ஆட்டோ எக்ஸ்போவில் தோன்றிய மோட்டோ குஸ்ஸி வி85 டிடி பைக்... இதோட விலை தெரிஞ்சா வாயை மூடவே மாட்டிங்க..!

இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் மோட்டோ குஸ்ஸி அதன் வி85 டிடி என்ற அட்வென்சர் டைப்பிலான பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் விலை நம்முடைய வாயை பிளக்க வைக்கின்ற அளவிற்கு உயர்ந்ததாக இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஆட்டோ எக்ஸ்போவில் தோன்றிய மோட்டோ குஸ்ஸி வி85 டிடி பைக்... இதோட விலை தெரிஞ்சா வாயை மூடவே மாட்டிங்க..!

இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் மோட்டோ குஸ்ஸி வாகன உற்பத்தி நிறுவனம், அதன் அட்வென்சர் ரகத்திலான பைக்கை இந்தியாவில் முதல் முறையாக காட்சிப்படுத்தியுள்ளது. இந்த பைக்தான் அந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அட்வென்சர் டைப்பிலான முதல் பைக் ஆகும்.

இதேபோன்று, இதன் முதல் தயாரிப்பை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதுல் சைனி என்ற இளைஞருக்கு அந்நிறுவனம் வழங்கியது.

ஆட்டோ எக்ஸ்போவில் தோன்றிய மோட்டோ குஸ்ஸி வி85 டிடி பைக்... இதோட விலை தெரிஞ்சா வாயை மூடவே மாட்டிங்க..!

இதனை அவந்த் கார்டே மோட்டார்ஸ் என்ற பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் டீலர் வாயிலாக மோட்டோ குஸ்ஸி செய்துள்ளது. இந்த மோட்டோ குஸ்ஸி வி85 டிடி பைக் பெங்களூருவில் ஆன் ரோடில் ரூ. 17.5 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஆட்டோ எக்ஸ்போவில் தோன்றிய மோட்டோ குஸ்ஸி வி85 டிடி பைக்... இதோட விலை தெரிஞ்சா வாயை மூடவே மாட்டிங்க..!

இந்த அட்வென்சர் மோட்டார்சைக்கிளில் யூரோ 4 தரத்திற்கு இணையான 853சிசி திறன் கொண்ட வி-ட்வின் மோட்டார் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த எஞ்ஜின் அதிக திறனை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக ஸ்டீல் ட்யூப்ளர் சேஸிஸால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது லேசான எடைக் கொண்டது என்பதால் எஞ்ஜினின் திறனை பாதிக்காது.

ஆட்டோ எக்ஸ்போவில் தோன்றிய மோட்டோ குஸ்ஸி வி85 டிடி பைக்... இதோட விலை தெரிஞ்சா வாயை மூடவே மாட்டிங்க..!

குறிப்பாக இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 7,750 ஆர்பிஎம்பில் 79.1 பிஎச்பி பவரையும், 5 ஆயிரம் ஆர்பிஎம்மில் 80 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது. இதில், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் தோன்றிய மோட்டோ குஸ்ஸி வி85 டிடி பைக்... இதோட விலை தெரிஞ்சா வாயை மூடவே மாட்டிங்க..!

இது மற்ற பைக்குகளைப் போன்று செயின் அல்லது பெல்ட் வழியாக அல்லாமல் ஷாப்ட் (உருளை தண்டு) வழியாக பின் பக்க வீலுக்கு இழுவை திறனை கடத்துகின்றது. இது மோட்டோ குஸ்ஸி வி85 டிடி பைக்க மற்ற அதிதிறன் வாய்ந்த பைக்குகளிடம் இருந்து தனிமைப்படுத்தி காட்டுகின்றது.

ஆட்டோ எக்ஸ்போவில் தோன்றிய மோட்டோ குஸ்ஸி வி85 டிடி பைக்... இதோட விலை தெரிஞ்சா வாயை மூடவே மாட்டிங்க..!

