கேடிஎம் ஆர்சி390 பைக் இனி புதிய நிறத்தில் கிடைக்கும்!! இளைஞர்களை கவருமா?

ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த மோட்டார்சைக்கிள் பிராண்டான கேடிஎம் இந்தியாவில் விற்பனை செய்துவரும் அதன் ஆர்சி390 பைக்கிற்கு புதிய நிறத்தை வழங்கியுள்ளது. இதுபற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கேடிஎம் ஆர்சி390 பைக் இனி புதிய நிறத்தில் கிடைக்கும்!! இளைஞர்களை கவருமா?

இந்திய சந்தையில் ரூ.2.53 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் கேடிஎம் ஆர்சி390 பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த ஆர்சி ரக பைக்கிற்கு மெட்டாலிக் சில்வர் என்ற நிறத்தேர்வை கூடுதலாக தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது.

கேடிஎம் ஆர்சி390 பைக் இனி புதிய நிறத்தில் கிடைக்கும்!! இளைஞர்களை கவருமா?

அதாவது இந்த புதிய நிறத்திலும் இந்த பைக் இனி விற்பனைக்கு கிடைக்கும். இந்த புதிய நிறத்தில் கேடிஎம் நிறுவனத்தின் ஆர்சி16 மற்றும் மோட்டோ3 தொழிற்சாலை ரேசிங் மெஷின்களில் (பைக்குகள்) வழங்கப்படும் ஸ்டரைக்கிங் கிராஃபிக்ஸை வாடிக்கையாளர் பெறலாம்.

கேடிஎம் ஆர்சி390 பைக் இனி புதிய நிறத்தில் கிடைக்கும்!! இளைஞர்களை கவருமா?

‘390 RC' என்கிற எழுத்துகள் நன்கு பெரியதாகவே வழங்கப்பட்டுள்ளன. கேடிஎம் பிராண்டின் சூப்பர்ஸ்போர்ட் மாடலான ஆர்சி 390 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.2.53 லட்சமாக உள்ளது. பைக்கில் 373.2சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

கேடிஎம் ஆர்சி390 பைக் இனி புதிய நிறத்தில் கிடைக்கும்!! இளைஞர்களை கவருமா?

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 43 பிஎச்பி மற்றும் 36 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. ரைடு-பை-வயர், ஸ்லிப்பர் க்ளட்ச் மற்றும் 320மிமீ பெரியதான முன் ப்ரேக் டிஸ்க் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக ஆர்சி390 பைக்கில் வழங்கப்படுகின்றன.

கேடிஎம் ஆர்சி390 பைக் இனி புதிய நிறத்தில் கிடைக்கும்!! இளைஞர்களை கவருமா?

கேடிஎம் நிறுவனத்தின் நேர்த்தியான தயாரிப்புகளுள் ஒன்று ஆர்சி390 ஆகும். இரட்டை ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்களுடன் ரேஸர் கூர்மையான வடிவில் உள்ள முன்பகுதி எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் பைக்கை தனியாக காட்டும்.

முன்பகுதி மட்டும் இதன் அடையாளம் கிடையாது. மொத்தமாக பார்க்கும்போது குறுக்கு நெடுக்காக வடிவமைக்கப்பட்ட தட்டி சட்டகம் மற்றும் நேர்த்தியான எல்இடி டெயில்லைட் தான் பைக்கை ட்ராக் மெஷின் போல் காட்சியளிக்க வைக்கிறது.

கேடிஎம் ஆர்சி390 பைக் இனி புதிய நிறத்தில் கிடைக்கும்!! இளைஞர்களை கவருமா?

இந்திய சந்தையில் அறிமுகத்தில் இருந்து கேடிஎம் ஆர்சி390 பைக் ஒரே ஒரு நிறத்தில் தான் விற்பனையில் இருந்தது. ஆனால் தற்போது இந்த நிலை மாறியுள்ளது. இது பைக்கிற்கு புத்துணர்ச்சியான தோற்றத்தை வழங்குவதால் அதிக இளைஞர்களை கவர்ந்திழுக்கும் என்பது உறுதி.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM RC 390 Is Now Available in Metallic Silver Color
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X