Just In
- 2 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 3 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 4 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 5 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புனேவிற்கு அருகே சோதனை... மார்ச் மாதம் விற்பனைக்கு வருகிறது கேடிஎம் 790 அட்வென்ஜர்?
கேடிஎம் 790 அட்வென்ஜர் பைக் வரும் மார்ச் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் கோவாவில் நடைபெற்ற இந்தியா பைக் வீக் நிகழ்ச்சியில், 390 அட்வென்ஜர் பைக்கை கேடிஎம் நிறுவனம் பொது பார்வைக்கு கொண்டு வந்தது. இதன் மூலம் ஒரு முறையான அட்வென்ஜர் டூரர் பைக் எப்படி இருக்கும்? என்பதை இந்திய வாடிக்கையாளர்களுக்கு கேடிஎம் காட்டியது.

அதே இந்திய பைக் வீக் திருவிழாவில் கேடிஎம் 790 அட்வென்ஜர் பைக்கும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கேடிஎம் 790 அட்வென்ஜர் பைக் இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு கொண்டு வரப்படவில்லை. 2020-21ம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் கேடிஎம் 790 அட்வென்ஜர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என 2019ம் ஆண்டு இந்திய பைக் வீக் திருவிழா நடைபெற்றபோது தகவல்கள் வெளிவந்தன.

அந்த காலகட்டம் நெருங்கி வரும் நிலையில், கேடிஎம் நிறுவனம் புனேவிற்கு அருகே 790 அட்வென்ஜர் பைக்கை தற்போது சோதனை செய்ய தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஃபாஸ்ட் பைக்ஸ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. எனவே 2021ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த பைக் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் இன்ஜின்தான் 790 அட்வென்ஜர் பைக்கிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதாவது கேடிஎம் 790 அட்வென்ஜர் பைக்கில், 799 சிசி பேரலல்-ட்வின் இன்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கேடிஎம் 790 ட்யூக் பைக்குடன் ஒப்பிடும்போது, வித்தியாசமான ட்யூனிங்கில் இந்த இன்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த இன்ஜின் 94 பிஎச்பி பவரையும், 88 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியதாக இருக்கலாம். இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படும். கேடிஎம் 790 அட்வென்ஜர் பைக் ஒரு லிட்டருக்கு 22.5 கிலோ மீட்டர் மைலேஜை வழங்க கூடியது என கேடிஎம் நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த பைக்கின் எடை 189 கிலோ.

இதன் மூலம் அதன் செக்மெண்ட்டில் இலகுவான பைக்குகளில் ஒன்று என இதனை கூறலாம். அதே சமயம் இந்த பைக்கின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 230 மிமீ-ஆக உள்ளது. ஆஃப் ரோடு பயணங்களின்போது இந்த சிறப்பான க்ரவுண்ட் க்ளியரன்ஸ் உதவியாக இருக்கும். இந்த பைக்கில் எல்இடி டிஆர்எல்கள் உடன் முழு எல்இடி ஹெட்லைட் வழங்கப்படும்.

இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்த பிறகு, புதிய டிரையம்ப் டைகர் 900 பைக்குடன் கேடிஎம் 790 அட்வென்ஜர் போட்டியிடும். அத்துடன் மிக சவாலான விலையில் கேடிஎம் நிறுவனம் 790 அட்வென்ஜர் பைக்கை இந்திய சந்தையில் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போது அட்வென்ஜர் பைக்குகள் பிரபலமாகி வருகின்றன.

எனவே கேடிஎம் நிறுவனம் தனது 390 அட்வென்ஜர் மற்றும் 250 அட்வென்ஜர் பைக்குகளை இந்தியாவில் ஏற்கனவே விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த வரிசையில் கூடிய விரைவில் கேடிஎம் 790 அட்வென்ஜர் பைக்கும் விற்பனைக்கு வரவுள்ளது. இதற்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருப்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Note: Images used are for representational purpose only.