இதுமட்டுமின்றி இந்த பைக்கின் அட்வென்சர் லுக்கும் அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கின்றது. குறிப்பாக இதன் ரெட்ரோ ஸ்டைலிலான எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டிஆர்எல் மின் விளக்குகள் பைக்கிற்கு கூடுதல் கவர்ச்சியை சேர்க்கின்றது.

ஆட்டோ எக்ஸ்போவில் தோன்றிய மோட்டோ குஸ்ஸி வி85 டிடி பைக்... இதோட விலை தெரிஞ்சா வாயை மூடவே மாட்டிங்க..!

இத்துடன், மேலே உயர்த்தப்பட்ட எக்சாஸ்ட், எல்இடி டெயில் லேம்ப், இன்டிகேட்டர்கள், ஸ்பிளிட் சீட், ரெட்ரோ ஸ்டைல் ப்யூவல் டேங்க், லக்கேஜ் ரேக், ஹேண்ட் குவார்ட்கள் மற்றும் கண்ணாடிகள் உள்ளிட்டவையும் அதன் பங்காக சிறப்பான தோற்றத்தை மோட்டோ குஸ்ஸி வி85 டிடி பைக்கிற்கு வழங்குகின்றது.

ஆட்டோ எக்ஸ்போவில் தோன்றிய மோட்டோ குஸ்ஸி வி85 டிடி பைக்... இதோட விலை தெரிஞ்சா வாயை மூடவே மாட்டிங்க..!

இந்த பைக்கின் விலை எந்தளவிற்கு உயர்வாக இருக்கின்றதோ அதே அளவிற்கு இதில் சிறப்பம்சங்கள் என்னற்றவையாக இருக்கின்றன. அந்தவகையில், 4.3 இன்ச் கொண்ட டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஸ்மார்ட் போன் இணைப்பிற்கான தனி திரை உள்ளிட்டவை பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அதிலும், இவை பயன்படும் விதம் கூடுதல் புத்துணர்வை வழங்குகின்றது.

ஆட்டோ எக்ஸ்போவில் தோன்றிய மோட்டோ குஸ்ஸி வி85 டிடி பைக்... இதோட விலை தெரிஞ்சா வாயை மூடவே மாட்டிங்க..!

ஸ்மார்ட்போன் இணைப்பு திரை மூலம் இசை, அழைப்பை ஏற்க மற்றும் குறுஞ்செய்தியை காண முடியும். மேலும், நேரடி இருப்பிடம் ஆய்வு உள்ளிட்டவற்றையும் இந்த திரை மூலம் வாகன ஓட்டியால் செய்ய முடியும்.

ஆட்டோ எக்ஸ்போவில் தோன்றிய மோட்டோ குஸ்ஸி வி85 டிடி பைக்... இதோட விலை தெரிஞ்சா வாயை மூடவே மாட்டிங்க..!

இதுமட்டுமின்றி சொகுசான ரைடிங் அனுபவத்திற்காக பைக்கின் முன் பக்க வீலில் 41மிமீ அப்சைட்-டவுண் ஃபோர்க்கும் பின் பக்கத்தில் மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பாதுகாப்பு வசதிக்காக 320 மிமீ டிஸ்க் பிரேக் முன்பக்கத்திலும், பின்பக்கத்தில் 260 மிமீ சிங்கிள் ரோடரும் வழங்கப்பட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் தோன்றிய மோட்டோ குஸ்ஸி வி85 டிடி பைக்... இதோட விலை தெரிஞ்சா வாயை மூடவே மாட்டிங்க..!

இதுபோதாதென்று, டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம், ட்யூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி , க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் ஸ்ட்ரீட், ரெயின், ஆஃப்-ரோடு ஆகிய ரைடிங் ஆப்ஷனும் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த பைக்கில் ரைடிங் என்பது ஓர் அலாதியான இன்பத்தை ஏற்படுத்தும்.

இந்த பைக்கைதான் மோட்டோ குஸ்ஸி தற்போது ஆட்டோ எக்ஸ்போ 2020-இல் காட்சிப்படுத்தியுள்ளது.

Most Read Articles

English summary
Moto Guzzi V85 TT Adventure Motorcycle: First Bike Delivered In India. Read In Tamil.
Story first published: Friday, February 7, 2020, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X