளாவிய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் 390 அட்வென்ஜெர் பைக் வீடியோவில் காட்டப்பட்டுள்ள மோட்டார்சைக்கிளை விட சற்று வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும். புனேவில் உள்ள பஜாஜின் சாகான் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்ற கேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக் சர்வதேச சந்தையில் உள்ள மாடலில் இருந்து சில வேறுபட்ட மெக்கானிக்கல் பாகங்களை பெற்றுள்ளது.

கேடிஎம் 390 அட்வென்ஜெரை இனி நகர்புற சாலையிலும் பயன்படுத்தலாம்.. வெளிவந்தது புதிய டீசர் வீடியோ...

இந்த வகையில் க்ளோபல் மாடல் பைக்கின் முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ள அட்ஜெஸ்ட்டபிள் சஸ்பென்ஷன் யூனிட்களுக்கு பதிலாக இந்திய வெர்சனில் டபிள்யூபி யூஎஸ்டி ஃபோர்க்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதேபோல் இந்திய மாடலில் மெட்ஸெலர் டூரன்ஸ் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன.

கேடிஎம் 390 அட்வென்ஜெரை இனி நகர்புற சாலையிலும் பயன்படுத்தலாம்.. வெளிவந்தது புதிய டீசர் வீடியோ...

அதுவே க்ளோபல் 390 அட்வென்ஜெர் பைக்கில் காண்டினெண்டல் டிகேசி 70 ரப்பர் டயர்கள் உள்ளன. இதன் இந்திய வெர்சனில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 373.2சிசி லிக்யூடு-கூல்டு டிஒஎச்சி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

கேடிஎம் 390 அட்வென்ஜெரை இனி நகர்புற சாலையிலும் பயன்படுத்தலாம்.. வெளிவந்தது புதிய டீசர் வீடியோ...

அதிகப்பட்சமாக 9,000 ஆர்பிஎம் 43 பிஎச்பி பவரையும் 7,000 ஆர்பிஎம்-ல் 37 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் இந்த என்ஜினுடன் 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு ஸ்லிப்பர் க்ளட்ச் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் இரு வழிகளில் வேகமாக செயல்படுகின்ற ஷிஃப்டரையும் கேடிம் 390 அட்வென்ஜெர் பைக் (390 ட்யூக்கும்) கொண்டுள்ளது.

கேடிஎம் 390 அட்வென்ஜெரை இனி நகர்புற சாலையிலும் பயன்படுத்தலாம்.. வெளிவந்தது புதிய டீசர் வீடியோ...

மற்ற தொழிற்நுட்ப அம்சங்களாக முழுவதும் எல்இடி தரத்திற்கு மாற்றப்பட்ட விளக்குகள், ப்ளூடூத் மற்றும் டர்ன்-பை-டர்ன் வசதிகளை கொண்ட டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் கேடிஎம் மைரைட் ஆப்-ஐ பைக் உடன் இணைக்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதில் மைரைட் ஆப்-ஐ பைக்குடன் இணைக்கும் வசதி கூடுதல் தேர்வு தான்.

கேடிஎம் 390 அட்வென்ஜெரை இனி நகர்புற சாலையிலும் பயன்படுத்தலாம்.. வெளிவந்தது புதிய டீசர் வீடியோ...

இவை மட்டுமின்றி ரைட்-பை-வயர், கார்னரிங் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம்; கார்னர்-சென்ஸிடீவ் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் உடன் இணைக்கப்பட்ட 3-ஆக்ஸிஸ் IMU (பைக்கின் அப்போதைய நிலைப்பாட்டை கணக்கிட்டு காட்டும் யூனிட்), ஆஃப்-ரோட் மோட் மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய விண்ட்ஸ்க்ரீன் போன்றவற்றையும் கேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக் கொண்டுள்ளது.

கேடிஎம் 390 அட்வென்ஜெரை இனி நகர்புற சாலையிலும் பயன்படுத்தலாம்.. வெளிவந்தது புதிய டீசர் வீடியோ...

வெள்ளை மற்றும் ஆரஞ்ச் என்ற இரு நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் கேடிஎம் இந்த அட்வென்ஜெரின் மொத்த கெர்ப் எடை 177 கிலோவாகும். இதன் எரிபொருள் டேங்க் அதிகப்பட்சமாக 14.3 லிட்டர் பெட்ரோலை ஏற்று கொள்ளும். இந்த அட்வென்ஜெர் பைக்கின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் உள்ள அலாய் சக்கரங்கள் முறையே 19-இன்ச் மற்றும் 17-இன்ச் என்ற அளவுகளில் வழங்கப்பட்டுள்ளன.

அலாய் சக்கரங்களுக்கு மாற்றாக 390 அட்வென்ஜெரின் எதிர்கால அப்டேட் வெர்சன்களில் ஸ்போக் சக்கரங்களை வழங்க கேடிஎம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எக்ஸ்ஷோரூமில் ரூ.2.99 லட்சத்தை விலையாக கொண்டுள்ள 390 அட்வென்ஜெர் பைக்கிற்கு பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ், ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பைக்குகள் மட்டுமில்லாமல் வேறு சில எண்ட்ரீ-லெவல் இணையான-இரட்டை என்ஜினை கொண்ட அட்வென்ஜெர் டூரர் பைக்குகளும் போட்டியாக உள்ளன.

கேடிஎம் 390 அட்வென்ஜெரை இனி நகர்புற சாலையிலும் பயன்படுத்தலாம்.. வெளிவந்தது புதிய டீசர் வீடியோ...

இந்த விலை தான் இந்த அட்வென்ஜெர் பைக்கை மிக பிரபலமாக்கியது என்று கூற வேண்டும். ட்யூக், ஆர்சி மற்றும் அட்வென்ஜெர் என மூன்று விதமான வெர்சன்களில் விற்பனையாகி வரும் 390 அட்வென்ஜெர், செயல்படுதிறனில் மிகவும் சிறப்பாக செயல்படுவதால் செலுத்தும் தொகைக்கு ஏற்ற மோட்டார்சைக்கிளாகும்.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM 390 Adventure new TVC video showcases its dual-sport character
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X