திரும்பி பார்ப்போம்! 2020ல் விற்பனைக்கு அறிமுகமான புதுமுக மின்சார ஸ்கூட்டர்கள்... இவையே மக்கள் மனம் கவர்ந்தவை!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை விற்பனைக்கு வந்த மின்சார ஸ்கூட்டர்களைப் பற்றியும், அவற்றின் சிறப்பு பற்றியும் இப்பதிவில் பார்க்கலாம்.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

நடப்பு 2020ம் ஆண்டின் சிறப்பு தொகுப்பாக இந்த ஆண்டில் விற்பனைக்கு வந்த வாகனங்கள் பற்றிய தகவலை பிரத்யேகமாக நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் வழங்கி வருகின்றது. அந்தவகையில், நடப்பாண்டில் விற்பனைக்கு வந்த மின்சார ஸ்கூட்டர்கள் பற்றிய தகவலை இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்தியாவில் நடப்பாண்டில் மின் வாகனங்களின் வரவு சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இந்தியாவின் மின் வாகன ஊக்குவிப்பு மற்றும் மின் வாகனங்களின் மீது மக்கள் மத்தியில் எழும்பியிருக்கும் ஆர்வம் (ஈர்ப்பு) உள்ளிட்டவற்றின் காரணமாக எந்த வருடமும் இல்லாத வகையில் பல நிறுவனங்கள் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்திருக்கின்றன. அவ்வாறு, நம் மனம் கவரும் வகையில் 2020இல் விற்பனைக்கு வந்த மின்சார ஸ்கூட்டர்கள் பற்றிய தகவல்களே கீழே வழங்கப்பட்டுள்ளது.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் (Bajaj Chetak)

2020ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகமான மின்சார ஸ்கூட்டரில் பஜாஜ் சேத்தக்-கும் ஒன்று. இதனை பஜாஜ் நிறுவனம் ஜனவரி மாதம் 14ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்நிறுவனம், நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு உற்பத்தி செய்த ஸ்கூட்டர் இதுவே ஆகும்.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

இந்த ஸ்கூட்டரை நாட்டின் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு வழங்கி வருகின்றது. பெங்களூரு மற்றும் புனே ஆகிய இரு நகரங்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதேசமயம், இரு விதமான வேரியண்டுகளில் இதனை பஜாஜ் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. அவை, அர்பன் (Urbane) மற்றும் பிரீமியம் (Premium)ஆகும். இதன் ஆரம்ப விலை ரூ. 1 லட்சம் ஆகும். 1.15 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் இது விற்கப்பட்டு வருகின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

இந்த மின்சார ஸ்கூட்டரில் 4kW திறன் கொண்ட மின் மோட்டாரை பஜாஜ் பயன்படுத்தியுள்ளது. இத்துடன், இதற்கான மின்சார திறனை லித்தியம் அயன் பேட்டரி மூலம் வழங்கும்படி வடிவமைத்துள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 95 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 65 கிமீ வேகம் ஆகும்.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube)

2020 ஜனவரி, 27ம் தேதியே டிவிஎஸ் நிறுவனம் அதன் முதல் மின்சார ஸ்கூட்டரான ஐக்யூப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது ஓர் பிரீமியம் தரத்திலான மின்சார ஸ்கூட்டராகும். தற்போது பெங்களூருவில் மட்டுமே டிவிஎஸ் நிறுவனம் இந்த மின்சார விற்பனைச் செய்து வருகின்றது. இதற்கு விலையாக ரூ. 1.15 லட்சம் என அது நிர்ணயித்துள்ளது.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

மேற்கூறிய விலை ஆன்-ரோடு விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஸ்கூட்டரில் 2.25kWh திறன் கொண்ட பேட்டரியே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிமீ வேகம் ஆகும். இதனை 4.4kWh திறன் கொண்ட மின் மோட்டார் வெளிப்படுத்தும்.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

ஏத்தர் 450 எக்ஸ் (Ather 450X)

