கேடிஎம் & ஹஸ்க்வர்னா பைக்குகளின் விலை அதிகரிக்கப்பட்டது!! இனி அவற்றின் விலைகள் இதுதான்!

கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கேடிஎம் & ஹஸ்க்வர்னா பைக்குகளின் விலை அதிகரிக்கப்பட்டது!! இனி அவற்றின் விலைகள் இதுதான்!

ஐரோப்பாவை சேர்ந்த கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா பிராண்ட்களை இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ சொந்தமாக கொண்டுள்ளது. கேடிஎம் & ஹஸ்க்வர்னா நிறுவனங்களுக்கு நம் நாட்டில் சொந்தமாக தொழிற்சாலை இல்லை.

கேடிஎம் & ஹஸ்க்வர்னா பைக்குகளின் விலை அதிகரிக்கப்பட்டது!! இனி அவற்றின் விலைகள் இதுதான்!

இதனால் புனேவில் உள்ள பஜாஜ் ஆட்டோவின் சாகான் தொழிற்சாலையில் தான் இரண்டு பிராண்ட்களின் தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கேடிஎம் பிராண்ட் 2012ல் ட்யூக் 200 பைக் மூலம் நுழைந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

கேடிஎம் & ஹஸ்க்வர்னா பைக்குகளின் விலை அதிகரிக்கப்பட்டது!! இனி அவற்றின் விலைகள் இதுதான்!

அதன்பின்பு தான் 125சிசி-இல் ட்யூக் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. தற்சமயம் கேடிஎம் பிராண்டில் இருந்து 125 ட்யூக், ஆர்சி 125, 200 ட்யூக், ஆர்சி 200, 250 ட்யூக், 250 அட்வென்ச்சர், 390 ட்யூக், ஆர்சி 390, 390 அட்வென்ச்சர் உள்ளிட்ட பைக் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கேடிஎம் & ஹஸ்க்வர்னா பைக்குகளின் விலை அதிகரிக்கப்பட்டது!! இனி அவற்றின் விலைகள் இதுதான்!

ஹஸ்க்வர்னா, கடந்த 2019ஆம் வருடத்தில்தான் ஸ்வார்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 என்ற இரு 250சிசி பைக்குகள் மூலம் இந்தியாவில் காலடித்தடத்தை பதித்தது. மேலும் 400சிசி-இல் இந்த ட்வின் பைக்குகளை விற்பனைக்கு கொண்டுவரவும் இந்த நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

கேடிஎம் & ஹஸ்க்வர்னா பைக்குகளின் விலை அதிகரிக்கப்பட்டது!! இனி அவற்றின் விலைகள் இதுதான்!

இந்த இரு பிராண்ட்களின் தயாரிப்புகளில் ட்யூக் 125, ஆர்சி 200, சமீபத்தில் ரூ.2.48 லட்சம் என்ற விலையில் அறிமுகமான 250 அட்வென்ச்சர் என்ற மூன்று பைக் மாடல்களை தவிர்த்து மற்றவை அனைத்தின் எக்ஸ்ஷோரூம் விலைகளும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. இதனை இந்த அட்டவணை மூலம் அறியலாம்.

Model Price (Old) Price (New) Increase
200 Duke ₹1,77,037 ₹1,78,960 ₹1,923
250 Duke ₹2,09,472 ₹2,14,210 ₹4,738
390 Duke ₹2,58,103 ₹2,66,620 ₹8,517
RC 125 ₹1,59,821 ₹1,61,100 ₹1,279
RC 390 ₹2,53,381 ₹2,56,920 ₹3,539
390 Adventure ₹3,04,438 ₹3,05,880 ₹1,442
Svartpilen 250 ₹1,84,960 ₹1,86,750 ₹1,790
Vitpilen 250 ₹1,84,960 ₹1,86,750 ₹1,790
கேடிஎம் & ஹஸ்க்வர்னா பைக்குகளின் விலை அதிகரிக்கப்பட்டது!! இனி அவற்றின் விலைகள் இதுதான்!

இதில் அதிகப்பட்சமாக, ரூ.2.58 லட்சத்தில் எக்ஸ்ஷோரூம் விலையினை கொண்டிருந்த கேடிஎம் 390 ட்யூக்கின் விலை சுமார் ரூ.8,517 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 250 ட்யூக்கின் எக்ஸ்ஷோரூம் விலையும் கிட்டத்தட்ட ரூ.5 ஆயிரம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
KTM, Husqvarna hike prices across range
Story first published: Tuesday, December 8, 2020, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X