Just In
- 1 hr ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 3 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 6 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 6 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கேமிராவின் கண்களில் சிக்கிய இரு புதுமுக ஸ்கூட்டர்கள்.. இந்த ஸ்கூட்டர்கள் எந்த நிறுவனத்தின் தயாரிப்பு தெரியுமா?
இரு புதுமுக ஸ்கூட்டர்கள் கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கின்றன. அவை எந்த நிறுவனத்தின் தயாரிப்பு என்பதை இப்பதிவில் காணலாம்.

பீஜோ (Peugeot) நிறுவனத்தின் இரு புதுமுக ஸ்கூட்டர்கள் கேமிராவின் கண்களில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் அறிமுகமே ஆகாத இவ்விரு ஸ்கூட்டர்களும் இந்திய சாலையில் இருப்பதை வெளிப்படுத்தும் இப்புகைப்படங்கள் இந்திய இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்திய நிறுவனமான மஹிந்திராவிற்கு சொந்தமானதே இந்த பீஜோ மோட்டோர்சைக்கிள் நிறுவனம். கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் இந்த நிறுவனத்தை மஹிந்திரா கையகப்படுத்தியது. இப்போது இந்த நிறுவனத்தின் பிரபலமான மாடல்களை இந்தியாவில் களமிறக்கும் முயற்சியில் அது ஈடுபட்டு வருகின்றது.

இந்த நிலையிலேயே மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகர சாலையில் பீஜோ நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் சோதனையோட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கின்றன. இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களே தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கின்றது.

பீஜோவின் டிஜங்கோ 125 (Django 125) மற்றும் பல்சன் 125 (Pulsion 125) ஆகிய இரு மாடல் ஸ்கூட்டர்கள்தான் நேரத்தில் கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கின்றன. இந்த நிகழ்வு, விரைவில் இவ்விரு ஸ்கூட்டர்களும் இந்திய ஸ்கூட்டர் சந்தையைப் பதம்பார்க்க இருக்கின்றன என்பதைக் கூறும் வகையில் அமைந்துள்ளது.

பொதுவாக, அறிமுகத்திற்கு முன்னர் மட்டுமே இதுபோன்று புதுமுக வாகனங்கள் சோதனையோட்டத்தில் ஈடுபடுத்தப்படும். ஆகையால், தற்போது காட்சி தந்திருக்கும் டிஜங்கோ 125 மற்றும் பல்சன் 125 ஆகிய இரு ஸ்கூட்டர்களும் இந்திய இருசக்கர வாகன சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுவாக, அறிமுகத்திற்கு முன்னர் மட்டுமே இதுபோன்று புதுமுக வாகனங்கள் சோதனையோட்டத்தில் ஈடுபடுத்தப்படும். ஆகையால், தற்போது காட்சி தந்திருக்கும் டிஜங்கோ 125 மற்றும் பல்சன் 125 ஆகிய இரு ஸ்கூட்டர்களும் இந்திய இருசக்கர வாகன சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Pic Source: 3 to 7 Motorbeam
அதேசமயம், இவ்விரு ஸ்கூட்டர்களும் இந்திய சாலைகளில் தங்களின் தரிசனத்தை வழங்குவது இதுவே முதல் முறையாகும். அதுவும் எந்தவொரு மறைப்புகளும் இன்றி இந்த ஸ்கூட்டர்கள் காட்சி தந்துள்ளன. ஆகையால், இதன் ஸ்டைல் மற்றும் சிறப்பு வசதிகள் ஆகிய அனைத்தும் அப்படியே முழுமையாக தெரியவந்துள்ளது.

இரு நிறம், ரெட்ரோ ஸ்டைல், பெரிய ஹேண்டில் பார்கள் மற்றும் பிளவுபட்ட இருக்கைகள் என மிகுந்த கவர்ச்சியான தோற்றத்தில் அவை காட்சியளித்திருக்கின்றன. இதன் ஸ்டைல் வெஸ்பா ஸ்கூட்டர்களைப் போன்று காட்சியளிக்கின்றது. அதேசமயம், சில தனித்துவமான வித்தியாசங்களை பீஜோ ஸ்கூட்டர்கள் பெற்றிருக்கின்றன.

டிஜங்கோ 125 ஸ்கூட்டரில் 124.6 சிசி திறனை வெளிப்படுத்தக்கூடிய எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 10.2 எச்பி மற்றும் 8.9 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். பல்சன் 125 ஸ்கூட்டரில் 125 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 14.4 எச்பி மற்றும் 11.9 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.

இந்த ஸ்கூட்டரை தயாரிப்பு நிறுவனம் மூன்று விதமான வேரியண்டுகளில் உருவாக்கியிருக்கின்றது. ஆக்டிவ், அல்லூர் மற்றும் ஆர்எஸ் ஆகிய தேர்வுகளிலேயே இந்த ஸ்கூட்டர் வெளிநாடுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன், தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படத்தின் மூலம் இவ்விரு ஸ்கூட்டர்களிலும் எல்இடி மின் விளக்கு, இரு ஹெட்லைட்டுகள் இடம்பெற இருப்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, டிஎஃப்டி வண்ண திரை, ஸ்மார்ட் செயலியுடன் கூடிய இணைப்பு வசதி மற்றும் சாவி இல்லா இயக்கம் உள்ளிட்ட சிறப்பு வசதிகளும் இந்த ஸ்கூட்டர்களில் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய பிரீமியம் தரத்திலான வசதிகளிலேயே இவை காட்சியளித்திருக்கின்றன. இவற்றின் அறிமுகம் பற்றிய எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.