கேடிஎம்மின் 890சிசி அட்வென்ஜெர் பைக்குகள்... என்ஜின் உள்பட பைக்கை பற்றிய முழு விபரங்கள் இதோ...

முற்றிலும் புதிய 890 அட்வென்ஜெர் ஆர் மற்றும் 890 அட்வென்ஜெர் ராலி ஆர் லிமிடேட் எடிசன் பைக்கை பற்றிய விபரங்களை படங்களுடன் கேடிஎம் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

கேடிஎம்மின் 890சிசி அட்வென்ஜெர் பைக்குகள்... என்ஜின் உள்பட பைக்கை பற்றிய முழு விபரங்கள் இதோ...

இந்த இரு அட்வென்ஜெர் பைக்குகளும் கேடிஎம் 790 அட்வென்ஜெரில் இருந்து டிசைன் மற்றும் வளைவுகளை பெற்றுள்ளன. இருப்பினும் ஃப்ரேம், ஸ்விங்கார்ம் உள்ப்ட என்ஜினும் முற்றிலும் புதியது.

கேடிஎம்மின் 890சிசி அட்வென்ஜெர் பைக்குகள்... என்ஜின் உள்பட பைக்கை பற்றிய முழு விபரங்கள் இதோ...

இந்த வகையில் இந்த இரு கேடிஎம் அட்வென்ஜெர் பைக்குகள் 889சிசி, இணையான-இரட்டை பிஎஸ்6 என்ஜினை பெற்றுள்ளன. இதே என்ஜின் தான் சற்று திருத்தியமைக்கப்பட்ட வெர்சனில் கேடிஎம் 890 ட்யூக்கில் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,000 ஆர்பிஎம்-ல் 103 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 100 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

கேடிஎம்மின் 890சிசி அட்வென்ஜெர் பைக்குகள்... என்ஜின் உள்பட பைக்கை பற்றிய முழு விபரங்கள் இதோ...

890 அட்வென்ஜெர் ஆர் பைக்கை பற்றி முதலில் பார்ப்போம். ஏபிஎஸ், ஆஃப்-ரோடு ஏபிஎஸ் மற்றும் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் போன்ற மேம்படுத்தப்பட்ட ரைடிங் எலக்ட்ரானிக் உதவி தொகுப்புகளை பெற்றுள்ள இந்த பைக் ஹேண்டில்பாரில் க்ரூஸ் கண்ட்ரோலிற்கான புதிய ஸ்விட்ச்சை பெற்றுள்ளது.

கேடிஎம்மின் 890சிசி அட்வென்ஜெர் பைக்குகள்... என்ஜின் உள்பட பைக்கை பற்றிய முழு விபரங்கள் இதோ...

ஹேண்டில்பாரில் வழங்கப்பட்டுள்ள இந்த வசதியும் வலுவூட்டப்பட்ட க்ளட்ச்சும் இந்த இரு அட்வென்ஜெர் பைக் மாடல்களிலும் பொதுவாக வழங்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷனிற்கு அட்வென்ஜெர் ஆரின் முன்புறத்தில் 239மிமீ ட்ராவல் உடன் 48மிமீ தலைக்கீழான ஃபோர்க்குகளும், பின்புறத்தில் அதே 239மிமீ ட்ராவல் உடன் மோனோ-ஷாக்கும் உள்ளன.

கேடிஎம்மின் 890சிசி அட்வென்ஜெர் பைக்குகள்... என்ஜின் உள்பட பைக்கை பற்றிய முழு விபரங்கள் இதோ...

ப்ரேக்கிங் பணியை கவனிக்க முன் சக்கரத்தில் 4-பிஸ்டன் காலிபர்களுடன் 320மிமீ-ல் இரட்டை டிஸ்க்கும், பின் சக்கரத்தில் 2-பிஸ்டன் காலிபர்களுடன் 260மிமீ-ல் சிங்கிள் டிஸ்க்கும் உள்ளன. இவற்றுடன் புதிய பின்பக்க இரும்பு சப்-ஃப்ரேம் மற்றும் அலுமினியம் ஸ்டேரிங் போன்ற அம்சங்களையும் 890 அட்வென்ஜெர் ஆர் பைக் பெற்றுள்ளது.

