1 மணி நேரம்கூட முழுசா ஆகல... அதுக்குள்ள எல்லா யூனிட்டும் விற்பனை ஆயிடுச்சு... எந்த நிறுவனத்தின் பைக் தெரியுமா?

பிரபல நிறுவனம் விற்பனைக்கு களமிறக்கிய ஓர் பைக் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் தயாரிக்கப்பட்ட அத்தனை யூனிட்டுகளுமே விற்பனையாகியுள்ளன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

1 மணி நேரம்கூட முழுசா ஆகல... அதுக்குள்ள எல்லா யூனிட்டும் விற்பனை ஆயிடுச்சு... எந்த நிறுவனத்தின் பைக் தெரியுமா?

எம்வி அகுஸ்டா நிறுவனம், அதன் ஸ்பெஷல் எடிசன் பைக்கான சூப்பர்வெலோஸ் ஆல்பைன் மாடலின் அனைத்து யூனிட்டுகளுமே விற்பனையாகிவிட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதனை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே எம்வி அகுஸ்டா தயாரித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. அவ்வாறு, தயாரிக்கப்பட்ட 110 யூனிட்டுகளை விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்திருக்கின்றது.

1 மணி நேரம்கூட முழுசா ஆகல... அதுக்குள்ள எல்லா யூனிட்டும் விற்பனை ஆயிடுச்சு... எந்த நிறுவனத்தின் பைக் தெரியுமா?

முழுமையாக ஒரு மணி நேரம்கூட இதற்கு எடுத்துக் கொள்ளவில்லை என கூறப்படுகின்றது. எம்வி அகுஸ்டா நிறுவனம் இந்த பைக்கை புதிய லக்சூரி கார்களுக்கு இணையான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதற்கு இந்திய மதிப்பில் ரூ. 32.70 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டது. இத்தகைய விலையுயர்ந்த பைக்கே விற்பனைக்கு வந்த சில நிமிடங்களில் விற்று தீர்ந்திருக்கின்றன.

1 மணி நேரம்கூட முழுசா ஆகல... அதுக்குள்ள எல்லா யூனிட்டும் விற்பனை ஆயிடுச்சு... எந்த நிறுவனத்தின் பைக் தெரியுமா?

எம்வி அகுஸ்டா நிறுவனம் இந்த பைக்கை அல்பைன் ஏ110 சூப்பர் காரை தழுவியே உருவாக்கியிருக்கின்றது. ஆகையால், இந்த சூப்பர் காரில் தென்படக்கூடிய சில பிரத்யேக அம்சங்களை புதிய லிமிடெட் எடிசன் பைக்கிலும் நம்மால் காண முடியும். இவ்வாறு சிறப்பு கலவையில் உருவாக்கப்பட்ட பிரத்யேக தயாரிப்பு என்பதனாலயே இப்பைக்கை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்க எம்வி அகுஸ்டா திட்டமிட்டது.

1 மணி நேரம்கூட முழுசா ஆகல... அதுக்குள்ள எல்லா யூனிட்டும் விற்பனை ஆயிடுச்சு... எந்த நிறுவனத்தின் பைக் தெரியுமா?

எம்வி அகுஸ்டா மற்றும் அல்பைன் ஆகிய இரு நிறுவனங்களுமே ஃபிரெஞ்சு நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் மிக பழமையான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஆகும். இவர்களின் கூட்டணியிலேயே புதிய லிமிடெட் எடிசன் சூப்பர்வெலோஸ் அல்பைன் பைக் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டது. ஆகையால், முன்னதாக விற்பனைக்கு வந்த அகுஸ்டாவின் எந்தவொரு தயாரிப்புகளிலுமே இல்லாத சிறப்பு வசதிகளை இதில் காண முடிகின்றது.

1 மணி நேரம்கூட முழுசா ஆகல... அதுக்குள்ள எல்லா யூனிட்டும் விற்பனை ஆயிடுச்சு... எந்த நிறுவனத்தின் பைக் தெரியுமா?

அந்தவகையில், மிகவும் தனித்துவமான நீலம் மற்றும் அகோ சில்வர் நிறத்தில் இப்பைக் காட்சியளிக்கின்றது. இத்துடன், சிறப்பு பேட்ஜ்களும் இப்பைக்கில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. மேலும், தொழில்நுட்பட வசதிகளாக முழு இணைப்பு வசதி மற்றும் ஜிபிஎஸ் டிரைக்கிங் கருவி உள்ளிட்டவை இப்பைக்கில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

1 மணி நேரம்கூட முழுசா ஆகல... அதுக்குள்ள எல்லா யூனிட்டும் விற்பனை ஆயிடுச்சு... எந்த நிறுவனத்தின் பைக் தெரியுமா?

இத்தகைய சிறப்பு வசதிகளைப் பெற்றிருக்கும் தனித்துவமான பைக்கில் 798சிசி திறன் கொண்ட 3 சிலிண்டர் எஞ்ஜினையே எம்வி அகுஸ்டா பயன்படுத்தியுள்ளது. இது அதிகபட்சமாக 147 எச்பி பவரை 13,000 ஆர்பிஎம்மில் வெளியேற்றும். மேலும், 10,100 ஆர்பிஎம்-ல் 88 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இப்பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 240 கிமீ ஆகும்.

1 மணி நேரம்கூட முழுசா ஆகல... அதுக்குள்ள எல்லா யூனிட்டும் விற்பனை ஆயிடுச்சு... எந்த நிறுவனத்தின் பைக் தெரியுமா?

இதுபோன்ற பல்வேறு சிறப்பு வசதிகளை இது பெற்றிருக்கின்ற காரணத்தினாலயே விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே தயாரிக்கப்பட்ட ஒட்டுமொத்த யூனிட்டுகளும் விற்று தீர்ந்திருக்கின்றன. இது எம்வி அகுஸ்டா சூப்பர்வெலோஸ் அல்பைன் பைக்கிற்கு கிடைத்த சிறந்த அங்கீகாரமாக பாரக்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
MV Agusta Superveloce Alpine All 110 Units Sold Out Within Hours. Read In Tamil.
Story first published: Saturday, December 19, 2020, 11:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X