அசுரனாக மாறிய ராயல் என்ஃபீல்டு பைக்... இந்தியர்களின் திறமையை பார்த்து வியக்கும் வாகன பிரியர்கள்...

ராயல் என்ஃபீல்டு பைக்கை இந்திய இளைஞர்கள் சிலர் அசுர தோற்றத்திற்கு மாற்றியமைத்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

அசுரனாக மாறிய ராயல் என்ஃபீல்டு பைக்... இந்தியர்களின் திறமையை பார்த்து வியக்கும் உலக நாடுகள்...

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பிரபல இருசக்கர வாகனம் ஒன்று நம் முடியாத அளவிற்கு உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் மாரதா மோட்டார்சைக்கிள் எனும் வாகன மாடிஃபிகேஷன் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிறுவனம், இருசக்கர வாகனங்களை மாடிஃபை செய்வதில் கை தேர்ந்த நிறுவனம் ஆகும்.

அசுரனாக மாறிய ராயல் என்ஃபீல்டு பைக்... இந்தியர்களின் திறமையை பார்த்து வியக்கும் உலக நாடுகள்...

இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றான யுசிஇ 500 மாடலை அது மாடிஃபை செய்திருக்கின்றது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இந்த மாடல் தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைப்பதில்லை. அண்மையில் அறிமுகமான புதிய மாசு உமிழ்வு விதி பிஎஸ்6 காரணமாக இந்த மாடலின் விற்பனையை அந்நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.

அசுரனாக மாறிய ராயல் என்ஃபீல்டு பைக்... இந்தியர்களின் திறமையை பார்த்து வியக்கும் உலக நாடுகள்...

அதேசமயம், விற்பனையில் யுசிஇ500 மாடலின் இடத்தை பூர்த்திச் செய்யும் விதமாக 650 ட்வின் (இன்டர்செப்டார் 650, கான்டினென்டல் ஜிடி 650) மாடல்களை அது இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது. இந்த ட்வின் பைக்குகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவிலும் நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது.

அசுரனாக மாறிய ராயல் என்ஃபீல்டு பைக்... இந்தியர்களின் திறமையை பார்த்து வியக்கும் உலக நாடுகள்...

ராயல் என்ஃபீல்டு அசுரா

தற்போது மாற்றம் செய்யப்பட்டிருக்கும் பைக்கிற்கு மாரதா மோட்டார்சைக்கிள் நிறுவனம், அசுரா என்ற பெயரை வைத்துள்ளது. உருமாற்றம் செய்த கையோடு இந்த பெயரையும் அந்நிறுவனம் வைத்திருக்கின்றது. இந்த பெயருக்கேற்ப பைக்கின் உருவம் ஓர் அசுரனைப் போன்று உள்ளது.

அசுரனாக மாறிய ராயல் என்ஃபீல்டு பைக்... இந்தியர்களின் திறமையை பார்த்து வியக்கும் உலக நாடுகள்...

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் ஹாலிவுட் திரைப்படமான 'டிரான்ஸ்ஃபார்மர்ஸ்' படத்தில் வரும் வாகனங்களைப் போன்று அது காட்சியளிக்கின்றது. "இந்த தனித்துவமான தோற்றத்தை இந்தியர்களா" வழங்கினார்கள் என்று கேட்குமளவிற்கு பைக்கின் உருவம் மாற்றப்பட்டுள்ளது. இந்த தோற்றத்திற்காக பல்வேறு மாற்றங்களை மாரதா நிறுவனம் ராயல் என்ஃபீல்டு யுசிஇ 500 பைக்கில் செய்திருக்கின்றது.

அசுரனாக மாறிய ராயல் என்ஃபீல்டு பைக்... இந்தியர்களின் திறமையை பார்த்து வியக்கும் உலக நாடுகள்...

குறிப்பாக, அசுரனின் புதிய வெளிப்புற தோற்றத்திற்காக அதன் முந்தைய உடற்கூறுகள் அனைத்தும் நீக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, ஹேண்டில் பார், பெட்ரோல் டேங்க், முகப்பு மின் விளக்கு, இன்டிகேட்டர்கள், டயர் என எஞ்ஜினைத் தவிர பல கூறுகள் மாற்றப்பட்டிருக்கின்றது.

அசுரனாக மாறிய ராயல் என்ஃபீல்டு பைக்... இந்தியர்களின் திறமையை பார்த்து வியக்கும் உலக நாடுகள்...

இதில் மிக முக்கியமான ஒன்றாக முகப்பு மின் விளக்கு உள்ளது. இதில், பைக்கிற்கு ராட்சசன் முக அமைப்பை வழங்கும் வகையில் உள்ளது. இதன் ஆக்ரோஷமான தோற்றத்தை கூடுதலாக்கும் வகையில் ஹெட்லைட்டிற்கு கீழாகவே இன்டிகேட்டர்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஹெட்லைட் மற்றும் இன்டிகேட்டர்கள் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், அச்சம் மற்றும் ஈர்ப்பு இரண்டையும் ஒரு சேர வழங்கும் வகையில் இருக்கின்றது.

அசுரனாக மாறிய ராயல் என்ஃபீல்டு பைக்... இந்தியர்களின் திறமையை பார்த்து வியக்கும் உலக நாடுகள்...

இத்துடன், பைக்கின் உடற் கட்டமைப்பிலும் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அதற்கேற்ப சிங்கிள்-சைட் ஸ்விங்கர்ம், பெல்ட் டிரைவ் மற்றும் சஸ்பென்ஷன்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. இதன் முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது, ஆஃப் மற்றும் ஆன் ரோடு பயணத்திற்கு ஏற்றவை ஆகும்.

அசுரனாக மாறிய ராயல் என்ஃபீல்டு பைக்... இந்தியர்களின் திறமையை பார்த்து வியக்கும் உலக நாடுகள்...

இதன் எஞ்ஜினைப் பொருத்தவரை மாரதா மோட்டார்சைக்கிள் நிறுவனம் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆகையால், இதில் 499 சிசி திறன் கொண்ட ஏர் கூல்டு எஃப்ஐ சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினே காணப்படுகின்றது. இது, அதிகபட்சமாக 27.2 பிஎ:்பி மற்றும் 41.3 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இது 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இயங்கும்.

அசுரனாக மாறிய ராயல் என்ஃபீல்டு பைக்... இந்தியர்களின் திறமையை பார்த்து வியக்கும் உலக நாடுகள்...

இந்த பைக்கை ராயல் என்ஃபீல்டு நிறுவனம், அதன் கிளாசிக் 500 மாடலுக்கு இணையான பைக்காக நிலை நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த சிறப்பு வாய்ந்த மாடலையே மாரதா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தற்போது புதிய உருவத்திற்கு ஏற்ப மாடிஃபை செய்துள்ளது. இந்த புதிய மாற்றம் உலகளாவிய வாகன பிரியர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், அவர்களை ஆச்சரியமடையவும் செய்துள்ளது.

Most Read Articles

English summary
Maratha Motorcycle Royal Enfield Classic Into Transformers Bike. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X