நடப்பாண்டின் ஜனவரி மாதத்தில் விற்பனைக்கு வந்த மற்றுமொரு மின்சார ஸ்கூட்டர் ஏத்தர் 450 எக்ஸ். இந்த மின்சார ஸ்கூட்டர் ஆரம்பத்தில் பெங்களூருவில் மட்டுமே கிடைத்து வந்தது. ஆனால், தற்போது சென்னையிலும் கிடைக்கும் வகையில் ஏத்தர் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

கூகுள் நேவிகேஷன், டிஜிட்டல் ஆவண சேமிப்பு வசதி, 7 இன்ச் கொண்ட வண்ண தொடுதிரை மற்றும் ப்ளூடூத் இணைப்பு உள்ளிட்ட எக்கசக்க அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், 4ஜி எல்டிஇ சிம் கார்டு இணைப்பு வசதியும் இதில் வழங்கப்பட்டிருக்கின்றது. எனவேதான் இதனை பிரீமியம் தரத்திலான மின்சார ஸ்கூட்டர் என அழைக்கின்றனர். இதன் விலை ரூ. 1.27 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

பேட்ஆர்இ எல்ஓஇவி (BattRe LoEV)

2020 ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் இந்த மின்சார ஸ்கூட்டரை பேட்ஆர்இ நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதனை தனித்துவமாக தனது டீலர்கள் வாயிலாக மட்டுமின்றி அமேசான் ஆன்லைன் தளத்தின் வாயிலாகவும் விற்பனைக்குக் கொண்டு வந்தது.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

ரிமோட் கீ, திருட்டைத் தடுக்கும் அலாரம், ரிவர்ஸ் எடுக்கம் வசதி மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் இந்த மின்சார ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதன் விலை ரூ. 59,900 ஆகும். இது எக்ஸ்-ஷோரும் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

ஆம்பியர் மேக்னஸ் ப்ரோ (Ampere Magnus Pro)

ஆம்பியர் நிறுவனம் மேக்னஸ் ப்ரோ மின்சார ஸ்கூட்டரை ஜூன் 15 தேதி அன்றுதான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. முதல்கட்டமாக இந்த ஸ்கூட்டர் பெங்களூருவில் மட்டுமே விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த ஸ்கூட்டரில் சிறப்பு வசதிகளாக திருட்டதை தவிர்க்கும் அலாரம், சாவியில்லா இயக்கம் மற்றும் நேவிகேஷன் உள்ளிட்ட எக்கசக்க வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

இந்த மின்சார ஸ்கூட்டரை இருவிதமான வேரியண்டுகளில் ஆம்பியர் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. அவை, மேக்னஸ் 60 மற்றும் மேக்னஸ் எஸ்டிடி. இதில், மேக்னஸ் 60 மின்சார ஸ்கூட்டருக்கு ரூ. 49,999 என்ற விலையும், மேக்னஸ் ப்ரோ வேரியண்டிற்கு ரூ. 73,990 என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

பிகாஸ் ஏ2 மற்றும் பி8 (BGauss A2 and B8)

பிகாஸ் நிறுவனம் இவ்விரு மின்சார ஸ்கூட்டர்களையுமே ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தியது. இதில், ஏ2 என்பது ஆரம்பநிலை மாடலாகவும், பி8 பிரீமியம் ரக மின்சார ஸ்கூட்டராகவும் காட்சியளிக்கின்றன. ஆகையால், இரு மின்சார ஸ்கூட்டர்களுக்கும் இடையே விலை வித்தியாசம் மாறுபட்டு காணப்படுகின்றது. ஏ2 மின்சார ஸ்கூட்டருக்கு ரூ. 52,499 என்ற விலையும், பி8 மின்சார ஸ்கூட்டருக்கு 62,999 ரூபாய் என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

ஹீரோ எலெக்ட்ரிக் நைக்ஸ் எச்எக்ஸ் ஸ்பீடு (Hero Electric Nyx HX Speed)