கேடிஎம்மின் 890சிசி அட்வென்ஜெர் பைக்குகள்... என்ஜின் உள்பட பைக்கை பற்றிய முழு விபரங்கள் இதோ...

இந்த மோட்டார்சைக்கிளுக்கு வழங்கப்பட்டுள்ள முழு-வண்ண 5-இன்ச் டிஎஃப்டி திரை ஓட்டுனருக்கு தேவையான அனைத்து தகவல்களையும் வழங்கக்கூடியதாக இருக்கும். முன்புறத்தில் 21 இன்ச்சிலும், பின்புறத்தில் 19 இன்ச்சிலும் உள்ள இதன் சக்கரங்களில் மெட்ஸெலர் கரோ 3 ட்யூல்-ஸ்போர்ட் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கேடிஎம்மின் 890சிசி அட்வென்ஜெர் பைக்குகள்... என்ஜின் உள்பட பைக்கை பற்றிய முழு விபரங்கள் இதோ...

வெறும் 700 யூனிட்களில் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ள மற்றொரு 890 அட்வென்ஜெர் ராலி எடிசன் சிறந்த ஆஃப்-ரோடு திறனிற்காக எக்ஸ்ப்ளோர் ப்ரோ சஸ்பென்ஷன் செட் மற்றும் அக்ராபோவிக் எக்ஸாஸ்ட் அமைப்பை கூடுதலாக பெற்று வந்துள்ளது.

கேடிஎம்மின் 890சிசி அட்வென்ஜெர் பைக்குகள்... என்ஜின் உள்பட பைக்கை பற்றிய முழு விபரங்கள் இதோ...

இதன் அக்ராபோவிக் எக்ஸாஸ்ட், 890 அட்வென்ஜெர் ஆரில் உள்ள எக்ஸாஸ்ட்டை காட்டிலும் சுமார் 35 சதவீதம் எடை குறைவானதாகும். நேராக வடிவமைக்கப்பட்டுள்ள இதன் இருக்கை தரையில் இருந்து 910மிமீ உயரத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

கேடிஎம்மின் 890சிசி அட்வென்ஜெர் பைக்குகள்... என்ஜின் உள்பட பைக்கை பற்றிய முழு விபரங்கள் இதோ...

அதேபோல் விரைவு-ஷிஃப்டர் உடன் ‘ராலி' ரைடிங் மோடும் இந்த ராலி எடிசன் பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி ராலி கால்-பெக்குகள், அனோடைஸ் சக்கரங்கள், அப்டேட்டான ரேஸ்-ட்யூன்டு சேசிஸ் மற்றும் டேங்கை பாதுகாக்க கார்பன் ஃபைபர் பாதுகாப்பான்கள் உள்ளிட்டவையும் இந்த ஸ்பெஷல் எடிசன் பைக்கில் பொருத்தப்பட்டுள்ளன.

கேடிஎம்மின் 890சிசி அட்வென்ஜெர் பைக்குகள்... என்ஜின் உள்பட பைக்கை பற்றிய முழு விபரங்கள் இதோ...

இரு பைக்குகளிலும் கிராஃபிக்ஸ் வித்தியாசப்படுகின்றன. கேடிஎம் 890 அட்வென்ஜெர் ஆர் பைக் இந்தியாவில் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படலாம். ஆனால் வெறும் 700 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ள இதன் ராலி ஆர் எடிசன் பைக் இந்தியாவிற்கு வர வாய்ப்பே இல்லை.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
2021 KTM 890 Adventure R, 890 Adventure Rally R Revealed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X