க்ரூஸர் பைக்கை இந்தியாவில் களமிறக்கும் எம்வி அகஸ்ட்டா!

இந்தியாவில் புத்தம் புதிய க்ரூஸர் பைக் மாடலை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு எம்வி அகஸ்ட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அந்நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்துள்ள தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 க்ரூஸர் பைக்கை இந்தியாவில் களமிறக்கும் எம்வி அகஸ்ட்டா!

இத்தாலியை சேர்ந்த எம்வி அகஸ்ட்டா நிறுவனம் பிரிமீயம் ரக பைக் தயாரிப்பில் உலக அளவில் சிறந்து விளங்குகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவு வாடிக்கையாளர் வட்டத்தை சேர்க்க துவங்கி இருக்கிறது. மிரட்டலான எம்வி அகஸ்ட்டா சூப்பர் பைக்குகளுக்கு அதிக வரவேற்பும் இருந்து வருகிறது.

 க்ரூஸர் பைக்கை இந்தியாவில் களமிறக்கும் எம்வி அகஸ்ட்டா!

மேலும், வாடிக்கையாளர் வட்டத்தை விரிவுப்படுத்தும் விதமாக பல புதிய திட்டங்களை எம்வி அகஸ்ட்டா கையில் எடுத்துள்ளது. அதன்படி, புத்தம் புதிய ரக மாடல்களையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 க்ரூஸர் பைக்கை இந்தியாவில் களமிறக்கும் எம்வி அகஸ்ட்டா!

எம்வி அகஸ்ட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிமுர் சர்தாரோவ் அண்மையில் சமூக வலைத்தள பக்கம் வாயிலாக நடந்த கேள்வி நேரம் நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். அப்போது அவர்,"இந்தியாவில் புதிய ரக பைக் மாடல்களையும் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக, க்ரூஸர் ரக மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளது," என்று தெரிவித்துள்ளார்.

 க்ரூஸர் பைக்கை இந்தியாவில் களமிறக்கும் எம்வி அகஸ்ட்டா!

இந்த நிலையில், எம்வி அகஸ்ட்டா நிறுவனத்தின் க்ரூஸர் ரக பைக் மாடலானது பிரிமீயம் ரக மார்க்கெட்டில் மிகவும் தனித்துவம் வாய்ந்த டிசைன் மற்றும் சிறப்பு தொழில்நுட்பங்களுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அந்நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை 5.5 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், புளூடூத் மூலமாக ஸ்மார்ட்ஃபோன் இணைக்கும் வசதிகள் கொடுக்கப்படும்.

 க்ரூஸர் பைக்கை இந்தியாவில் களமிறக்கும் எம்வி அகஸ்ட்டா!

மேலும், அந்நிறுவனத்தின் எம்வி ரைடு என்ற கனெக்டெட் தொழில்நுட்பமும் இந்த க்ரூஸர் பைக்கில் இடம்பெறும் வாய்ப்புள்ளது. இதனால், இந்திய வாடிக்கையாளர்களுக்கு அடுத்த கட்ட அனுபவத்தை வழங்குவதற்கான முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

 க்ரூஸர் பைக்கை இந்தியாவில் களமிறக்கும் எம்வி அகஸ்ட்டா!

எம்வி அகஸ்ட்டா பைக்கில் புதிய பிரேக் சிஸ்டம், செமி ஆக்டிவ் சஸ்பென்ஷன், அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், மோனோ ஷாக் அப்சார்பர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும். முன்புறத்தில் 4 பிஸ்டன் காலிபர்கள் கொண்ட ட்வின் டிஸ்க் பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் சிங்கிள் டிஸ்க் பிரேக் சிஸ்டமும் இடம்பெறும் வாய்ப்புள்ளது.

 க்ரூஸர் பைக்கை இந்தியாவில் களமிறக்கும் எம்வி அகஸ்ட்டா!

நீண்ட தூர பயணத்தை அலுப்பில்லாமல் ஓட்டிச் செல்வதற்கான வசதியான இருக்கை அமைப்பும் இடம்பெற்றிருக்கும். தாழ்வான இருக்கை அமைப்பு, முன்னோக்கிய வடிவமைப்புடன் கால் வைப்பதற்கான ஃபுட் பெக்குகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

 க்ரூஸர் பைக்கை இந்தியாவில் களமிறக்கும் எம்வி அகஸ்ட்டா!

இதனிடையே, கைனெட்டிக் மோட்டோராயல் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் பைக் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை முறித்துவிட்டதாகவும், புதிய நிறுவனத்துடன் இணைந்து இந்திய வர்த்தகத்தை தொடர இருப்பதாகவும் எம்வி அகஸ்ட்டா தெரிவித்துள்ளது.

Most Read Articles

English summary
MV Agusta is said to be launching a new cruiser motorcycle within the next two years. The upcoming motorcycle will be the brand's first cruiser bike offering and is expected to come equipped with a host of new features
Story first published: Monday, June 22, 2020, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X