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்திய மின்சார ஸ்கூட்டராக நைக்ஸ் எச்எக்ஸ் ஸ்பீடு இருக்கின்றது. மூன்று விதமான தேர்வுகளில் இந்த மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கின்றது. நைக்ஸ் எல்ஐ, நைக்ஸ் எல்ஐ இஆர், நைக்ஸ் எச்எஸ்500 இஆர் ஆகியவை அவை. இதனை வர்த்தக ரீதியாக பயன்படுத்தும் நோக்கிலேயே ஹீரோ விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

அத்தியாவசிய பொருட்கள் டெலிவரி மற்றும் பிற வர்த்தக பயன்பாட்டில் பயன்படுத்தும் வகையில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நைக்ஸ் எல்ஐ வேரியண்ட் மின்சார ஸ்கூட்டருக்கு 63,990 ரூபாய் என்ற விலையும், நைக்ஸ் எல்ஐ இஆர் வேரியண்ட் மின்சார ஸ்கூட்டருக்கு 69,754 ரூபாய் என்ற விலையும், நைக்ஸ் எச்எஸ்500 இஆர் வேரியண்ட் மின்சார ஸ்கூட்டருக்கு 79,990 ரூபாய் என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

ஈவீ அட்ரியோ மற்றும் அஹவா (EeVe Atreo and Ahava)

ஈவீ நிறுவனத்தின் மிக சமீபத்திய அறிமுகங்களாக இந்த மின்சார ஸ்கூட்டர்கள் இருக்கின்றன. மிக குறைந்த விலையில் பன்முக சிறப்பு வசதிகளுடன் இவை விற்பனைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதில், அட்ரியோ மின்சார ஸ்கூட்டருக்கு மிகக் குறைந்தபட்ச விலையாக ரூ. 64,900த்தையும், அஹவா மின்சார ஸ்கூட்டருக்கு 55,900 ரூபாய் என்ற விலையையும் தயாரிப்பு நிறுவனம் ஈவீ நிர்ணயித்துள்ளது.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

ஜெமோபாய் மிசோ (Gemopai Miso)

இந்த ஆண்டில் விற்பனைக்கு வந்த மிக மிக குறைந்த விலை மின்சார இருசக்கர வாகனமாக ஜெமோபாய் நிறுவனத்தின் மிசோ மின்சார மொபட் இருக்கின்றது. இந்த மொபட்டிற்கு ரூ. 44,000 என்ற விலையை நிர்ணயிக்கப்பட்டது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும். மிக மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வந்த மின்சார வாகனம் என்பதால் இந்தியர்களின் கவனத்தை இது ஈர்த்தது.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

ஒகினவா ஆர்30 (Okinawa R30)

மின்சார இருசக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஒகினவா நடப்பாண்டின் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதிய இந்த ஆர்30 மின்சார ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த மின்சார ஸ்கூட்டர் அதிகபட்சமாக 25 கிமீ வேகம் ஓடும் திறனைக் கொண்டிருக்கின்றது. இது மிகக் குறைந்த ஓடும் திறன் என்பதால் இதனை பதிவு செய்யவோ, இதனை இயக்குவதற்கு ஓட்டுநர் உரிமமோ தேவைப்படாது.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

இதன் விலை ரூ. 58,992 ஆகும். இதில் 1.25கிலோவாட் திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 60 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

பேட்ஆர்இ ஐஓடி (BattRe IOT)

இந்த ஆண்டில் விற்பனைக்கு வந்த மின்சார ஸ்கூட்டர்களின் பட்டியலில் கடைசியாக பார்க்கவிருக்கும் மின்சார ஸ்கூட்டர் இதுவே ஆகும். ஜனவரி மாதமே இந்த மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது. இதன் விலை ரூ. 79,999 ஆகும். அமேசான் மற்றும் சில ஆன்லைன் இது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது பிரீமியம் தரத்திலான மின்சார ஸ்கூட்டர் ஆகும்.

Most Read Articles
English summary
List Of Electric Scooters Launched In India In 2020. Read In Tamil.
Story first published: Saturday, December 19, 2020, 19:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X