கேடிஎம் 390 அட்வென்ஜர் மீண்டும் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்...

புதிய 390 அட்வென்ஜர் பைக்கை இந்திய சந்தையில் இன்னும் சில வாரங்களில் கேடிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. ஏற்கனவே கடந்த மாத துவக்கத்தில் கோவாவில் நடைபெற்ற இந்திய பைக் வார கண்காட்சியில் வாடிக்கையாளர்கள் முன்பு காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த பைக் தொடர்ச்சியாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

கேடிஎம் 390 அட்வென்ஜர் மீண்டும் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்...

அந்த வகையில் தற்போது மீண்டும் இந்த புதிய அட்வென்ஜர் பைக் புனேவிற்கு அருகே சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. டூரிங் மற்றும் ஆப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ற மறைப்புடன் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த பைக்கில் பிளவுப்பட்ட எல்இடி ஹெட்லைட்ஸ், எல்இடி டர்ன் இண்டிகேட்டர்ஸ் மற்றும் ப்ளூடூத் இணைப்பு கொண்ட கலர் டிஏஃப்டி திரை உள்ளிடவை வழங்கப்பட்டுள்ளன.

கேடிஎம் 390 அட்வென்ஜர் மீண்டும் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்...

இந்த புதிய அட்வென்ஜர் பைக் முன்புறத்தில் 19 இன்ச்சிலும் பின்புறத்தில் 17 இன்ச்சிலும் அலாய் சக்கரங்களை கொண்டுள்ளது. இந்த அலாய் சக்கரங்களில் ட்யூல் பர்பஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றுடன் அலுமினியம் ஹேண்டில்பார்ஸ், பிளவுப்பட்ட இருக்கை அமைப்பு மற்றும் எரிபொருள் டேங்க் ஸ்பாய்லர்ஸ் போன்றவற்றையும் இந்த 2020 பைக் பெற்றுள்ளது.

கேடிஎம் 390 அட்வென்ஜர் மீண்டும் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்...

பெட்ரோல் டேங்கை ஒட்டிய ரைடர் இருக்கை ஹேண்டில்பாரில் இருந்து சிறிது தூரமாக அமைக்கப்பட்டுள்ளதால், ஹேண்டில்பாரின் நீளம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. பைக்கின் க்ரவுண்ட் கிளியரென்ஸ் 200 மிமீ ஆகவும், தரையில் இருந்து இருக்கையின் உயரம் 855 மிமீ ஆகவும் உள்ளது.

கேடிஎம் 390 அட்வென்ஜர் மீண்டும் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்...

390 ட்யூக் மற்றும் ஆர்சி390 பைக்குகளில் பொருத்தப்பட்டுள்ள அதே என்ஜின் அமைப்பு தான் இந்த புதிய அட்வென்ஜர் பைக்கிற்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு பைக்குகளிலும் வழங்கப்பட்டுள்ள 373.2சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 44 பிஎச்பி பவரையும் 37 என்எம் டார்க் திறனையும் நிலையான ட்யூல் சேனல் ஏபிஎஸ் உடன் வெளிப்படுத்துகிறது.

கேடிஎம் 390 அட்வென்ஜர் மீண்டும் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்...

சிறந்த ஆப்-ரோடு பயணத்திற்காக ஏபிஎஸ் சிஸ்டத்தை முழுவதும் ஆஃப் செய்யவும் முடியும். சஸ்பென்ஷன் அமைப்புகளாக 43 மிமீ தலைக்கீழான ஃபோர்க்ஸ் மற்றும் 170மிமீ மற்றும் 177 மிமீ அட்ஜெஸ்ட் மோனோஷாக் பின்புறத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. ப்ரேக்கிங்கிற்காக 320 மிமீ சிங்கிள் டிஸ்க் முன் சக்கரத்திலும் 230 மிமீ டிஸ்க் பின்புற சக்கரத்திலும் பொருத்தப்பட்டுள்ளன.

கேடிஎம் 390 அட்வென்ஜர் மீண்டும் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்...

இவற்றுடன் மெல்லிய சென்ஸிடிவ் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் ஆப்-ரோட்டிற்காக கார்னரிங் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளதால் இதன் பிரிவில் உள்ள மற்ற அட்வென்ஜர் பைக்குகளை விட அதிகமான தொழிற்நுட்பங்களை கொண்ட மோட்டார்சைக்கிளாக கேடிஎம் 390 அட்வென்ஜர் அறிமுகமாகவுள்ளது.

கேடிஎம் 390 அட்வென்ஜர் மீண்டும் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்...

கேடிஎம்-ன் 390 ட்யூக் மாடல் பைக் இந்திய சந்தையில் ரூ.2.48 லட்சத்தில் இருந்து விற்பனையாகி வருகிறது. 390 மாடலின் இந்த புதிய அட்வென்ஜர் வெர்சன் ரூ.3- 3.2 லட்சத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்குகளில் வழங்கப்பட்டுள்ள ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ் மற்றும் பிஎஸ்6 அப்டேட் போன்றவை தான் இந்த விலை அதிகரிப்பிற்கு காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

கேடிஎம் 390 அட்வென்ஜர் மீண்டும் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்...

390 அட்வென்ஜர் மட்டுமில்லாமல் 790 மாடலின் அட்வென்ஜர் வெர்சனையும் இந்த ஆண்டில் அறிமுகப்படுத்த கேடிஎம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நான்கு ரைடிங் மோட்களில் அறிமுகமாகவுள்ள இந்த பைக்கின் விலை ரூ.10-11 லட்சத்தில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கேடிஎம் 790 அட்வென்ஜர் பைக்கை பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

கேடிஎம் 390 அட்வென்ஜர் மீண்டும் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்...

கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து 390 அட்வென்ஜர் பைக் தொடர்ந்து சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருவதால் இந்த பைக்கின் இந்திய அறிமுகம் மிக விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 390 அட்வென்ஜர் பைக் அறிமுகத்திற்கு பிறகு பிஎம்டபிள்யூ ஜி310ஜிஎஸ் மற்றும் கவாஸாகி வெர்ஸஸ்-எக்ஸ் 300 போன்ற தனது பிரிவில் உள்ள மற்ற அட்வென்ஜர் வெர்சன் பைக்குகளுடன் போட்டியிட வேண்டும்.

Source: Rushlane

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM 390 Adventure continues testing in India – Spied
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X