பிரத்யேகமான க்ளட்ச் சிஸ்டத்துடன்... எம்வி அகுஸ்டாவின் 2020 புருட்டேல் 800 எஸ்சிஎஸ்...

எம்வி அகுஸ்டா நிறுவனம் புருட்டேல் 800 எஸ்சிஎஸ் பைக் மாடலை உலகளவில் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த பைக்கை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

பிரத்யேகமான க்ளட்ச் சிஸ்டத்துடன்... எம்வி அகுஸ்டாவின் 2020 புருட்டேல் 800 எஸ்சிஎஸ்...

ஸ்ட்ரீட்ஃபைட்டர் ரக பைக் மாடலான புருட்டேல் 800 எஸ்சிஎஸ்-ல் முக்கிய அம்சமாக ஸ்மார்ட் க்ளட்ச் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிஸ்டம் முதன்முதலாக 2018ல் டுரிஸ்மோ வெலோஸ் 800 பைக் மாடலில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.

பிரத்யேகமான க்ளட்ச் சிஸ்டத்துடன்... எம்வி அகுஸ்டாவின் 2020 புருட்டேல் 800 எஸ்சிஎஸ்...

சிஎஸ்சி 2.0 என அழைக்கப்படும் இந்த சிஸ்டம், தன்னிச்சையாக பைக்கின் இயக்கம் நிறுத்தத்திற்கு வரும்போது க்ளட்சை முடுக்கிவிட்டு அத்தகைய நிறுத்தத்தை தடுக்கும். ரைடர் பைக்கின் கழுத்து பகுதி மற்றும் எதிர்புறமாக ஆக்ஸலரேட்டரை திருகும்போது எஸ்சிஎஸ் மீண்டும் பயன்பாட்டிற்கு வரும்.

பிரத்யேகமான க்ளட்ச் சிஸ்டத்துடன்... எம்வி அகுஸ்டாவின் 2020 புருட்டேல் 800 எஸ்சிஎஸ்...

கியர்களை மாற்றுவதற்கு கால் லிவரை பயன்படுத்துவதும், க்ளட்ச்சின் பயன்பாடும் இந்த சிஸ்டத்தால் தேவைப்படாமல் போகும். அதேநேரம் மற்ற வழக்கமான பைக்குகளை போல் ரைடர் கியர்களை மாற்றுவதற்கும் இந்த ஸ்மார்ட் க்ளட்ச் அனுமதிக்கிறது.

பிரத்யேகமான க்ளட்ச் சிஸ்டத்துடன்... எம்வி அகுஸ்டாவின் 2020 புருட்டேல் 800 எஸ்சிஎஸ்...

இதனுடன் கூடுதலாக இரு-வழி க்யூக்‌ஷிஃப்டரையும் புருட்டேல் 800 எஸ்சிஎஸ் பைக் பெற்றுவந்துள்ளது. இந்த க்ளட்ச் சிஸ்டத்தை தவிர்த்து பார்த்தோமேயானால் இந்த 800சிசி பைக்கை இரு புதிய பெயிண்ட் தேர்வுகளில் எம்வி அகுஸ்டா நிறுவனம் அலங்கரித்துள்ளது.

பிரத்யேகமான க்ளட்ச் சிஸ்டத்துடன்... எம்வி அகுஸ்டாவின் 2020 புருட்டேல் 800 எஸ்சிஎஸ்...

இந்த பெயிண்ட் தேர்வுகளில் ஷாக் பேர்ல் சிவப்பு உடன் அவியோ க்ரே மற்றும் அகோ சில்வர் உடன் டார்க் மெட்டாலிக் க்ரே உள்ளிட்டவை அடங்குகின்றன. இவை தவிர்த்து பைக்கின் மற்ற இயந்திர மற்றும் காஸ்மெட்டிக் பாகங்கள் அப்படியே தான் தொடர்ந்துள்ளன.

பிரத்யேகமான க்ளட்ச் சிஸ்டத்துடன்... எம்வி அகுஸ்டாவின் 2020 புருட்டேல் 800 எஸ்சிஎஸ்...

இத்தாலியை சேர்ந்த பைக் ப்ராண்ட்டான எம்வி அகுஸ்டா புருட்டேல் 800 எஸ்சிஎஸ் பைக்கின் விலை குறித்த விபரங்கள் எதையும் தற்போதைக்கு வெளியிடவில்லை. இவை அனைத்து விரைவில் நடைபெறவுள்ள பைக்கின் சர்வதேச அறிமுகத்தின்போது வெளியிடப்படலாம்.

பிரத்யேகமான க்ளட்ச் சிஸ்டத்துடன்... எம்வி அகுஸ்டாவின் 2020 புருட்டேல் 800 எஸ்சிஎஸ்...

இந்திய சந்தையை பொறுத்தவரையில் எம்வி அகுஸ்டா நிறுவனம் தனது தயாரிப்புகளை விற்பனை செய்ய புதிய பார்ட்னரை தேடி வருகிறது. ஒருவழியாக இந்தியாவில் புருட்டேல் 800 எஸ்சிஎஸ் பைக் அறிமுகமானாலும் அதன் எக்ஸ்ஷோரூம் தற்போதைய புருட்டேல் 800 பைக்கை காட்டிலும் சற்று அதிகமாகவே இருக்கும்.

Most Read Articles

English summary
2020 MV Agusta Brutale 800 SCS revealed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X