இந்தியாவில் அறிமுகமானது கேடிஎம் சைக்கிள்கள்... எங்கு கிடைக்கும்? என்ன விலை?.. இதோ முழு விபரம்!

இந்தியாவில் கேடிஎம் நிறுவனத்தின் சைக்கிள் அறிமுகமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் அறிமுகமானது கேடிஎம் சைக்கிள்கள்... எங்கு கிடைக்கும்? என்ன விலை?.. இதோ முழு விபரம்!

கோவிட் 19 வைரஸ் உலகில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அந்தவகையில், மக்களின் பயண முறையில் அது கொண்டு வந்திருக்கும் மாற்றங்கள் ஏராளம். ஆம், முன்பைப் போன்றில்லாமல் பலர் தற்போது தனி வாகனங்களில் பயணிப்பதையே அதிகம் விரும்புகின்றனர்.

இந்தியாவில் அறிமுகமானது கேடிஎம் சைக்கிள்கள்... எங்கு கிடைக்கும்? என்ன விலை?.. இதோ முழு விபரம்!

குறிப்பாக, பொது போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க ஆரம்பித்துள்ளனர். தொற்று பரவி விடலாம் என்ற அச்சத்தினால் மக்கள் இவ்வாறு மாறியுள்ளனர். இதேபோன்று மிதிவண்டியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது கேடிஎம் சைக்கிள்கள்... எங்கு கிடைக்கும்? என்ன விலை?.. இதோ முழு விபரம்!

குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட காலத்தில் சைக்கிள் பயனர்கள் சற்று அதிகரித்துக் காணப்படுகின்றனர். இதனால், சைக்கிள்களுக்கான வரவேற்பு இந்தியாவில் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது கேடிஎம் சைக்கிள்கள்... எங்கு கிடைக்கும்? என்ன விலை?.. இதோ முழு விபரம்!

இந்தநிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கேடிஎம் நிறுவனம் அதன் மிதி வண்டிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக ஆல்ஃபா வெக்டர் எனும் இந்திய நிறுவனத்துடன் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது.

இந்தியாவில் அறிமுகமானது கேடிஎம் சைக்கிள்கள்... எங்கு கிடைக்கும்? என்ன விலை?.. இதோ முழு விபரம்!

இவர்கள் இருவரும் இணைந்தே இந்தியாவில் கேடிஎம் நிறுவனத்தின் மிதிவண்டிகளை விற்பனைச் செய்ய இருக்கின்றனர். கேடிஎம் நிறுவனத்தின் பைக்குகளைப் போலவே சைக்கிள்களும் சற்று காஸ்ட்லியானதாகக் காட்சியளிக்கின்றன. ஆமாங்க, ரூ. 30 ஆயிரத்தில் தொடங்கி 10 லட்ச ரூபாய் வரையிலான விலையில் இதன் சைக்கிள்கள் விற்கப்பட இருக்கின்றன.

இந்தியாவில் அறிமுகமானது கேடிஎம் சைக்கிள்கள்... எங்கு கிடைக்கும்? என்ன விலை?.. இதோ முழு விபரம்!

இவை ஆல்ஃபா வெக்டர் விற்பனையகங்களில் விற்பனைக்குக் கிடைக்கும். ஆல்ஃபா வெக்டர் நிறுவனம், அண்மையில் மெராகி எனும் விலைக் குறைந்த இ-சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த இ-சைக்கிளைத் தொடர்ந்தே புதிய கேடிஎம் மிதிவண்டிகளையும் ஆல்ஃபா வெக்டார் விற்பனைச் செய்ய இருக்கின்றது.

இந்தியாவில் அறிமுகமானது கேடிஎம் சைக்கிள்கள்... எங்கு கிடைக்கும்? என்ன விலை?.. இதோ முழு விபரம்!

கேடிஎம் சைக்கிள்களின் அறிமுகத்தின் மூலம் தங்களுடைய நிறுவனத்தின் சைக்கிள்களின் விற்பனையும் பலம் பெறும் என ஆல்ஃபா வெக்டார் நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முக்கியமான நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, புனே மற்றும் ஹைதராபாத் போன்ற மெட்ரோ நகரங்களில் நிலவும் 75 சதவீத டிமாண்டை மையப்படுத்தி ஆல்ஃபா நிறுவனம் இந்த காயை நகர்த்தத் தொடங்கியுள்ளது.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM Enters The Bicycle Market In India. Read In Tamil.
Story first published: Thursday, December 3, 2020, 17:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X