Just In
- 2 hrs ago
ஒருபக்கம் விலை அதிகரிப்பு, மறுபக்கம் சலுகை!! மோட்டார்சைக்கிள் விற்பனையில் கவாஸாகியின் அடுத்தடுத்த அறிவிப்புகள்
- 3 hrs ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 5 hrs ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 15 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
Don't Miss!
- News
கேரளாவில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீப்பிடித்ததால் பரபரப்பு... பெரும் விபத்து தவிர்ப்பு!
- Sports
வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூரை பாராட்டி ட்வீட்டிய கேப்டன்... மராத்தியில் பாராட்டு
- Finance
40% வரை ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி.. அமேசானின் சூப்பர் சலுகைகள்.. கவனிக்க வேண்டிய ஆஃபர் மழை..!
- Movies
திருமணம் செய்வதாக ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை.. பைலட் மீது டிவி நடிகை பரபரப்பு புகார்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய பைக் மாடல்களுடன் சந்தையை வலுப்படுத்த கேடிஎம் தீவிரம்!
விலை குறைவான பல புதிய பைக் மாடல்களுடன் இந்தியாவில் தனது வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்கு கேடிஎம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் தொடர்ந்து படிக்கலாம்.

கேடிஎம் நிறுவனத்தின் பைக் மாடல்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஆரம்ப ரக பிரிமீயம் பைக் மார்க்கெட்டில் கேடிஎம்தான் நம்பர்- 1 தேர்வாகவும் உள்ளது. இந்த நிலையில், புதிய பிராண்டுகளின் வரவு காரணமாக கேடிஎம் சிறிது நெருக்கடியை சந்திக்க துவங்கி இருக்கிறது.

இந்த நெருக்கடியை போக்கிக் கொள்ளும் விதமாக, தனது பிராண்டிலும் தனது கீழ் செயல்பட்டு வரும் ஹஸ்க்வர்னா பிராண்டிலும் புதிய மாடல்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, தனது பிராண்டில் விலை குறைவான பைக் மாடல்களை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இறங்கி இருப்பதாக ஆட்டோகார் இந்தியா தள செய்தி தெரிவிக்கிறது.

அதன்படி, 250சிசி அட்வென்ச்சர் பைக் மாடலை மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு கேடிஎம் திட்டமிட்டுள்ளது. இது ஏற்கனவே விற்பனையில் உள்ள 390 அட்வென்ச்சர் பைக் மாடலைவிட விலை குறைவான தேர்வாக அமையும்.

கேடிஎம் ட்யூக் 250 பைக்கில் இருக்கும் அதே 249சிசி பிஎஸ்6 எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் 29.6 பிஎச்பி பவரையும், 24 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃப்ரேம், அலாய் வீல்கள் ஆகியவையும் ட்யூக் 250 பைக்கிலிருந்து பெற்றிருக்கும்.

இந்த பைக்கில் எம்ஆர்எஃப் மோக்ரிப் மீட்டியோர் எஃப்எம்2 என்ற விசேஷ ட்யூப்லெஸ் டயர்கள் இடம்பெற்றிருக்கும். டிஎஃப்டி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இரண்டு சக்கரரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ரைடு பை ஒயர் மற்றும் குயிக் ஷிஃப்டர் வசதிகள் இதன் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

இந்த பைக் மாடல் தவிர்த்து தனது ஆர்சி125 மற்றும் ஆர்சி200 பைக் மாடல்களில் புதிய வண்ணத் தேர்வுகளை வழங்கவும் கேடிஎம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வு வாய்ப்பை வழங்கும். தற்போது இந்த மாடல்கள் ஒரே ஒரு வண்ணத் தேர்வில் மட்டுமே கிடைக்கின்றன.

இதுமட்டுமின்றி, ஹஸ்க்வர்னா பிராண்டில் ஸ்வர்ட்பிலின் 401 மற்றும் விட்பிலின் 401 ஆகிய பைக் மாடல்களையும் அடுத்த மாதம் விற்பனைக்கு கொண்டு வர கேடிஎம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இவை கேடிஎம் 390 பைக் மாடல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. வடிவமைப்பில் மட்டும் மாறுபடுகின்றன.