கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக்கின் முக்கிய விபரங்கள் வெளியீடு!

கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக்கின் முக்கிய விபரங்கள் ஆன்லைன் மூலமாக வெளியிடப்பட்டு இருக்கின்றன. இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

 கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக்கின் முக்கிய விபரங்கள் வெளியீடு!

கடந்த ஆண்டு நம்பரில் இத்தாலியில் நடந்த ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் புதிய கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், முக்கிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், இந்த புதிய பைக் மாடல் விரைவில் சந்தைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதற்கு முன்னதாக இந்த பைக்கின் சிறப்பம்சங்களை வீடியோவாக தயாரித்து வெளியிட்டுள்ளது கேடிஎம்.

 கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக்கின் முக்கிய விபரங்கள் வெளியீடு!

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனையில் இருக்கும் கேடிஎம் 790 ட்யூக் அடிப்படையில்தான் இந்த புதிய 890 ட்யூக் ஆர் மாடலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த புதிய மாடலில் பேரலல் ட்வின் சிலிண்டர்கள் கொண்ட 890சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

 கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக்கின் முக்கிய விபரங்கள் வெளியீடு!

இதன் எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎஸ் பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக உள்ளது. இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இதன் எஞ்சினில் புதிய கிராங்க்சாஃப்ட், கனெக்ட்டிங் ராடு, இலகுவான பிஸ்டன்கள் ஆகியவற்றுடன் வந்துள்ளது.

 கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக்கின் முக்கிய விபரங்கள் வெளியீடு!

மேலும், மிக விரைவான கியர் மாற்றம் செய்யும் வாய்ப்பை வழங்கும் வகையிலான குறைந்த நீளமுடைய கியர் ஷிஃப்ட் லிவர், இலகுவான ஸ்பிரிங்குகள் போன்றவையும் ஓட்டுனருக்கு மிக அதிக செயல்திறனை வழங்கும் உணர்வை தரும். குயிக் ஷிஃப்டர் வசதியும் இருக்கிறது. நடுத்தர வகை பைக் மார்க்கெட்டில் மிக இலகுவான எஞ்சினை இந்த பைக் பெற்றிருப்பதாக கேடிஎம் பெருமிதம் தெரிவித்துள்ளது.

 கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக்கின் முக்கிய விபரங்கள் வெளியீடு!

புதிய கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக்கில் 43 மிமீ WP அபெக்ஸ் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் அட்ஜெஸ்ட்டபிள் வசதியுடன் மோனோ ஷாக் அப்சார்பர் உள்ளன. இந்த இரண்டு சஸ்பென்ஷன் அமைப்பும், அதிவேகத்தில் வளைவுகளில் திரும்பும்போது மிக அதிக நிலைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.

 கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக்கின் முக்கிய விபரங்கள் வெளியீடு!

மேலும், முன்சக்கரத்தில் இரண்டு 320 மிமீ ரோட்டர்கள் கொண்ட பிரெம்போ ஸ்டைலெமா காலிபர்கள் கொண்ட பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் ஃப்ளோட்டிங் மோனோபிளாக் காலிபர் கொண்ட 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. முன்புற பிரேக் சிஸ்டம் கேடிஎம் 790 ட்யூக் பைக்கைவிட 1.2 கிலோ எடை குறைவானதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக்கின் முக்கிய விபரங்கள் வெளியீடு!

இந்த பைக்கில் ஏராளமான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உள்ளன. ஸ்போர்ட், ஸ்ட்ரீட், ரெயின் மற்றும் டிராக் ஆகிய 4 ரைடிங் மோடுகள் உள்ளன. எஞ்சின் ஸ்லிப் கன்ட்ரோல், பைக்கை சாய்த்து திருப்பும்போது கீழே விழாதவாறு பாதுகாக்கும் லீன் ஆங்கிள் சென்சிடிவ் கன்ட்ரோல் சிஸ்டம், மிச்செலின் பவர்கப் 2 டயர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

 கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக்கின் முக்கிய விபரங்கள் வெளியீடு!

புதிய கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக் தற்போது விற்பனையில் உள்ள 790 டயூக் பைக்கிற்கு மாற்றாக நிலைநிறுத்தப்படும். இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பரில் கேடிஎம் 790 ட்யூக் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

 கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக்கின் முக்கிய விபரங்கள் வெளியீடு!

இந்த பைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 790 ட்யூக் பிஎஸ்6 மாடல் வரும் மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் இதுவரை இல்லை. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு அல்லது தகவல் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பில் இந்திய கேடிஎம் ட்யூக் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM has revealed some key details of all new 890 Duke R bike to media with special video ahead of its international launch event.
Story first published: Wednesday, April 1, 2020, 17:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X